கிழக்கு ஜெரூசலத்தில் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலி ஸார் ஊடுருவியதை அடுத்து பலஸ்தீன வழிபாட் டாளர்களுடன் மோதல் வெடித்துள்ளது.
கலவரத்தை தடுக்க பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்ததாக இஸ்ரேல் பொலிஸார் குறிப் பிட்டுள்ளனர்.
இதன்போது இஸ்ரேல் பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம், ரப்பர் புள்ளட் தாக்குதல் மற்றும் அதிர்ச்சிதரும் எறிகுண்டுகளை பயன் படுத்தி இருப்பதோடு பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பிளம்புகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த ஜுலை இறுதியிலும் அல் அக்ஸா வளா கத்தில் இவ்வாறானதொரு மோதல் இடம்பெற்றது.
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா வளாகத்தை டெம்பிள் மௌன்டன் என்று அழைக்கும் யூதர்கள் அதனை தமது மதிப் பிற்குரிய பகுதியாக பார்க்கின்றனர்.
எனினும் மத மற்றும் அரசியல் பத்தற்றம் கொண்ட இந்த புனித வளாகத்தில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதில் யூத புதுவருடம் ஆரம்பிப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிவாசல் வளாகத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் யூதர்களின் வருகையை தடுப்பதற்கு பலஸ்தீன இளைஞர்கள் தடுப்புகளை அமைத்ததாக இஸ்ரேல் பொலிஸ் தரப்பு குறிப் பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் படையினர் நேற்று காலை 6.45 மணியளவில் குறித்த தடுப்பு களை தளர்த்துவதற்கு பள்ளிவாசல் வளாகத்திற்குள் தீடிரென ஊடுருவியுள்ளனர்.
செயின் மற்றும் மொரோக்கோ வாயில் ஊடாக ஊடுருவிய படையினர் அங்கு இருந்த வழிபாட்டாளர் களை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது வாயில்களை பூட்டி இருக்கும் இஸ்ரேல் படையினர் பள்ளிவாசலுக்குள் ரப்பர் குண்டு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
சில பலஸ்தீனர்கள் மீது மிளாகாய்ப்பொடி பீச்சயடித்து தாக்கப்பட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டபோதும் பலரும் காயத்திற்கு உள்ளானதாக பலஸ்தீன தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸார் சேதங்களை ஏற்படுத்தியதாகவும், தொழுகை விரிப்பும் பகுதியளவு தீயில் சாம்பலானதாகவும் முஸ்லிம் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் இந்த மோதல் பள்ளிவாசல் வளாகத்திற்கு வெளியிலும் பரவியிருப்பதோடு இஸ்ரேல் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் தாம் பள்ளிவாசலுக்குள் நுழைவது தடுக்கப் பட்டதாக கதீஜீ குவைஸ் என்ற பலஸ்தீன பெண் ஒருவர் ஏ.எப்.பீ. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் (அதிர்ச்சிதரும்) எறிகுண்டுகளுடன் துரத்தி வருகின்றனர்.
இவ்வாறு இன்று (நேற்று) காலை முதல் நடந்து வருகிறது. பள்ளிவாசல் வளாகத்தின் முன் கதவு பகுதியிலேயே எமக்கு தொழ அனுமதிக்கின்றனர்” என்று அவர் விபரித்துள்ளார்.