ilakkiyainfo

விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து : தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமே!! – ஐ.தே. கட்சி

விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து : தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமே!! – ஐ.தே. கட்சி
December 31
03:30 2016

இரா­ஜாங்க அமைச்சர்  விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாகும்.

அது கட்­சியின் நிலைப்­பா­டா­காது. அவர் கூறிய கருத்து தேர்­தலை இலக்கு வைத்­த­தாகக் கூட இருக்­கலாம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலின் பண்­டார தெரி­வித்தார்.

மேலும் பிர­பா­கரன் எவ்­வா­றா­ன­வ­ரென்­பது தொடர்பில் இந்­நாட்டு மக்­க­ளுக்கு கூறி விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எனவே இவ்வாறான தனிப்­பட்ட கருத்­துக்­களை விடுத்து தற்­போது ஐக்­கி­யத்­துடன் வாழும் தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் நலனுக்காக போராட வேண்­டு­மெ­னவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பிர­பா­கரன் தற்­போது இருந்­தி­ருந்தால்  பிர­த­ம­ராக இருப்பார் என .இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் பிர­பா­கரன் என்ன செய்தார் அவர் எவ்­வா­றா­னவர் என்­பது நம் அனை­வ­ருக்கும் தெரியும்.

அவர் பிர­த­ராக இருப்­பாரா அல்­லது இருக்­க­மாட்­டாரா என்­பது தற்­போது பிரச்­சினை இல்லை. மக்­களின் ஐக்­கி­யத்­துக்­காக செயற்­பட வேண்­டிய செயற்­பா­டு­களே தற்­போது முக்­கி­ய­மாகும்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் தேவை­யா­னதை நாம் அடை­யா­ளப்­டுத்தி வரு­கின்றோம்.

இவ்­வா­றான நிலையில் பிர­பா­கரன் பிர­த­ம­ராக இருப்பார் என்ற விடயம் எங்­க­ளுக்கு தேவை­யில்­லாத கூற்­றாகும்.

தனிப்­பட்ட வகையில் அவர் அந்த கருத்தை கூறி­யி­ருக்­கின்றார். அக்­கூற்று தொடர்பில் கருத்து தெரி­விக்க நாம் விரும்­ப­வில்லை.

தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமாகவே நாம் இதனை கருதுகின்றோம். கட்சியின் நிலைப்பாடு இதுவல்ல. வடக்கு மக்களை தேர்தல் இலக்கு வைத்து கூறிய கருத்தே இதுவாகும் என்றார்.

பிரபாகரன் இருந்திருந்தால்……

• பிரபாகரன் இருந்திருந்தால்….  விஜ­ய­கலா மகேஸ்­வரன்  அக்கா  கிளிநொச்சியில்  காலடி  எடுத்து  வைத்திருக்க முடியுமா??

•  விஜ­ய­கலா  அக்கா   ஐ.தே. கட்சி சார்பில்  வடமாகாணத்தில்  தேர்தலில்  வேட்பாளராக  நின்று   பாராளுமன்றம்  போயிருக்க முடியுமா? புலிகள்  தலையில்  சூடு அல்லவா வைதிருப்பார்கள்.

• கிளிநொச்சி வாழ் மக்களின் வாக்குகளை  பெற்றுக்கொள்வதற்காக  கதைவிட்டிருக்கிறீர்கள் என்பது புரியாதா??

• பிரபாகரனை  பற்றி  கிளிநொச்சியில் வைத்து  இப்படி புகழ்ந்து  பேசினால்  சிவஞானம் சிறிதரனின் வயிற்றில் அல்லவா புளியை கரைக்கும்.

• வல்வெட்டித் துறையாரையும்  உசுப்பேத்தி விட்டுள்ளீர்கள். பேஷ்..!! பேஷ்..! நல்லது.

• பிரபாகரன்  பற்றி  இவ்வளவு  வீரமாக பேசிய நீங்கள்…  “தமிழீழ தேசிய தலைவர்”  என வாய்  தடுமாறி  சொல்லிவிட்டு (sorry ) மன்னிப்பு  கேட்டுள்ளீர்கள்  ஏன்??  பிரபாகரன்  தமிழீழ  தேசிய தலைவர்  இல்லையா??

About Author

admin

admin

Related Articles

1 Comment

 1. Arya
  Arya January 06, 17:45

  இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல்.

  பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் வைக்க முடியவில்லை.

  இவளூடைய கணவனோ அல்லது இவளோ தமிழ்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல.

  இவளுடைய கணவன் மகேஸ்வரன் கூட்டமைப்பில் இணையக் கேட்டபோதுகூட புலிகள் இணங்கவில்லை.

  குடாநாட்டில் தேர்தலில் நிற்கக்கூடாது என்று புலிகளால் எச்சரிக்கப்பட்டும் கொழும்பில் நின்றபடியே வடக்கில் தேர்தலில் நின்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின்ரானவர் இவளது கணவன்.

  தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்புச் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்தான்.

  இவளது கணவன் ஒருதடவை புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிர் தப்பியபவர்.

  இரண்டாவது தடவையில் புலிகளின் குறியிலிருந்து இவளது கணவனால் உயிர் தப்ப முடியவில்லை.

  இவளது கணவைக் கொன்றவன் புலி என்று நிரூபிக்கப்பட்டு மரணதண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டது.

  புலிகள் அழிந்த பின் இவள் வன்னியில் நின்றுகொண்டு தன் கணவனையே கொன்ற பிரபாகரனுக்குத் துதி பாடுகிறாள்.

  பிரபாகரன் உயிருடனிருந்திருந்தால் பொட்டன் இவளை உயிருடன் விட்டிருக்க மாட்டான்.

  இவள் தானும் ஒரு சிங்களக் கட்சியில் இருந்துகொண்டு உங்கள் இனமான கூட்டமைப்புக்கு வாக்களிக்கும்படி மக்களுக்குச் சொல்லுகிறாள். இவள் எந்த இனம்.

  சிங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஏனைய கட்சிகள், இயக்கங்கள் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவள் எந்தக் கட்சியில் நின்று தேர்தலில் வென்றாள்?

  எந்தக் கட்சி இவளுக்கு அமைச்சர் பதவி வழங்கியது?

  ஏனைய கட்சிகளை துரோகிகளாகப் பார்ப்பவர்கள் ஏன் இவளைத் துரோகி என்று கூறவில்லை?

  எதிரிக்கு எதிரி நண்பனாகிவிட்டார்கள்.

  இவளோ அல்லது இவளது கணவனோ போராட்டத்தில் இணைந்திருந்தார்களா?

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com