கம்பஹாவில் உத்தரவை மீறி பயணித்த வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் வேன் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த வேன் இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸா் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.