‘தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்சியிலிருந்து விலத்த வேண்­டு­மென்று சுமந்­திரன் கோரு­கிறார்.

எனவே ராஜி­னாமா செய்ய வேண்­டி­யவர் முத­ல­மைச்சர் அல்லர். தமிழ் மக்­களின் நல­னுக்கு விரோ­த­மாக பேசி­வரும் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­துக்கு மாறாக பேசி­வரும் சுமந்­தி­ரனே ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘அண்­மையில் கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்ற வேளையில் சுமந்­திரன் ஒரு விட­யத்தை புட்டுக் காட்­டினார். முத­ல­மைச்சர் இரண்­டரை வரு­டங்­களின் பின் தனது பத­வியை விட்­டுக்­கொ­டுப்பேன் எனக் கூறி­யி­ருந்தார். அதை இப்­பொ­ழுது அவ­ருக்கு நினைவு படுத்­து­கின்றேன் என பூட­க­மாக சுட்­டிக்­காட்­டினார்.

இதில் நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஆகா­யத்தில் பறந்து கொண்­டி­ருந்த விக்­னேஷ்­வரன் அவர்­களை ஏணியை வைத்து இறக்கி விட்­ட­வர்கள் ஐயா சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னு­மாகும். ஆகவே முத­ல­மைச்­ச­ருக்கும் உங்­க­ளுக்கும் இடையே தோன்­றி­யுள்ள முரண்­பாடு உங்­க­ளு­டைய பிரச்­சி­னையே தவிர எங்­க­ளு­டைய பிரச்­சினை இல்­லை­யென நான் சுமந்­தி­ர­னுக்கு தெரி­வித்தேன். –தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தன்

வட­மா­காண முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலக்­கு­வ­த­னாலோ அல்­லது பதவி வில­கும்­படி கோரு­வ­த­னாலோ எந்த நன்­மையும் கிடைக்கப் போவ­தில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாக உடையும் நிலையே உரு­வாகும். இப்­போ­தைக்கு அமைதி காப்­பதே சிறந்­தது. இவ்­வாறு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தெரி­வித்­தனர்.

வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரனை கட்­சி­யி­லி­ருந்து நீக்க வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் வெளி­நாட்டு ஊடகம் ஒன்றில் தெரி­வித்த கருத்துத் தொடர்­பா­கவும் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பா­கவும் ஆராய்ந்த போதே மேற்­படி கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன.

யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புளொட் அமைப்பின் தலை­வ­ரு­மா­கிய தர்­ம­லிங்கம் சித்­தார்த்­த­னிடம் வின­விய போது அவர் கூறி­ய­தா­வது,

கடந்த பொதுத்­தேர்­தலின் போது வட­மா­காண முத­ல­மைச்சர் கூட்­ட­ட­மைப்­புக்­கான பிர­சார நட­வ­டிக்­கை­களில் பங்­கெ­டுத்துக் கொள்­ளாமை, அல்­லது செயற்­ப­டாமை கவலை தரும் விட­ய­மாகும். அது நிச்­ச­ய­மான தவறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்­காக முத­ல­மைச்சர் மீது நட­வ­டிக்கை எடுப்­பது என்ற விடயம் கட்­சியை விட்டு நீக்­கலாம் என்ற விட­யத்தை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இன்று காணப்­படும் சூழ்­நி­லையில் முத­ல­மைச்­ச­ருக்கு இருக்கும் மக்கள் ஆத­ரவு அவரின் பேருக்­கி­ருக்­கின்ற கெள­ரவம், மதிப்பு என்­பன அவர் மீது நட­வ­டிக்கை எடுக்கப் போகும் பட்­சத்தில் கட்­சியைப் பாதிக்கும். அவரை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கினால் அவர் என்ன செய்வார் என்­பதும் எமக்குத் தெரி­யாது.

உதா­ர­ண­மாக வைத்துக் கொள்வோம். அவர் தானொரு கட்­சியை ஆரம்­பித்தால் அதற்கு பிறகு என்ன நடக்­கு­மென்று நாம் கணிப்­பிட முடி­யாது. அவ்­வாறு ஒரு கட்சி ஆரம்­பிக்­கப்­ப­டு­மாக இருந்தால் அதுவும் ஒரு சிக்­க­லாக மாறக் கூடும். இவ்­வகை சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இரண்­டாக உடைக்கும் நிலையே தோன்றும்.

அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் சிலர் அவ­ருடன் இணை­யலாம். சில­வே­ளை­களில் சில கட்­சிகள் ஒன்று சேரலாம். குறிப்­பாக சொல்­லப்­போனால் தமி­ழ­ரசுக் கட்­சியை சேர்ந்த இரண்­டொ­ருவர் போவ­தற்கு எத்­த­னிக்­கலாம். சில உறுப்­பி­னர்கள் பகிரங்க­மா­கவே கூறியும் உள்­ளார்கள்.

இத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கு­மாக இருந்தால் பிரியும் சக்தி பலம் பொருந்­திய சக்­தி­யாக மாறு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றது. இது ஏற்­ப­டாமல் இருக்க வேண்­டு ­மாயின் இப்­போ­தைக்கு மெளனம் காப் ­பதே சிறந்­தது.

(சுமந்­திரன்) வெளி­நாட்டு ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யா­னது தேவை­யற்ற விடயம் பிழை­யான நட­வ­டிக்­கையும் கூட, சுமந்­தி­ர­னுக்கும் வடக்கு முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் தனிப்­பட்ட கோபங்­களை இவ்­வாறு வெளிக்­காட்­டி­யமை தவ­றான விட­ய­மாகும்.

அண்­மையில் கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்ற வேளையில் சுமந்­திரன் ஒரு விட­யத்தை புட்டுக் காட்­டினார். முத­ல­மைச்சர் இரண்­டரை வரு­டங்­களின் பின் தனது பத­வியை விட்­டுக்­கொ­டுப்பேன் எனக் கூறி­யி­ருந்தார். அதை இப்­பொ­ழுது அவருக்கு நினைவு படுத்­து­கின்றேன் என பூட­க­மாக சுட்­டிக்­காட்­டினார்.

இதில் நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஆகா­யத்தில் பறந்து கொண்­டி­ருந்த விக்­னேஷ்­வரனை ஏணியை வைத்து இறக்கி விட்­ட­வர்கள் ஐயா சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னு­மாகும்.

ஆகவே முத­ல­மைச்­ச­ருக்கும் உங்­க­ளுக் கும் இடையே தோன்­றி­யுள்ள முரண்­பாடு உங்­க­ளு­டைய பிரச்­சி­னையே தவிர எங்­க­ளு­டைய பிரச்­சினை இல்­லை­யென நான் சுமந்­தி­ர­னுக்கு தெரி­வித்தேன். நீங்கள் இரு­வரும் இல்­லை­யாயின் அந்த தேவதை ஆகா­யத்தில் பறந்து கொண்டே இருந்­தி­ருக்­கு­மென நகைச்­சு­வை­யாக கூறி­யி­ருந்தேன். இதில் உண்­மை­யு­முண்டு. தற்­பொ­ழுது எழுந்­துள்ள பிரச்­சி­னையில் நான் எப்­பொ­ழுதும் நடு­நி­லையே வகிப் பேன்.

முத­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை விலக்­கு­வ­தாக இருந்­தாலும் சேர்த்து செல்­வ­தாக இருந்­தாலும் இவ்­வி­ட­யத்தில் நாம் நடு­நி­லைமை வகிப்­போமே தவிர உடன்­பட்டு சாய­மாட்டோம் என்ற கருத்தை சித்­தார்த்தன் தெரி­வித்­த­துடன் சிறைக் கைதிகள் விவ­கா­ரத்தில் தலைவர் சம்­பந்தன் மீது கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கு அவர் பதில் அளிக்­கையில்,

சம்­பந்தன் ஐயாவைப் பொறுத்­த­வரை கைதி­களின் விடு­த­லைக்­காக குரல் கொடு க்க முடி­யுமே தவிர அவர் முடிவு எடுக்க முடி­யாது. முடிவை எடுக்கும் அதி­காரம் அர­சாங்­கத்­தி­ட­மே­யுண்டு. உண்­மையைக் கூறப் போனால் சம்­பந்தன் அவர்கள் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­கா­கவே அவ­ச­ர­மாக செல்ல வேண்­டிய நிலை அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இது தவிர்க்க முடி­யா­த­வொன்றே. ஆனால் அவர் ஒரு விட­யத்தை முன் நட­வ­டிக்­கை­யாக செய்­தி­ருக்­கலாம். தனது அவ­சர பய­ணத்தை கைதி­க­ளுக்கோ அல்­லது ஊடக வாயி­லா­ கவோ கூறி­விட்டுச் சென்­றி­ருக்­கலாம். அது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்கும். ஆனால் இது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மில்­லாத விட­ய­மாகும். சொல்லிச் செல்­வ­தற்­கு­ரிய அவ­கா­ச­மென்­பது அவ­ருக்கு இல்­லாத கார­ணத்­தி­னால்தான் அவரின் பய ணம் அவ­சர பய­ண­மாக அமைந்­தி­ருக்கும்.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­கா­ரத்தில் ஏமாற்றி விட்­டது என்­பது மறுக்­கப்­பட முடி­யாத உண்மை. முற்று முழு­தாக அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தியை நம்­பி­யி­ருந்­த­வ­ருக்கு இது பலத்த ஏமாற்­றத்தை தந்­தி­ருக்­கலாம். இது யாதார்த்­தமும் கூட.

சம்­பந்தன் ஐயாவைப் பொறுத்தவரை அவர் நினைத்­தி­ருக்­கலாம் நான் ஒரு பெரிய விட­யத்­துக்­காக பொறுத்துக் கொண்டு போகிறேன். அர­சாங்­கத்தின் இத்­த­ கைய செயற்­பா­டு­களை தந்­தி­ரோ­பா­ய­ மா­கத்தான் வெற்றி கொள்ள வேண்­டு­ மென்று அவர் நினைத்­தி­ருக்­கலாம். அர­சாங்­கத்தை பகைக்க கூடாது என்றும் எண்­ணி­யி­ருக்­கலாம்.

ஐயா­வுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் அவ­சர சூழ்­நிலை அவரை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்து விட்­டதே தவிர உண்மை அது­வல்ல. தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­கா­ரத்தில் அவர் எவ்­வ­ளவு பிர­யத்­த­னங்­களை எடுத்தார்? கடும் முயற்­சி­களில் ஈடு­பட்டார் என்­பது தமிழ் மக்கள் அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். அவ­ருக்கு உரு­வா­கி­யி­ருக்கும் நெருக்­கடி நிலையை வைத்­துக்­கொண்டு அவரை விமர்­சிப்­பது என்­பது அர­சியல் நாக­ரீ­க­மற்ற செய­லாகும் என்றார்.

முன்னாள் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கூறு­கையில்,

வட­மா­காண முத­ல­மைச்சர் மீது சுமந்­திரன் சுமத்­திய குற்­றச்­சாட்டு யாதெனில் கன­டா­வுக்கு சென்று நிதி திரட்டி வரும்­படி கூறினோம். அவர் சுக­யீ­னத்தை காரணம் காட்டி மறுத்தார். ஆனால் அமெ­ரிக்­கா­வுக்கு போய் வந்தார். கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக முத­ல­மைச்சர் அறிக்கை விட்­டி­ருந்தார். கடந்த பாரா­ளு­மன்ற தேர்­ தலில் வேறு ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிக்­கும்­படி கூறி­யி­ருக்­கிறார் என்ற அற்­பத்­த­ன­மான குற்­றச்­சாட்­டுக்­களை சுமந்­திரன் கூறி­ யுள்ளார்.

வடக்கு முத­ல­மைச்­சரைப் பொறுத்­த­ வரை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எவ­ருக்கும் வாக்­க­ளிக்­கும்­படி அவர் கோர­வில்லை. தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்­றுக்­கொண்டு யார் அதற்­காக உழைக்கத் தயா­ராக இருக்­கி­றார்­களோ அவர்களுக்கு வாக்­க­ளிக்­கும்­ப­டியே கூறி­யி­ருந்தார். எனவே அவரின் கருத்­துப்­படி த.தே.கூ. அமைப்பு ஏற்­றுக்­கொண்டால் அதற்கு வாக்­க­ளிக்க முடி­யு­மெ­னவும் பொருள் கொள்­ளலாம்.

சுமந்­தி­ரனால் சுமத்­தப்­ப­டு­கிற உண்­மை­ யான குற்றச்சாட்டு இவை­யல்ல. விக்­னேஸ்­வரன் அவர்­களை கட்­சியை விட்டு விலத்த வேண்டும். அவர் ராஜி­னாமா செய்ய வேண்டும் என சுமந்­திரன் கோரு­வது முத­ல­மைச்சர் கன­டா­வுக்குச் சென்று நிதி திரட்­ட­வில்­லை­யென்­ப­தற்­கா­க­வல்ல. மாறாக தமிழ் மக்­க­ளுக்­காக முத­ல­மைச்சர் காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை கொண்­டி­ருக்­கிறார் என்­ப­தற்­கா­க­வாகும்.

விக்­னேஸ்­வரன் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினார். இலங்­கையில் இனப்­ப­டு­கொலை நடை­பெற்­றி­ருக்­கி­றது என்­பதை 9 பக்க அறிக்­கை­யாக தயா­ரித்து என்ன என்ன வகையில் அது நடை­பெற்­றுள்­ளது என்­பதை தெளி­வாக விளக்­கி­யுள்ளார்.

அது மட்­டு­மன்றி இலங்­கையில் இனப்­படு­ கொலை சம்­பந்­த­மான விசா­ர­ணை­யொன்று நடை­பெற வேண்­டு­மானால் அது சர்­வ­தேச தரத்­தி­லான விசா­ர­ணை­யாக இருக்க வேண்­டு­மென இன்­னு­மொரு தீர்­மா­னத்­தையும் அவர் நிறை­வேற்­றி­யி­ருந்தார்.

எனவே தமிழ் மக்­க­ளுக்­கான முழு­மை­யான தீர்வை நோக்கி நகர்த்­து­வ­தற்கு இலங்­கையில் நடை­பெற்­றது இனப்­ப­டு­கொ­லை­யெனக் கூறி விசா­ரணை வேண்­டு­மென்று உறு­தி­யாக நிற்கும் போது தமிழ் மக்­களின் பிரதி நிதி­யாக சர்­வ­தேச சமூகத்துடன் பேசு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் சுமந்­திரன் இனப்­ப­டு­கொ­லை­யென நாங்கள் நிரூ­பிக்க முடி­யாது. உள்­ளக விசா­ர­ணை­யென்­பது சர்­வ­தேச விசா­ர­ணைதான் என அடித்துக் கூறு­வது வெவ்­வே­று­பட்ட முரண்­பா­டு­களைக் காட்டுகிறது.

எனவே, தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலத்த வேண்­டு­மென்று சுமந்­திரன் கோரு­கிறார்.

எனவே ராஜி­னாமா செய்ய வேண்­டி­யவர் முத­ல­மைச்சர் அல் லர். தமிழ் மக்­களின் நல­னுக்கு விரோ­த­மாக பேசி­வரும் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­துக்கு மாறாக பேசி­வரும் சுமந்­தி­ரனே ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சுமந்­திரன் அடிக்­கடி சொல்லிக் கொண்­டி­ருக்­கிறார் இனப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக தானே முதல் முதல் பாரா­ளு­மன்றில் பேசி­யுள்­ள­தாகக் கூறு­கிறார். சுமந்­திரன் பாரா­ளு­மன்­றத்­துக்கு வரு­வ­தற்கு முன்­னமே பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் நாங்கள் பேசி­யுள்ளோம். காரண காரி­யங்­க­ளுடன் விளக்­கி­யு­முள்ளோம். அமிர்­த­லிங்­கத்தின் காலத்­தி­லி­ருந்து இன்னும் பலர் பேசி­யுள்­ளனர். கன்­சாட்டில் அவை பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

தான் தான் முதல் முதல் பேசினேன் என்று கூறிக் கொண்­டி­ருக்கும் அதே சுமந்­திரன் ஜெனி­வா­வுக்கு சென்று இலங்­கை யில் நடந்­தது இனப்­படு கொலை­யென்று கூற முடி­யாது. இனப்­ப­டு­கொ­லை­யென்­பதை நீதி­மன்றில் நிரூ­பிக்க முடி­யாது என்று கூறி­யுள்ளார். நீதி­மன்றில் நிரூ­பிப்­பதும் விடு­வதும் வேறு விடயம்.

இலங்­கையில் நடை­பெற்­றது இனப்­ப­டுகொ­லைதான் என்­பதை சர்­வ­தே­சத்­துக்கு எடுத்துக் கூறி­னால்தான் அது நீதி­மன்­றுக்கு செல்­லுமா செல்­லாதா என்­பதை முடிவு கட்ட முடியும். தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­யாக இருந்து கொண்டு எம்மால் இனப்­ப­டு­கொலை என்­பதை நிரூ­பிக்க முடி­யாது என ஜெனி­வாவில் பிர­சாரம் செய்­வது அர­சாங்கம் செய்யும் பிர­சா­ரத்தை நிரூ­பிப்­பது போன்­றது. எனவே பாரா­ளு­மன்றில் இனப்­ப­டு­கொ­லை­யெனப் பேசி கன்­சாட்டில் பதிவு செய்யும் சுமந்­திரன் வெளி­நா­டு­களில் சென்று இனப்­ப­டு­கொலை நடை­பெ­ற­வில்­லை­யென அர­சாங்­கத்­துக்­காக பிரச்­சாரம் செய்­கிறார்.

ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்­டு­மென மிக ஆணித்­த­ர­மாகப் பேசி வந்­தி­ருக்­கி றார். இவ்­வி­சா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டால்தான் தமிழ் மக்­க­ளுக்­கான நீதி நியாயம் கிடைக்கும் என பேசி வந்­துள் ளார். நீதி நியா­ய­மென்­பது பல­முகங் கொண்­டது.

பாதிக்­கப்­பட்ட மக்கள் காணாமல் போனோர் தொடர்­பான விட­ய­மாகும். இவர்­க­ளுக்­கு­ரிய வாழ்­வா­தாரம், நஷ்ட ஈடு, புனர்­வாழ்வு என்­பவை சார்ந்­த­வை­யாகும். இரண்­டா­வது விட­ய­மென்­ன­வென்றால் தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அர­சியல் தீர்வை தேடித் தரு­வது என்­ப­தாகும். இவை­யெல்லாம் எப்­பொ­ழுது வரு­மென்றால் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடை­பெற்று யுத்­தத்­திற்­கான காரணங்­களை கண்­ட­றிந்து இதை சர்­வ­தேசம் புரிந்து கொண்டு மீண்டும் இந்­நி­லைமை ஏற்­ப­டாத ஒரு தீர்வை ஏற்­ப­டுத்­து­வதே சர்­வ­தேச விசா­ர­ணையின் நோக்­க­மாக இருக்கும்.

ஆனால் இன்று சர்­வ­தேச விசா­ர­ணை­யு­மில்லை. கலப்பு நீதி­மன்ற முறையும் வரப்­போ­வ­தில்லை. முடி­வாக என்ன வந்­தி­ருக்­கி­ற­தென்றால் உள்­ளக விசா­ரணை. இந்த உள்­ளக விசா­ர­ணைக்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு அல்­லது அனு­ச­ர­ணையை பெற்­றுக்­கொள்­வது என்ற முடி­வுக்கே வந்­துள்­ளனர். உள்­நாட்டு நீதித்­து­றைக்கு உட்­பட்ட ஒரு சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­புடன் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் படியே முடி­வுகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. நாங்கள் கோரி­யது வேறு தற்­பொ­ழுது நடப்­பது இன்­னொன்று.

இப்­பொ­ழுது சுமந்­திரன் போன்றோர் என்ன கூறு­கி­றார்கள் இதைத்தான் நாம் எதிர்­பார்த்தோம். இவ்­வா­றா­ன­தொரு பொறி­மு­றை­யையே நாங்கள் விரும்­பு­கிறோம். எடுக்­கப்­பட்­டி­ருக்கும் தீர்­மானம் மிக மிகச் சிறந்த தீர்­மானம். இத்­தீர்­மானம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நிக­ரா­னது என்று கூறு­வ­தெல்லாம் மக்கள் எல்­லோ­ருமே முட்­டாள்கள் என்ற அர்த்­தத்­தி­லாகும்.

அண்­மையில் தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் (06.11.2015) முன்னாள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கையின் தீர்­மானம் பற்றி தனது கருத்தைக் கூறு­கின்ற போது இலங்­கையால் எடுக்­கப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­ன­மா­னது மிகவும் பல­வீ­னப்­பட்ட தீர்­மா­ன­மென சுட்டிக் காட்­டி­யுள்ளார். ஆனால் சுமந்­திரன் போன்­ற­வர்கள் கூறு­கி­றார்கள் இது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நிக­ரான தீர்­மா­ன­மென்று. இலங்கை அர­சாங்­கத்­துக்­காக பிர­சாரம் செய்­கின்­றனர். இவர்கள் தமிழ் மக்­களின் நன்­மைக்­காக பேசு­கி­றாரா என்­பது தெரி­ய­வில்லை.

கேள்வி – தாங்கள் இரா. சம்­பந்தன் ஐயா மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன் வைப்­ப­தாக தமிழ் மக்கள் விசனம் தெரி­விக்­கின்­ற­னரே ?

பதில் – மிக விரை­வாக நாடு திரும்பி சம்­பந்தன் கைதிகள் விவ­கா­ரத்­துக்கு உட­னடித் தீர்­வொன்று காண வேண்­டு­மென்று கூறி­னேனே தவிர அவர் சிகிச்­சைக்­காக இந்­தியா சென்­றது பற்றி மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் கூற­வு­மில்லை.

சிறையில் உள்ள கைதி­களின் உற­வி­னர்­களும் பெற்­றோர்­களும் த.தே. கூட்­ட­மைப்பை குறிப்­பாக சம்­பந்தன் அவர்­க­ளையே நம்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அப்­ப­டி­யி­ருக்கும் போது அவர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டிய அவ­சரம் இருக்­கி­றது என்­ப­தையே எடுத்துக் கூறி­யி­ருந்தேன். தலைமைப் பீடத்தை பொறுத்­த­வரை சில விட­யங்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய கடப்­பாடு உண்டு என்­பதை மறுக்க முடி­யாது.

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர்கள் எவ்­வாறு நடந்து கொண்­டார்கள்? இப்­பொ­ழுது எப்­படி நடந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்? என்­பது யாவரும் அறிந்த விடயம். ஆட்சி மாறி­யி­ருக்­கி­றதே தவிர எம்மால் ஒன்­றுமே செய்ய முடி­ய­வில்லை என்றார்.

இவ்­வி­வ­கா­ரங்கள் குறித்து மட்­டக்­க­ளப்பு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா. அரி­ய­நேந்­திரன் கருத்து தெரி­விக்­கையில்…த.தே.கூ. அமைப்பின் தலைவர் அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்பில் அவர் எடுத்த முயற்­சிகள் அதிகம். ஏலவே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ருடன் நேர­டி­யா­கவே பல­முறை உரை­யாற்­றி­யுள்ளார்.

உண்­மையைச் சொல்லப் போனால் ஜனா­தி­ப­தி­யாலும் பிர­த­ம­ராலும் சம்­பந்தன் ஐயா­வுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி மீறப்­பட்­டி­ருக்­கி­றதே தவிர இவ்­வி­ட­யத்தில் ஐயாவை குற்றம் கூறு­வதில் உண்­மை­யில்லை. கைதிகள் விடு­தலை சம்­பந்­த­மாக அக்­கறை செலுத்­தாமல் சம்­பந்தன் ஐயா டெல்­கிக்கு சென்று விட்டார் என்று கூறு­வது பொறா­மையின் வெளிப்­பா­டாகும். தனது மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக சென்ற ஒரு­வரை இவ்­வாறு கொச்­சைப்­ப­டுத்­து­வது பண்­பற்ற செய­லாகும்.

அர­சியல் கைதி ஒருவர் இதே போன்­றுதான் குற்றம் சுமத்­தி­யுள்ளார். அவரின் கருத்­துப்­படி தங்கள் விடு­தலை தொடர்பில் த.தே.கூ. அமைப்பு ஒன்­றுமே செய்­ய­வில்­லை­யென்றும் ஐ.தே.கட்சி அர­சாங்­கமே நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது என்றும் கூறி­யி­ருந்தார். இது மிகத் தவ­றான கூற்­றாகும். 2004 ஆம் ஆண்டு காலத்­தி­லி­ருந்து த.தே. கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் சிறைக்­கை­தி­களை சிறை சென்று பார்த்து வந்­தி­ருக்­கிறோம். அவர்­களின் விடு­த­லைக்­காக போராடி வந்­தி­ருக்­கிறோம்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் கைதி­களின் விடு­தலை தொடர்பில் தீவி­ர­மாக செயற்­பட்­டி­ருக்­கிறோம். அவரும் நம்ப வைத்து ஏமாற்­றினார். இன்­றைய ஜனா­தி­ப­தியும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்பதே உண்மை. அதை விட்டு சம்பந்தன் பாராமுகமாக இருக்கிறார். அக்கறை எடுக்காமல் சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுக்களெல்லாம் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களாகும்.

வடக்கு முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ள அதிருப்தியானது ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சியின் பிரச்சார பணிகளில் பங்கெடுக்கவில்லை. த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவர் முதலமைச்சரின் வெற்றிக்காக கூட்டமைப்பை சேர்ந்த பலர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஒத்துழைக்கவில்லையென்பது அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டாகும்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரேயொரு விடயம் வலியுறுத்தப்பட்டது. தலைவர் சம்பந்தன் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு முடிவு காணப்பட்டதே தவிர முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் தீர்மானம் எடுக்கப்பட்டது போல் சுமந்திரன் அவுஸ்திரேலியா வானொலிக்கு கொடுத்த பேட்டிதான் இவ் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

சுமந்திரனின் இக்கருத்தை வைத்துக் கொண்டு பலர் பல விதமாக வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை அவரை பதவி விலக்க வேண்டும் இவரை பதவி விலக்க வேண்டுமென்பது எமது நோக்கமல்லை. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. ஒவ்வொருவரையும் விமர்சித்துக் கொண்டிருந்தால் கட்சியில் விரிசல் ஏற்படுமே தவிர ஒற்றுமையாக செயற்பட முடியாது என்பதே எமது கருத்தாகும்.

-திரு­மலை நவம்-

Share.
Leave A Reply

Exit mobile version