வாஷிம் தாஜுதீனின் கொலையில் அருண விதானகமகேவுக்கு(மித்தெனிய கஜ்ஜா) தொடர்பு இருப்பதாக தனது மகன் கடந்த 1 ஆம் திகதி சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிக் காட்சி குறித்து அருண விதானகமகேவின் மனைவி சில விடயங்களை ஊடகமொன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அருண விதானகமகேவின் மகன் வெளியிட்ட முகநூல் பதிவானது ராஜபக்ளின் அழுத்தத்தால் இடம்பெற்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆரம்பக்கல்வியை முறையாக பெறாத தனது மகன் அத்தகைய இடுகைகளை எழுத வாய்ப்பில்லை என்றும், வேறு யாரோ எழுதிய ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டதாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கபில திசாநாயக்கவின் மகளுடன் தனது மகனுக்கு காதல் உறவு இருப்பதாகவும், தாஜுதீனின் கொலை குறித்து தனக்குத் தெரியாதபோதும் கபில திசாநாயக்க என்ற நபர் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த காதல் விவகாரம் காரணமாக கபில திசாநாயக்க தன்னையும் தனது குழந்தைகளையும் கொலை செய்வதாக மிரட்டியதாக கேள்விப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கணவரின் உறவினர்கள் மூலம் மகனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று தகவல்களைப் பெற அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும், கபில திசாநாயக்கவிடமிருந்தோ அல்லது ராஜபக்ச குடும்பத்தில் வேறு யாரிடமிருந்தோ பணம் பெற்றாரா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாஜுதீனின் கொலை தொடர்பாக தான் அளித்த முக்கியமான சாட்சியத்தை அற்பமாக்குவதே தனது மகன் அத்தகைய அறிக்கையை வெளியிட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

தனது மகன் இந்துவர விதானகமகேவை இதுபோன்ற விடயங்களுக்குப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது மற்றும் கடுமையான குற்றம் என்று கூறியுள்ளார்.

அதன்படி, தனது மகளை ஊடகங்களில் பயன்படுத்துவது குறித்து உடனடி சட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்துவர விதானகமகே பிறந்த பிறகு, தாங்கள் கிராமத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அருண விதானகமகேவை மகிந்த ராஜபக்ச மற்றும் கபில திசாநாயக்க ஆகியோர் பாதுகாப்பு அமைச்சில் ஓட்டுநராகப் பணியமர்த்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் கபில திசாநாயக்க தனது கணவர் கொழும்புக்கு வரும்போதெல்லாம் அவருடன் பயணம் செய்ததாக விதானகமகேவின் மனைவி கூறியுள்ளார்.

இதன்படி கபில திசாநாயக்க கொழும்பிற்கு வெளியே உத்தியோகபூர்வ கடமைகளுக்காக ஒரு அமைச்சகத்திலிருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு, அருண விதானகமகேவுடன் முச்சக்கர வண்டியில் வந்து வீடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி தாஜுதீன் கொலை வழக்கில் அருண விதானகமகேவின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவரை அடையாளம் காண முன்வராதது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை அருண விதானகமகேவின் சகோதரர்களிடமிருந்து ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்குச் செல்லத் தயங்குவதாலும், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் கபில திசாநாயக்க மீதான பயத்தாலும் தாஜுதீன் தரப்பு முன்வருவதில்லை என்று நான் நினைக்கிறேன், என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version