என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன்.
அப்போது அமுதரோடு பிரபா முரண்பட்டிருந்த நேரம்.
காசியானந்தனை கூப்பிட்டனப்பினார் பிரபாகரன். அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு பிரபாகரன் கண்டிப்பாக தெரிவித்து விட.. கப்சிப் ஆகிவிட்டார் காசியானந்தன்.
அதன் பின்னர் மறந்தும் கூட அமுதரைப் போற்றிப் பேசியதில்லை அவர்.
இப்போது மீண்டும் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலுக்குச் செல்லலாம்.
தியாகருக்கு குறி
மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தiலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தியாகராசா. தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில்; போட்டியிட்டு வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றவர்.1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்திருந்தார்.
தியாகராசாவுக்கு முன்னர் கொழும்பில் குறி வைக்கப்பட்;டது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். இப்போது 1981 இல் மீண்டும் குறிவைக்கப்பட்டது.கூட்டம் ஒன்றில் உரையாற்றிவிட்டு தனது காரை நோக்கிச் சென்றார் தியாகராசா.
திடீரென்று துப்பாக்கி ஒன்று வெடித்தது. குறி தவறவில்லை.
தியாகராசாவின் உயிர் பிரிந்தது. உமா- சுந்தரம் குழுவில் இருந்த ஜெயா மாஸ்டர் என்பவரே அச்சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தார். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் நாச்சிமார் கோவிலடியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அன்று தான் மாவட்;ட அபிவிருத்தி சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு பெறும் நாளாகும். அக்கூட்டத்தை குழப்புவதன் மூலமாக தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் தடுக்கலாம் என்று உமா –சுந்தரம் குழுவினர் நினைத்தனர்.
அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. கூட்டம் குறித்த நேரத்தின் பின்னரே ஆரம்பித்தது. கூட்;டத்தில் தாக்குதல். கூட்டத்திற்கு பாதுகாப்பாக பொலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சைக்கிள்களில் வந்திறங்கிய இளைஞர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பாக நின்ற பொலிசாரை நோக்கிச் சுட்டனர். வேட்டுச் சத்தம் கேட்டவுடன் கூட்டத்தினர் பரபரப்படைந்தனர். அப்போது யாழ்.மாநகரசபை மேயராக இருந்தவர் விசுவநாதன்.
அவர் வேட்டுச் சத்தத்தை பட்டாசுச் சத்தம் என்று நினைத்துவிட்டார். ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்துகின்றார்கள் என்று நினைத்து, “ பதட்டப்படாதீர்கள், பட்டாசுச் சத்தம் தான் கேட்கிறது|| என்று விசுவநாதன் கூறிக்கொண்டிருந்தபோது இரண்டு பொலிசார் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தனர்.
விபரீதம் புரிந்து கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள் இளைஞர்கள் தப்பிச் சென்றனர். இரண்டு பொலிசார் (கொல்லப்பட்ட) அந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் தற்போது புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக உள்ள மாணிக்கதாசன். 83ல் வெலிக்கடை படுகொலையில் கொல்லப்பட்ட றொபேட்டும் அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர்.
எரிந்து யாழ்ப்பாணம்
நாச்சிமார்கோவிலடியில் ஆரம்பித்து யாழ்.நகர் வரையான தனியார் கடைகளும் வீடுகளும் பொலிசாரால் தீ வைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து அப்போது வெளியாகிய ஒரேயொரு தினசரியான ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.
யாழ்- சுபாஸ் விடுதியில் வந்து தங்கியிருந்தனர் முக்கிய அமைச்சர்கள்.
காமினி திசநாயக்கா, இனவாதத்தின் மொத்த வடிவமாக விளங்கிய சிறில் மத்தியூ ஆகியோர் யாழ் நகர் எரியும் காட்சியை கண் நிறையக் கண்டனர். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்யும் திட்டத்தோடு ஒரு குண்டர் படையையும் அவர்களால் அழைத்;து வரப்பட்டிருந்தது.
நாச்சிமார் கோவிலடி தாக்குதலையடுத்து யாழ் நகரை எரிப்பதற்கு அந்த குண்டர் படையும் பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண மக்கள் கல்வியை பிரதானமாக வைத்தே முன்னேறி வருபவர்கள்.யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கும் மிக உயர்ந்த தண்டனை யாழ்.நூலகத்தை எரிப்பது தான் என்று திட்டமிடப்பட்டது.எரிப்பதற்கு எரிபொருள் வேண்டுமல்லவா?
கொழும்பிலிருந்தும் அனுராதபுரத்தில் இருந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்தும் பெற்றோல் நிறைந்த தாங்கிகள் யாழ்நகருக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் காமினி லொக்குகே. சிறில் மத்தியூவின் அமைச்சின் கீழ் இருந்தது அந்தக் கூட்டுத்தாபனம். குhமினி லொக்குகே சிறில் மத்திய+வின் விசுவாசி. இவர் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார்.
பெற்றோல் தாங்கிகள் வந்து சேர்ந்ததும் நூலக எரிப்பு ஆரம்பமானது. ஆசியாவின் மிகச் சிறந்த நூலகத்தை திட்டமிட்டு மூட்டிய தீ சாம்பலாக்கியது.
தமிழர்களுக்கு எதிரான அந்தக் கலாச்சார படுகொலைக்கு காமினி திசநாயக்காவும் சிறில் மத்திய+வும் காரணம் என்று கூட்டணியினரும் குற்றம் சாட்டினார்கள். ஆவேசப்பட்டது போல பேசினார்கள்.
1994 நவம்பரில் காமினி கொல்லப்பட்ட பின்னர் கூட்டணியினர் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:
“மிகச்சிறந்த ஜனநாயகவாதியை இழந்துவிட்டோம்’’
யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரனின் வீடு யாழ்ப்பாணத்தில் இருந்தது. அங்கும் பொலிசார் புகுந்தனர். திரு.யோகேஸ்வரனும் அவர் மனைவியும் பின்புற வழியால் ஓடி உயிர் தப்பினார்கள். வீட்டை பொலிசார் தீயிட்டுக் கொழுத்தினார்கள்.
யாழ்.நகரில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகமும் அங்கிருந்த ஆவணங்களும் தீக்கிரையாகின.
திட்டமிட்டு இட்ட தீயில் யாழ் நகரம் எரிந்து கொண்டிருந்தது. இலங்கை முழுவதும் இனக்கலவரத் தீயில் தமிழர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.
ஜே.ஆர்.அரசாங்கமோ அதன் படைகளோ நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஒரு கடுமையான பாடம் படிப்பிப்பதன் மூலமாக தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை ஜே.ஆர்.அரசாங்கம் விரும்பியது போல கோரமான நடவடிக்கைகளை கோலோச்சின.
உணர்த்திய உண்மை
தமிழ் மண்ணில் கூட தமிழ் பேசும் மக்கள் தமது கலாச்சாரத்தை தமது தனித்துவங்களை, தமது உயிர்களை உயிரிலும் மேலான அறிவாலயங்களை பாதுகாக்க முடியாது என்ற உண்மையை அடித்தும் சுட்டும் எரித்தும் உணர்த்தியது ஜே.ஆர்.அரசாங்கம்.
தீவெங்கும் எரிந்த தீ இளைஞர்கள் நெஞ்சங்களில் பற்றிக் கொண்டது.
அகிம்சை மீதான நம்பிக்கை செத்துப் போனது.
மகாத்மா காந்தி சொன்ன “செய் அல்லது செத்துமடி” ஆயுதப் போராட்டத்தால் வாங்கிக் கொள்ளப்பட்ட கோஷமானது.
ஆயுதப் போராட்டம் மீது தமிழ் மக்களும் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தனர்.
அதேசமயம் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் 1981 ஜூனில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர்.
அடக்கு முறைக்கு பதிலடி கொடுக்கும் ஓர் ஆவேசமான வெளிப்பாடாக வாக்களிப்பு அமைந்திருந்தது.
81ல் நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு தமது நடவடிக்கையே காரணம் எனக் கூறப்பட்டு விடும் என்று நினைத்த உமா-சுந்தரம் குழுவினர் நாச்சிமார் கோவிலடித் தாக்குதலுக்கு உரிமை கோராமல் இருந்துவிட்டனர்.
இதேவேளை இயக்க மோதல்களும் தோன்றத் தொடங்கின.
உமா-சுந்தரம் குழுவினரை ஒழித்துக் கட்டத் திட்டம் தீட்டப்பட்டது.பிரபாக வகுத்த திட்டம் அது
(தொடரும்)
(15)இந்தப் பகுதியில் கட்டம் இடப்பட்ட செய்தி
குரும்பசிட்டி கொள்ளை
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் வன்னியசிங்கம் நகை அடைவு கடையில் பிரபாகரன் அணியினரும் குட்டிமணி – தங்கத்துரை குழுவினரும் இணைந்து நடத்திய கொள்ளை பற்றி கடந்த வாரம் (பகுதி 14) குறிப்பிட்டிருந்தேன்.
கொள்ளை நடவடிக்கையை எதிர்த்த பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டிருந்ததாக நினைவு என்று கூறியிருந்தேன்.
அதில் ஒரு திருத்தம்:
அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவரது பெயர் குலேந்திரன். இன்னொருவர் பெயர் ஐயாத்துரை. காயப்பட்டவர்கள் மூவர். அக்கொள்ளை நடவடிக்கைக்கு தகவல் கொடுத்து உதவியவர் நகை அடைவு நிலைய உரிமையாளரான வன்னியசிங்கத்தின் மைத்துனர் தான் என்பதும் குறிப்பிடத் தவறிய விடயம்.
“வேட்டோசை கேட்டது, வீரப்பேச்சாளர்கள் ஓட்டம்” : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -14