ilakkiyainfo

ilakkiyainfo

தமிழரசு கட்சியானது தமிழர்களினின் இருப்பினை கலைக்கும் கட்சியாகின்றதா? – செ.கவிச்சரன் (கட்டுரை)

தமிழரசு கட்சியானது தமிழர்களினின் இருப்பினை கலைக்கும் கட்சியாகின்றதா? – செ.கவிச்சரன் (கட்டுரை)
January 07
03:45 2018

மண்னாசை துறந்து பொன்னாசை போரில் தமிழரசு கட்சியின் தலைவர்கள்!

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து ஒரு ஆண்டிற்கு பின்னர்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எஸ்.ஜெ.வி. செல்வநாயகம்,  குமாரசிங்கம் வன்னியசிங்கம் மற்றும் முருகேசு விஜயரட்ணம் நாகநாதன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட   தமிழரசு கட்சியானது தமிழ் மக்களை அழிக்கும் கட்சியாக உருவெடுத்துள்ளதா என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.

ஈழத்து காந்தி என்றும் தந்தை செல்வா என்றும் ஈழத்து தமிழ் மக்களினால் மரியாதையாகவும் உண்மையாகவும் போற்றப்பட்ட தலைவரினால் உருவாக்கப்பட்ட கட்சியானது தமிழர்களை உருக்குலைக்கும் கட்சியாக செயற்பட ஆரம்பித்து உள்ளது.

அத்தோடு இந்த கட்சியானது திரைமறைவில் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை விலைபேசும் கட்சியாக செயல்படுகின்றது என்பதினை அறிகின்றபோது மிகவும் வேதனையாக இருகின்றது.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று தமிழ் மூதாட்டியின் முதுமொழிக்கு மதிப்பளித்து தங்கள் நலன்களுக்காக செயப்படும் தமிழரசுகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் புல்லுக்கு போகின்ற அளவு 10 வீதமாவது தம்மை வெல்ல வைத்த மக்கள் குறித்து கவலை கொள்வதாக தெரியவில்லை.

எவ்வாறு புலிகளின் தலமை ஈழத் தமிழ்மக்களுக்காக பேசுகின்ற உரிமை தமக்கே உரித்தானது என்று ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நடந்து கொண்டு விடுதலை போராட்த்தினை எவ்வாறு சிக்கலுக்கு உள்ளாக்கி தாமும் சிதைந்து போனார்களோ அவ்வாறு தமிழரசு கட்சியும் நடந்து கொள்ளுகின்றது.

தமிழ் மக்கள் தமது அங்கீகாரங்களுக்காவும்,   நியாயமான உரிமைகளை பெறுவதற்காவும் எவ்வளவு கொடுமைகளையும் இழப்புக்களை இழக்க நேரிட்டது என்பதினை கண்கூடாத பார்த்ததின் பின்னர் தமது கட்சி நலன்களுக்காகவும், நாடாளுமன்ற சுகபோகங்களை அனுபவிப்பதற்காவும் மிகவும் கேவலமாக  சம்மந்தரும்,  சேனாதியும் நடந்து கொள்ளு கின்றார்கள்.

இவர்கள் இருவரும் சுமந்திரன் போன்று தமிழ் மக்களின் போராட்ட வரலாறு தெரியாது நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. தந்தை செல்வா காலம் தொட்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், அவமரியாதைகளையும் பார்த்து வந்தவர்கள்.

அது மட்டும் அல்லாது சிங்கள தலமைகள் எவ்வாறு தமிழ் தலமைகளை ஏமாற்றி வந்தார்கள் என்பதோடு இரண்டு பிரதான பெரும்பான்மை கட்சிகளுடன் தந்தை செல்வா அவர்கள் செய்துகொண்ட ஒப்பத்தங்களுக்கு என்ன நடந்த்தது என்பதினை கண்கூடாக பார்த்தும் வந்தவர்கள்.

வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடைந்த இவர்கள் இருவரும் பெரும்பான்மை கட்சிகளை நம்புகின்றார்கள் என்பதினை நம்ப முடியாது.

அப்படியானால் இடைக்கால அரசியல் தீர்வில் தமிழ் மக்களுக்கு இடர்தரும்படியான தீர்வுகள் உள்ளடங்கியிருக்காது என்று தமிழ் மக்களை நம்புமாறு ஏப்படி கேட்டுக்கொள்வார்கள்.

எதிர்கட்சி தலைவர் பதவி நாளுமன்ற ஆசனம் ஆகியவ்ற்றினால் கிடைக்கும் சலுகைகளுக்காகவும் சுகபோக வாழ்க்கைக்காவும் தமிழ் மக்களின் இருப்புக்களை இல்லாது செய்யும் நடவடிக்கைகளுக்கு இவர்கள் துணை போகின்றார்கள்.

திரைமறைவில் பேசியவர்கள் பணப்பொதிகளுக்குள் அடங்கியதோடு மக்களையும் குழப்பியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பாக அரசானது வடகிழக்கு மாகாண அபிவிருத்திக்கென இரண்டு கோடி ரூபாயினை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கியிருந்தது.

இதனை பெற்றுக்கொண்ட தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து அறியப்படுத்தாலும் இருந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களினூடாக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய உதவிதொகையினை தமது கட்சியினை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பேற்றுக் கொடுத்துவிட்டு ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ள கூடாது என்பதற்காக அதனை மறைத்தும் உள்ளார்கள்.

வட மாகாணத்தில் சேனாதிராஜா, சுமந்திரன்,  சரவணபவன் மற்றும் சிறீதரன் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதனை பின்னர் அறிந்து கொண்ட ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேட்ட பொழுது பிரதமர் அவர்களை வியப்பாக பார்த்துள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஊடகங்களுக்கான கட்சியாகவே பாவிக்கப்பட்டு வருகின்றது”.

இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலேயே போட்டியிடுகின்ற காரணத்தினால் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கே இவ் வகையான உதவி தொகைகளை அரசு அறிவிப்பது  வழக்கமாகும்.

அரசு வழங்கு உதவி தொகையினை தமது கட்சி தவிர்ந்த ஏனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேற்றுக் கொளவார்களாயின் அதன் உதவி மூலம் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிடுவார்கள் எனற காரணத்திற்காக மிகவும் கேவலமாக சேனாதிராஜா நடந்து கொண்டுள்ளார்.

ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வாக்கு பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசின் உதவி மக்களுக்கு சென்றைடையாதவாறு மாவை நடந்து கொண்டமை மிகவும் வருந்தக்கதும், கேவலமான செயலுமாகும்.

நான் எனது மாணவர் பிராயத்தில் அவர் இளைஞ்ஞராக இருந்த காலத்தில் அவரின் உயரத்தினையும்,  கம்பீரத்தினையும் கண்டு ரசித்தது உணடு.

காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்று எழுச்சி மிக்க பேச்சுகளை பேசும் ஆற்றல் இவருக்கு இல்லாத போதும் அவரின் கம்பீரம் விழித்து பார்க்க தோன்றும்.

உயரத்திக்கு ஏற்ப அவரின் உள்ளம் விசாலமாக இல்லை என்பதினை பின்னர் அறிந்த கொண்டாலும், வயதும் அனுபவமும் முதிர்ந்த காலத்தில் இவர் இவ்வாறு முதிர்ச்சி இல்லாது நடந்து கொள்வது தலைமக்கு ஏற்ப பண்புகளாக பார்க்க முடியவில்லை.

எமது மக்கள் பட்ட துன்பங்கள், கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்ததின் பின்னர் தமது கட்சிக்கு இருக்கும் செல்வாக்கினை உள்ளூராச்சி தேர்தலில் காட்ட வேண்டும் என்று கைமடித்து பலம் காட்ட முயற்சிப்பது சினிமாதனமா சின்னபுத்தியாகும்.

எமது மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அரசியல் தீர்வு கிடைக்காது போனால் காலப்போகில் ஈழத் தமிழ் இனம் ஒன்று வடகிழக்கில் வராலாற்று ரீதியாக வாழ்ந்தமைக்கான அடையாளமே இல்லாது போய்விடும்.

இதனை இவர்கள் கருத்தில் கொள்ளாது நடப்பார்களாயின் இந்த சுயநலபோக்கினை விரைவில் மக்கள் புரிந்து கொளவர்கள். கட்சியின் நலன்களுக்காகவும், தமது அரசியல் இருப்பிற்காகவும் அதனூடாக கிடைக்கும் சுகபோகங்களுக்காவும் அரசிற்கு துணைபோய் இடைக்கால தீர்வு என்று மக்களை ஏமாய்த்துக்கொண்டு தமது காலத்தினை போக்குவார்களாயின் அவர்கள் தடங்கள் கூட தமிழ்மக்கள் மத்தியில் காணமல் போய்விடும்.

கடந்த காலத்தில் தம்மை கதாநாயகர்களாக காட்டிக் கொண்டவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்பதினை அவர்கள் மறக்கலாகாது.

sampanthan1  தமிழரசு கட்சியானது தமிழர்களினின் இருப்பினை கலைக்கும் கட்சியாகின்றதா? - செ.கவிச்சரன் (கட்டுரை) sampanthan1அயல் நாட்டின் ஊடாக அழுத்தம் கொடுத்தால் சிங்கள மக்கள் கோபம் அடைவார்கள், அவர்களை கௌரவப்படுத்திக்கொண்டு நாம் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது என்று சம்மந்தர் புதிய கதை விடுகின்றார்.

வட மாகாண முதல்வர் கூறியது போன்று அவர்கள் கோபித்து கொள்ளவார்கள் என்பதற்காக நாம் உண்மையினையும், உரிமையினையும் விட்டுக் கொடுத்துவிட முடியாது.

அரசாங்கம் எமது மக்களின் பிரச்சனையினை தீர்க்காது போனால் ஆயிரம் பிரபாகரன்கள் பிறப்பார்கள் என்று புலிகளின் தோல்விற்கு பின்னர் நடைபெற்ற நாடளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது சம்மந்தர் பேசினார்.

பின்னர் புலிகளுக்கு நான் நண்பர்களாக கூட இருந்ததில்லை என்றும் புலிகளில் கொலைபட்டியலில் தனது பெயரே முதலில் இருந்தாகவும் ஆங்கில ஊடகத்திற்கு செவ்வி வழங்கினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மைத்திரி புகழ் பாடியிருந்தார். அவர் காந்தீயவாதி என்றும், உலக தலைவர்களான மண்டேலா போன்றோரின் நூல்களை விருப்பி படிப்பவர் என்றும், அவரின் ஆட்சியில் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களுக்கான் நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றார்.

தற்பொழுது அயல் நாட்டினூடாக அழுத்தம் கொடுத்து சிங்கள மக்களை கோபத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்று மு. மேத்தா,  கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர் தோத்து போகும் அளவிற்கு புதுக்கவிதை படிகின்றார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறியது போன்று தமிழினம் ஒருபோதும் விரோதிகளினால் தோற்றதில்லை தூரோகிகளினாலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்.

கட்டப்பொம்மனனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கவன்னியன்,  தற்போது எமக்கு ஒரு சுமந்திரனா அல்லது அவரை முன்னிலைபடுத்தும் தமிழரசுக் கட்சியா?

-செ.கவிச்சரன்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News