கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று கூறப்படும் 36 வயதான ஸ்ரீதரன் நெரஞ்சன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றவாளி டுபாயில் இருந்து இன்று காலை இலங்கை வந்துள்ளது.

இதன்போது விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பழனி ஷிரான் குளோரியன் எனப்படும் கொச்சிக்கடை ஷிரானின் நெருங்கிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

19.08.2025 அன்று பேலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை செய்தும் மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றமைக்காக டிங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version