தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும், 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தானோ அல்லது தந்தை, தாய் அல்லது சகோதரர்களோ வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் சொத்துக்களைப் பதுக்கியுள்ளதை அமைச்சர் மங்கள சமரவீர நிரூபித்தால், அரசியலை விட்டே விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ஜேபிவி.யிடம் 1 பில்லியன் நஷ்டயீடு கோரி மனு!
09-05-2015

1429598378_6335324_hirunews_gota-colombo-telegraph_0மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவிடம் நஷ்டயீடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நந்தசேன ராஜபக்ஷ விண்ணப்ப மனு அனுப்பி வைத்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியான சனத் விஜேவர்த்தனவின் ஊடாக இந்த  நஷ்டயீடு விண்ணப்ப மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டு மக்கள் மத்தியில் சிறந்த கீர்த்திநாமம் பெற்ற தனக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தனக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ மனுவில் கோரியுள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெற்ற போது 130 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சுனில் வட்டகல ஊடகங்கள் மூலம் சுமத்தியுள்ள இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மனஉலைச்சல் அடைந்துள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே விண்ணப்ப மனுவில் உள்ளது போன்று ஒரு வார காலத்திற்குள் தனக்கு நஷ்டயீடாக 1 பில்லியன் ரூபா வழங்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என கோத்தபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக சுனில் வட்டகலவிற்கு அனுப்பியுள்ள நஷ்டயீடு விண்ணப்ப மனுவில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version