மங்­கை­யரின் பாதங்கள் தாமரை இதழ்­களைப் போன்று சிறந்த நிற­மு­டை­ய­ன­வாக அமைந்­தி­ருந்தால் அத்­த­கைய மங்­கை­யர்கள் சத்­குண சம்­பத்­துகள் உடை­ய­வர்­க­ளா­கவும், சங்­கீத சாகித்­திய வித்­வா­சகம் பொருந்­தி­ய­வர்­க­ளா­கவும், இனிய குர­லுடன் மகா­ராணி போன்ற சுகபோக சௌ­பாக்­கி­யங்­களை உடை­ய­வர்­க­ளா­கவும் விளங்­கு­வார்கள். புண்­ணிய காரி­யங்­களைச் செய்­வ­திலும் தான, தர்­மங்­களைச் செய்­வ­திலும் சிறந்து விளங்­கு­வார்கள்.

பாதங்கள் சிவந்த நிற­மு­டை­ய­ன­வா­கவும் தசை வளம் மிக்­க­ன­வா­கவும், மென்­மை­யா­ன­வை­யா­கவும் மழ­ம­ழப்­பா­கவும் நன்­றாகப் படியக் கூடி­ய­ன­வா­கவும் எப்­போதும் வெது­வெ­துப்­பா­ன­வை­யா­கவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறு­களைப் பெற்றுத் திகழ்­வார்கள்.

பாதங்கள் வெண்­மை­யா­கவோ, தங்­கத்தைப் போன்ற நிற­மு­டை­ய­வ­ன­வா­கவோ அமைந்­தி­ருக்கும் மங்­கை­யர்கள் மகா பாக்­கி­ய­சாலி­க­ளா­கவும் கண­வ­னுக்கு ஏற்ற நல்­ல­தொரு மனை­வி­யா­கவும் அன்­ன­தானம் செய்­ப­வர்­க­ளா­கவும் பெரி­யோர்­களைப் பக்­தி­யு­டனும், மரி­யா­தை­யு­டனும் ஆத­ரிக்கும் நற்­கு­ண­மு­டை­ய­வர்­க­ளா­கவும் விளங்­கு­வார்கள்.

புண்­ணிய நதி­களில் நீராடிப் புண்­ணிய திருத்­த­லங்­க­ளுக்­கும் திருக்­கோ­யில்­க­ளுக்கும் சென்று தெய்வ தரி­சனம் செய்­வதில் ஆர்வமுடையவர்­க­ளா­கவும் திகழ்­வார்கள்.

சாந்த சுபா­வமும், தெய்வ பக்­தியும் மிக்க இவர்கள், கண­வரின் பணி­வி­டை­களை அன்­பு­டனும் பொறுப்­பு­டனும் செய்யும் நற்­குண நற்­பண்­பு­களைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் இருப்­பார்கள்.

பாதங்கள் முர­டா­கவும் கெட்­டி­யா­கவும் நிறம் மாறியும் காணப்­ப­டு­வது போக­விச்சை குறைவைக் குறிப்­ப­தாகும்.

வெண்மை நிறத்­து­டனும், கோண­லா­கவும், வறண்டும் காணப்­ப­டு­வது வறு­மையைக் குறிக்கும். வெண்மை நிற­மா­கவும் சம­மில்­லா­மலும் கல்லைப் போன்று கடி­ன­மா­கவும் இருந்தால் துன்­பங்கள் அதி­க­மாகும். கருமை நிற­மாக இருப்பின் நல்ல அமைப்­பு­களைக் கெடுத்­து­விடும்.

பாதங்­களைப் பச்சை இலையின் பழுப்பு நிற­மு­டை­ய­ன­வாகப் பெற்­ற­வர்கள் கொடூர மன­மு­டை­ய­வர்­க­ளா­கவும், நல்­லோரைப் பழிப்பவர்களா­கவும் தெய்வ நம்­பிக்­கை­யற்­ற­வர்­க­ளா­க­வும், நாத்­திகம் பேசு­ப­வர்­க­ளா­கவும் இருப்­ப­தோடு உடல் தூய்மை, மனத்­தூய்மை, ஆத்ம சுத்தம் அற்­ற­வர்­க­ளா­கவும் இருப்­பார்கள்.

மென்­மை­யான பாதங்­களை உடைய மங்­கையர் சகல வித­மான சுகங்­க­ளையும் அனு­ப­விப்­பார்கள். அவர்­களின் பிறவி யோகத்தால் அவர்க­ளு­டைய வயது நிரம்­பிய தாய், தந்­தையர் கணவர் புத்­தி­ரர்கள் ஆகி­ய­வர்கள் நற்­ப­யன்­களை அடை­வார்கள். இவர்கள் எப்­போ­துமே நற்­கா­ரி­யங்­களைச் செய்­வ­தி­லேயே கவனம் செலுத்துவார்கள்.

பாதங்கள் அடிக்­கடி வியர்வை வடி­யும்­படி இருப்­ப­வர்கள், வறு­மையில் உழல்­வ­தோடு மிக அதி­க­மான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடி­ய­வர்­க­ளா­கவும், அற்­பத்­த­ன­மான மனப் போக்கை உடை­ய­வர்­க­ளா­கவும், எளிதில் ஏமாறக் கூடி­ய­வர்­க­ளா­கவும் மற்­ற­வர்­களை ஏமாற்றக் கூடி­ய­வர்­க­ளா­கவும், தன்­னம்­பிக்­கை­யற்ற வெகு­ளி­க­ளா­கவும் இருப்­பார்கள்.

பாதங்கள் தடித்துப் பருத்­தி­ருப்­ப­வர்­களும் உள்­ளங்கால் பூமியில் பதியும் படி­யாகத் தட்­டை­யாக இருப்­ப­வர்­களும் மிகவும் தேய்ந்த உள்ளங்­கால்­களை உடை­ய­வர்­களும் வீண் அப­வா­தங்­க­ளையும், பழிச் சொற்­க­ளையும் ஏற்க வேண்­டி­ய­வர்­க­ளா­வார்கள்.

வெறுப்­ப­டையும் இயல்பும், தயவு தாட்­சண்­ய­மற்ற மனப் போக்கும் கொண்­ட­வர்­க­ளாக இருப் பார்கள். பாதங்கள் பள்­ள­மாக இருப்பவர்கள் கண­வனால் சில காலம் கை விடப்­பட வேண்­டிய நிலையை அடை­வார்கள். சிலர் பல புரு­ஷர்­களை சுக போகத்­திற்கும், சுய தேவைப் பூர்த்திக்காகவும் நாடு­ப­வர்­க­ளாக இருப்­பார்கள்.

உள்­ளங்­கா­லி­லுள்ள ரேகைகள் தெளி­வா­கவும் மேல்­நோக்கிச் செல்­வ­ன­வா­கவும் அமையப் பெற்­ற­வர்கள், அன்பு மிக்க நல்­ல­தொரு கண­வ­னை­ய­டை­வார்கள்.

பெண்­களின் நட்­சத்­திர பலன்கள்

ஜென்ம நட்­சத்­தி­ரத்தை வைத்துப் பெண்­களின் குணா­தி­ச­யங்­களைக் கணிக்க முடியும்.

1. அஸ்வினி: கவர்ச்­சி­யா­ன­வர்கள். கனி­வா­ன­வர்கள். சுத்­த­மா­ன­வர்கள். கடவுள் பக்தி அதி­க­மி­ருக்கும்.

2. பரணி: சுத்­த­மில்­லா­த­வர்கள். சண்­டை­களை விரும்­பு­ப­வர்கள். வஞ்­சகம் மிக்­க­வர்கள். திரை மறைவில் தீமை புரி­ப­வர்கள்.

3. கிருத்­திகை: கொள்கைப் பிடிப்­பற்­றவர். கோபம் அதி­க­மி­ருக்கும். சண்டை போடு­ப­வர்கள். சுற்­றத்தை வெறுப்­ப­வர்கள்.

4. ரோகிணி: செல்வம் படைத்­த­வர்கள். அழ­கா­ன­வர்கள். மூத்­தோரை மதிப்­ப­வர்கள்.

5. மிரு­க­சீ­ரிடம்: சுகா­தா­ர­மா­ன­வர்கள். அழ­கா­ன­வர்கள். ஆடை, ஆப­ரண யோகம் பெற்­ற­வர்கள். தரும காரி­யங்­களில் ஈடுபாடு உடை­யவர்.

6. திரு­வா­திரை: குரோத குணமும், நய வஞ்­ச­கமும் படைத்­த­வர்கள். ஆத்­திரம் மிக்­க­வர்கள். வீண் செலவு செய்­ப­வர்கள்.

7. புனர்­பூசம்: பண்­பா­ன­வர்கள். அடக்க மான­வர்கள். அழகும், லட்­ச­ணமும் மிக்க கண­வரைப் பெறு­வார்கள். சுய கௌரவம் படைத்­த­வர்கள்.

8. பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்­களைப் படைத்­த­வர்கள். அழ­கா­ன­வர்கள்.

9. ஆயிலியம்: அழுது ஆர்ப்­ப­ரிப்­பவர். ஆபாச வார்த்­தை­களை அள்ளி வீசு­பவர். விசு­வா­ச­மில்­லா­த­வர்கள். ரக­சியம் காக்கத் தெரி­யா­த­வர்கள்.

10. பூரம்: சந்­தோஷ சல்­லாபம் மிக்­கவர். செல்­வாக்கு மிக்­கவர். நீதி நெறி வழி நடப்­பவர். தைரி­ய­மா­ன­வர்கள்.

11. உத்­திரம்: சரச சல்­லா­பத்தை அனு­ப­விப்­பவர். ஒழுக்­க­மா­ன­வர்கள்.

12. அஸ்தம்: சுக­போ­க­மாக வாழ்­வார்கள். கவர்ச்­சி­யா­ன­வர்கள். நுண்­கலை வல்­லு­நர்கள்.

13. சித்­திரை: வனப்பும், வசீ­க­ரமும் உடை­ய­வர்கள். அழ­கா­ன­வர்கள்.

14. சுவாதி: ஒழுக்­க­மா­னவர், நல்லோர் நட்பைப் பெற்­றவர். எதிர்ப்பை வெல்லும் குண­மு­டையோர்.

15. விசாகம்: சாஸ்­திர, சம்­பி­ர­தா­யங்­களைக் கடைப்­பிடிப்பவர். அறி­வாற்றல் மிக்­க­வர்கள்.

16. அனுஷம்: தியாக குணம் படைத்­த­வர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடை­ய­வர்கள்.

17. கேட்டை: சத்­திய நெறி காப்­பவர். சந்­தோ­ஷ­மா­ன­வர்கள். சுற்­றத்­தாரை நேசிப்­பவர்.

18. மூலம்: குரோ­த­மா­ன­வர்கள். வெறுப் பும், விகற்­பமும் மிக்­க­வர்கள்.

19. பூராடம்: குடும்­பத்தில் சிறந்­த­வர்கள். அதி­கார அந்­தஸ்து மிக்­க­வர்கள்.

20. உத்­தி­ராடம்: பேரும், புகழும் மிக்க வர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுப விப்பவர்கள். உல்லாசவாசிகள்.

21. திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக்கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

22. அவிட்டம்: சகல சௌபாக்கியங்களை யும் பெற்றவர்கள். பெருந்தன்மையானவர் கள். கருணை மிக்கவர்கள். நேர்மையான வர்கள்.

23. சதயம்: பிற பெண்களை நேசிப்பவர் கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப்பாக இருப்பவர்கள்.

24. பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

25. உத்­தி­ரட்­டாதி: பாச­மா­ன­வர்கள். அறிவும், ஆற்­றலும் மிக்­க­வர்கள். உண்­மையை விரும்­பு­ப­வர்கள்.

26. ரேவதி: சம்­பி­ர­தா­யங்­களை மதிப்­ப­வர்கள். கட்­டுத்­திட்­டங்­க­ளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

27. மகம்: ஆசார அனுஷ்டானங்களை அனுசரிப்பவர்கள் பாசமிக்கவர்கள்

Share.
Leave A Reply

Exit mobile version