நடிகை கீர்த்தி சுரேஷ் 600 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்திருந்ததாக தகவல். அந்த படத்துக்கு பதிலாக அவர் நடித்த மற்றொரு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இது குறித்த தகவல்கள் சினிமா அரங்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படத்தை அட்லி தயாரித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘பேபி ஜான்’ திரைப்படம். இதில் ஹீரோவாக விஜய் நடித்த கேரக்டரில் இளம் நடிகர் வருண் தவான் நடித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தி சினிமாவில் தனது முதல் படமே தோல்வியில் முடிந்ததால் ‘பேபி ஜான்’ படத்தின் ரிசல்ட் கீர்த்தி சுரேஷுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
இதற்கிடையே ஹிந்தியில் வெளியாகி தற்போது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ள ‘சாவா’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் கீர்த்தி சுரேஷுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் ‘பேபி ஜான்’ படத்தில் நடிப்பதற்காக ‘சாவா’ படத்தை தவிர்த்ததாக தகவல் தெரிகின்றன. அவருக்கு பதிலாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ‘சாவா’ திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.