நியூயார்க்: இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை (West Bank) தன்னுடன் இணைத்தால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமரிடம் இந்த கருத்தை டிரம்ப் கடந்த அக்டோபர் 15 அன்று தொலைபேசி மூலம் தெரிவித்ததாக டைம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ ஆகியோரும் இஸ்ரேல் மேற்குக் கரையை இணைக்கக் கூடாது என எச்சரித்திருந்தார்கள்.

என்ன தான் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பாலஸ்தீன போர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மேற்கு கரையை இணைக்க ஒரு நாளும் ஒப்புக்கொண்டது கிடையாது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரில் இஸ்ரேல் பக்கம் நின்ற போதிலும், அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது.

ஏனெனில் இஸ்ரேல் என்ற ஒற்றை நாட்டை வைத்து தான் அரபு நாடுகளை தன் பக்கம் கொண்டுவர முயற்சிக்கிறது. தற்போது காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா கடும் முயற்சி எடுத்து வருகிறது.

மேற்கு கரை ஆனால் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேல் உடன் இணைக்கும் சட்ட மசோதாவை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மேற்குக் கரையை இணைத்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று டைம் செய்தி நிறுவனம் கேட்டது.

அதற்கு டிரம்ப் கூறுகையில், “அது நடக்காது. அது நடக்காது, ஏனென்றால் நான் அரபு நாடுகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன்.

இப்போது இஸ்ரேல் அதைச் செய்ய முடியாது. எங்களுக்கு அரபு நாடுகளின் பெரும் ஆதரவு உள்ளது. ஒருவேளை இஸ்ரேல் மேற்கு கரையை தன் நாட்டுடன் இணைத்தால், , இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவு அனைத்தையும் இழக்கும் என்றார்.

 

சவுதி அரேபியா இணையும் மேலும், சவுதி அரேபியா இந்த ஆண்டின் இறுதிக்குள், இஸ்ரேலுடன் அரபு நாடுகள் உறவுகளை இயல்பாக்கும் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையும் என்று தான் நம்புவதாகவும் டிரம்ப் டைம் பத்திரிகையிடம் கூறினார்.

அப்போது பத்திரிக்கையாளர், சவுதி அரேபியா அந்த காலக்கெடுவுக்குள் இணையும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார்.

அப்போது டிரம்ப், “ஆம், நான் நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். “விரைவில் பாருங்கள், முன்பு அவர்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தது.

அவர்களுக்கு காசா பிரச்சனை இருந்தது,அடுத்து ஈரான் பிரச்சனை இருந்தது. இப்போது அவர்களுக்கு அந்த இரண்டு பிரச்சனைகளும் இல்லை.. எனவே சவுதி அரேபியா இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கும்” என்று கூறினார்.

 

ஹமாஸ் விரும்பிய கைதி

காசா போரில் அமைதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உயர்மட்ட பாலஸ்தீனிய கைதி மர்வன் பார்கூதியை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமா என்பது குறித்து தான் ஒரு முடிவு எடுக்கப் போவதாகவும் டிரம்ப் கூறினார்.

ஹமாஸுக்குப் போட்டியாளரான ஃபதா இயக்கத்தைச் சேர்ந்தவர் தான் மர்வன் பார்கூதி. இவரைத்தான் காசா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ் விரும்பியிருக்கிறது.

இஸ்ரேல் திட்டம்
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப், தான் ஏற்படுத்திய தற்காலிக காசா போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த, துணை அதிபர் வான்ஸ தலைமையில் உயர் அதிகாரிகளின் குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், வான்ஸ் தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரூபியோ வந்தபோது, மேற்குக் கரையை இணைப்பதற்கு வழிவகுக்கும் இரண்டு மசோதாக்களை இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது.

வான்ஸ் கோபம்
இதை கேள்விப்பட்ட அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், இது ஒரு மிகவும் முட்டாள்தனமான அரசியல் வேலை என்றும், தனிப்பட்ட முறையில் இது தனக்கு சற்று அவமானத்தை அளிக்கிறது என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல் ரூபியோ அமெரிக்காவில் இருந்து புறப்படும்போதும், இஸ்ரேல் மேற்குக் கரையை இணைக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றக்காரர்களின் வன்முறை ஆகியவை காசா போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக வான்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான், டிரம்ப், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்தால் அமெரிக்காவின் ஆதரவை இழக்கும் என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version