• Kyiv- மின்சாரக்கடடமைப்புகள் மீது ரஷ்யா தாக்கியதால் உக்கிரைன் தலைநகரமக்கள் கடும் குளிரால் பாதிப்பு
ரஷ்யா, உக்ரைனில் நடத்தப்பட்ட பெரும் அளவிலான இரவு தாக்குதலின் ஒரு பகுதியாக “ஓரெஷ்னிக்” (Oreshnik) எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு கீவில் (Kyiv) நடைபெற்ற தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்தனர். பல மணி நேரங்களாக சத்தமான வெடிப்புகள் கேட்டதாகவும், வெடிப்புகளால் வானம் ஒளிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாஸ்கோ இந்த ஓரெஷ்னிக் ஏவுகணையை பயன்படுத்தியிருப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன், 2024 நவம்பரில் மத்திய நகரமான ட்னிப்ரோ (Dnipro) மீது இது முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.
ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், டிசம்பர் இறுதியில் அதிபர் வ்லாதிமிர் புதினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என கீவ் மறுத்துள்ளது.
ஓரெஷ்னிக் ஏவுகணையின் இலக்கு என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவாக கூறவில்லை. இருப்பினும், நள்ளிரவுக்கு சற்றுமுன் (22:00 GMT) மேற்கு நகரமான ல்விவ் (Lviv) நகரின் புறநகரங்களில் பல வெடிப்புகள் ஏற்பட்டதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியும், உக்ரைன் அதிகாரிகளும், போலந்து எல்லையிலிருந்து சுமார் 60 கிமீ (40 மைல்கள்) தொலைவில் உள்ள ல்விவில் உள்ள கட்டமைப்புகளை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதாக உறுதிப்படுத்தினர்.

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லைக்கு அருகில் இப்படியான தாக்குதல் நடத்தப்படுவது, ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்; இது அட்ட்லாண்டிக் கூட்டணிக்கான ஒரு சோதனை,” என்று உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) கூறினார்.
டிசம்பரில் அதிபரின் இல்லத்தை குறிவைத்ததாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பாக, “[புதினின்] சொந்த மாயக்கற்பனைகளுக்கான பதிலாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
அந்த ட்ரோன் தாக்குதல் உண்மையில் நடந்ததா என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாகவே கடுமையான சந்தேகம் வெளியிட்டிருந்தது. கடந்த வாரம் டொனால்ட் ட்ரம்ப் கூட அப்படியான தாக்குதல் எதுவும் நடந்ததாக தான் நம்பவில்லை என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காஜா காலாஸ் (Kaja Kallas), ரஷ்யாவின் ஓரெஷ்னிக் தாக்குதல் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டதாக கூறினார்.
“புதின் சமாதானத்தை விரும்பவில்லை. தூதரக முயற்சிகளுக்கு ரஷ்யாவின் பதில் இன்னும் அதிக ஏவுகணைகளும் அழிவும்தான். உக்ரைன் இதை முறியடிக்க நாம் உதவும் வரை, இவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறும் உயிர்க்கொல்லி ரஷ்ய தாக்குதல்கள் தொடரும்,” என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார்.
செலென்ஸ்கி கூறுகையில், ஓரெஷ்னிக் தவிர, ஒரே இரவில் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆற்றல் நிலையங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளையும் குறிவைத்தன. அதேபோல், 22 க்ரூஸ் ஏவுகணைகளும் 242 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அவற்றில் ஒன்று கத்தார் தூதரக கட்டிடத்தை சேதப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
குளிர் காலநிலையின் போது, “சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை எதிர்த்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன” என அவர் குற்றம் சாட்டினார். மேலும், வெப்பமும் மின்சாரமும் மீட்டெடுக்க தேவையான அனைத்தும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரவு ல்வீவ் மற்றும் மேற்கு உக்ரைனின் பிற பகுதிகள் தாக்குதலுக்குள்ளான நிலையில், கீவ் மீது நடைபெற்ற தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.
கீவ் நகரில் சேதமடைந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்திற்குச் செல்லும் போது ஒரு பராமெடிக் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருந்தார். நகரின் மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோவும், அதிபர் செலென்ஸ்கியும் இது “டபுள்-டாப்” தாக்குதல் என கூறினர் — அதாவது, முதல் தாக்குதலுக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவ வரும்போது இரண்டாவது தாக்குதல் நடத்தப்படுவது.
ட்னிப்ரோ நதியின் கிழக்கு கரையில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்களும், நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு உயர்மாடி கட்டிடமும் இலக்காக்கப்பட்டன.
அடுத்த நாள் காலை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியபோது, சேதமடையாத வணிக நிறுவனங்கள் வழக்கம்போல திறந்திருந்தன.
அழிக்கப்பட்ட குடியிருப்பிலிருந்து சில தளங்கள் கீழே உள்ள ஒரு காபி கடை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தது. ரஷ்ய ட்ரோனின் உடைந்த பாகங்கள் — அதன் இறக்கைகள் மற்றும் இயந்திரம் உட்பட — வெளியே நடைபாதையில் சிதறிக் கிடந்தன.
மற்றொரு இடத்தில், அமைதியான குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது மாடியில் ஏவுகணை தாக்கிய வட்டமான, கருகிய நுழைவுத் துளை தெளிவாகக் காணப்பட்டது.
கடுமையான குளிர்காலத்தின் நடுவே நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த வார இறுதியில் -15°C (5°F) வரை வெப்பநிலை குறையும் என கீவ் எதிர்பார்க்கிறது.
வெள்ளிக்கிழமை, கீவ் குடிமக்கள் இயன்றால் தற்காலிகமாக நகரை விட்டு வெளியேறி, வெப்பமான இடங்களைத் தேடுமாறு கிளிட்ஸ்கோ அறிவுறுத்தினார்.
“பெரும் எதிரி தாக்குதலால் தலைநகரின் முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததன் காரணமாக, கீவ் நகரில் உள்ள சுமார் 6,000 — அதாவது பாதி குடியிருப்பு கட்டிடங்கள் — தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதால மக்கள் குளிரில் வாழ்வதாக,” என்று அவர் சமூக ஊடகங்களில் எழுதினார்.
இப்போது கீவ் நகரின் வீதிகள், மின்சாரத்திற்காக வணிக நிறுவனங்கள் நம்பியிருக்கும் டீசல் ஜெனரேட்டர்களின் இடையறாத சத்தத்தால் நிரம்பியுள்ளன. ஆனால் பல குடியிருப்புகள் மைய வெப்பமூட்டும் அமைப்புகளை சார்ந்திருப்பதால், அவற்றை மீட்டெடுப்பது அதிக நேரம் எடுக்கக்கூடும்.
மின்நிலையங்களை இலக்காக்குவது இந்தப் போரின் ஒரு தொடர்ச்சியான அம்சமாக மாறியுள்ளது. மில்லியன்கணக்கான மக்களை மின்சாரம் மற்றும் வெப்பமின்றி விடும் ரஷ்யாவின் நீடித்த ஆற்றல் உட்கட்டமைப்பு தாக்குதல்களுக்கு, உக்ரைன் தற்போது அதேபோன்று பதிலளித்து வருகிறது.
வியாழக்கிழமை இரவு, உக்ரைன் மீது மாஸ்கோ தாக்குதல் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், உக்ரைன் மேற்கொண்ட உட்கட்டமைப்பு குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் அரை மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்ததாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் வடக்கே உள்ள ஓர்யோல் நகரில் உள்ள ஒரு ரஷ்ய மின்நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதால், அங்கு நீர் மற்றும் வெப்ப விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.