இந்த நடிகை தனது திரைப்பட பயணத்தை ரூ.10 சம்பளத்துடன் தொடங்கி, பல்வேறு மொழிகளில் 300க்கும் மேல் படங்களில் நடித்தார்.
தனது முதல் படத்தில் 10 ரூபாய் சம்பளம் வாங்கியவர் பின்னாட்களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவிக்கு டஃப் கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, மராத்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர். இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் இந்த நடிகை.
இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக ஜெயபிரதாவுக்கு 10 ரூபாய் சம்பளமாக கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். சர்கம் (1979), ஊரிக்கி மொனகாடு (1981), கம்சோர் (1982), கவிரத்ன காளிதாசா (1983), சாகர சங்கமம் (1983), தோஹ்ஃபா (1984), ஷராபி (1984), மக்ஸாத் (1984), சஞ்சோக் (1985), அக்ரி ராஸ்தா (1986), சிம்ஹாசனம் (1986), சிந்தூர் (1987), சம்சாரம்(Samsaram) 1988, எலான்-இ-ஜங் (1989), ஆஜ் கா அர்ஜுன் (1990), தானேதார் (1990), மா, ஹப்பா (1999), மற்றும் சப்தவேதி (2000) ஆகியவை அவர் நடித்த சிறந்த படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
ரஜினி – கமல் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் அவர் நடித்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமிதாப் பச்சன், ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
ஆனால், நடிகை ஜெயபிரதா தொடக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர் மருத்துவராக வேண்டும் என்றே விரும்பி உள்ளார். நடிகை ஜெயபிரதா தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாட்டாவை(Srikanth Nahata) மணந்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே சந்திரா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருந்தனர்.