முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சோதிடத்தின் மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக தெவிசந்த, விஸ்தர ஆகிய பெயர்களில் இரண்டு சோதிடப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் முதலாவது வெளியீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் இராஜயோகம் கிடைத்துள்ளதாகவும் அவர் மீண்டும் இந்த நாட்டின் தலைவராக வருவார் எனவும் சோதிடர்கள் எனக் கூறிக்கொள்ளும் இருவரைக் கொண்டு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வந்து பிரதமராக பதவி வகிப்பார் என நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த சோதிடர் ஒருவர் எதிர்வு கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாமலின் நீலப்படையணி வேறு பெயரில் இயங்கும்?
images

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலான நீலப்படையணி வேறு பெயரில் இயங்கவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியைப் பொறுப்பேற்றுக்கொண் ட பின்னர் நீலப்படையணி என்ற இளைஞர் அமைப்பு கலைக்கப்பட்டது.
இந்த அமைப்பினை வேறு பெயரில் மீளவும் இயங்கச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் நாரஹேன்பிட்டி அபராமயவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நீலப்படையணியை மீள இயங்கச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நீலப்படையணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்ஹ மற்றும் படையணியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தம்மைக் கண்டுகொள்வதில்லை எனவும் இதனால் தமக்கும் ஓர் இளைஞர் முன்னணி அவசியம் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நீலப்படையணி வேறுபெயரில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் நீலப்படையணி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது.

சிறிலங்காவின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
17-05-2015

மாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

 

போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், முதல்முறையாக, ஓய்வுபெற்ற படையினரும் அணிவகுப்பில் தனியாக இடம்பெறவுள்ளனர்.

போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது இந்த அணிவகுப்பில், 3255 இராணுவத்தினர், 1615 கடற்படையினர், 1116 விமானப்படையினர், 959 காவல்துறையினர், 559 சிவில் பாதுகாப்புப்படையினர், இடம்பெறவுள்ளனர்.

போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது Comdinspectparade 4அத்துடன், சிறிலங்கா படையினரின் போர்ச்சாகசங்களையும், வீரதீரத்தையும் வெளிப்படுத்தும், ஊர்திகளும், சிறிலங்கா படையினரின் போர்க்கருவிகள் மற்றும் வாகனங்களும், இந்த அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.

 போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது matara parade reharcial 3நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மாத்தறைக்குச் சென்று இந்த அணிவகுப்பின் ஒத்திகையைப் பார்வையிட்டார்.

 போர் வெற்றி தின கொண்டாட்டம்; மகிந்த தலைமையில் கொழும்பில் நாளை மாலை நடக்கிறது matara parade reharcial 4இந்த நிகழ்வு நாட்டின் இறைமைக்காக உயிரை அர்ப்பணித்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version