“என்னுடைய அறியாமையினால் நான் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானேன். ஆயினும், நான் எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவள் என்று வெளியில் கூறினால் என்னை எல்லோரும் வெறுத்து விடுவார்களோ, என்ற பயத்தில் என் உறவுகள் யாரிடமும் இது தொடர்பாக கூறி ஆறுதல் பெற நான் விரும்பவில்லை…”

பெண்­க­ளிடம் திரு­மண கன­வு­க­ளுக்கு பஞ்­ச­மி­ருக்­காது. ஆயிரம் ஆசை­க­ளையும் , கன­வு­க­ளையும் மனதில் சுமந்­த­வாறு தம் திரு­மண நாளுக்­காக காத்­தி­ருப்­பார்கள்.

நானும் அவ்­வாறே என் திரு­மண வாழ்க்கை தொடர்­பாக பல்­வேறு கன­வுகள் கண்டேன். ஆனால், என்­னு­டைய கன­வுகள் அனைத்­துமே கணப்­பொ­ழுதில் கரைந்து போய்­விட்­டன.

இன்று நான் ஏன் திரு­மணம் செய்து கொண்டேன் ? என்று என்னை நானே பல­முறை கேள்வி கேட்­டுக்­கொள்­கின்றேன். …….என்­னு­டைய திரு­மண வாழ்க்கை என் உற­வு­களை என்­னி­ட­மி­ருந்து தூரத் தள்­ளி­யது….இன்று உரி­மை­கொள்ள ஆயிரம் உற­வுகள் இருந்த போதும் உள்­ளத்தைப் புரிந்­து­கொண்டு உதவி செய்ய எனக்கு யாரு­மில்லை. நானும் என் மகனும் தனித்தே வாழ்­கின்றோம். “

இது எச்.ஐ.வி. தொற்­றுக்­குட்­பட்ட நிலையில் கண்டி தொற்றுத் நோய்த் தடுப்பு பிரிவில் பல வரு­டங்­க­ளாக சிகிச்­சை ­பெற்று வரும் ரிஹா­னாவின் உள்­ளக்­கு­மு­ற­லாகும்… (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது)

ரிஹானா தொடர்ந்து தமது கடந்த காலம் தொடர்­பாக எம்­முடன் பகிர்ந்­து­கொண்ட போது,

என்­னு­டைய பிறப்­பிடம் திரு­கோ­ண­மலை. நான் தாய், தந்தை , இரு சகோ­த­ரிகள், இரு சகோ­த­ரர்கள் என்ற குடும்­பத்தில் மூத்­தவள்.

தந்தை விவ­சா­யத்தை தொழி­லாக செய்து வந்தார். கஷ்­டப்­பட்­டாலும் எங்­க­ளு­டைய குடும்­பத்தில் மகிழ்ச்­சிக்கு குறைவிருக்­க­வில்லை.

எனினும், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்­பெற்ற ஆழிப்­பே­ரலை அனர்த்தம் குரு­விக்­கூடாய் இருந்த எம் குடும்­பத்தை சிதைத்­தது.

நானும் எனது சகோ­த­ரர்­களில் ஒரு­வரும், சகோ­த­ரி­களில் ஒரு­வரும் மத்­திய மலை­நாட்டு பகு­தி­களை நோக்கி சுற்­றுலா சென்­றி­ருக்­கையில், என் தாய், தந்தை, மற்­றைய சகோ­தரர், சகோ­தரி ஆகி­யோரை சுனாமி பேரலை அள்ளிச் சென்­றது.

இறு­தியில் அவர்­களின் உடல்­களை கூட எங்­களால் பார்க்க முடி­யாமல் போனது. பல மாதங்கள் கழித்தே நாங்கள் மீண்டும் திரு­கோ­ண­ம­லைக்கு வந்தோம்.

தாய், தந்தை, உடன்­பி­றந்த உற­வு­களை இழந்த சோகம் ஒரு பக்கம் என்னை வாட்ட, மறு­பக்கம் என்­னோடு சுற்­றுலா வந்த சகோ­த­ர­னையும் சகோ­த­ரி­யையும் வளர்த்து ஆளாக்கும் மிக பெரிய பொறுப்பும் என் மீது சுமத்­தப்­பட்­டது.

அன்­றைய நிலையில் எங்­க­ளுக்கு உதவி செய்ய எங்கள் தாய், தந்­தையின் சொந்­தங்கள் யாரும் முன்­வ­ர­வில்லை. ஒரு பெரி­யம்மா (ரிஹா­னாவின் தாயின் மூத்த சகோ­தரி) மட்டும் தன்னால் முடிந்த சிறிய சிறிய உத­வி­களை எங்­க­ளுக்கு செய்தார்.

எனவே, ஏதா­வது ஒரு தொழிலைச் செய்து அவர்கள் இரு­வ­ரையும் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய தேவை எனக்­கி­ருந்­தது. அப்­போது நானும் திரு­மணம் செய்­து­கொள்ளும் வயதில் இருந்தேன்.

எனக்­குள்ளும் திரு­மணம் தொடர்­பாக பல்­வேறு கன­வுகள் இருந்­தன. எனினும், அன்­றைய நிலை­யில் அதைப் பற்றி எல்லாம் சிந்­திக்கும் மன­நி­லையில் நான் இருக்­க­வில்லை.

என்­னு­டைய ஆசைகள், கன­வுகள் அனைத்­தையும் எனக்­குள்­ளேயே போட்டு புதைத்து விட்டேன். எப்­ப­டி­யா­வது எனது தம்பி, தங்கை இரு­வ­ருக்கும் சிறப்­பான ஒரு எதிர்­கா­லத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்­பது மட்­டுமே என் சிந்தையி­லி­ருந்­தது.

எனவே, நான் தொழில் தேட ஆரம்­பித்தேன். எனினும் நான் பாட­சாலை கல்­வியை முறை­யாக பூர்த்­தி­செய்ய தவ­றி­யதால் எனக்கு தொழி­லொன்றை பெற்­றுக்­கொள்­வதும் சிர­ம­மா­க­வி­ருந்­தது. இதன்­போது ஊரி­லுள்ள வைத்­தியர் ஒருவர் எனக்கு உத­வி­யா­க­வி­ருந்தார்.

அவர் தன்­னு­டைய வீட்­டுடன் சேர்த்து நடாத்­தி­வந்த காரி­யா­ல­யத்தில் அவ­ருக்கு உத­வி­யாக என்னை வேலைக்கு சேர்த்தார்.

அங்கு வேலை செய்து கிடைக்கும் பணத்தில் அவர்கள் இரு­வ­ரையும் என்னால் முடிந்த அளவு எந்­த­வித குறையுமில்லாது பார்த்­துக்­கொண்டேன்.

எனது தங்கை படிக்கும் வய­தி­லேயே அவள் விருப்­பத்­துக்கு திரு­மணம் செய்­து­கொண்டாள். அதன்பின் தம்­பியும் பாடசாலை கல்­வியை பூர்த்­தி­செய்து ஒரு சில வரு­டங்­க­ளி­லேயே திரு­மணம் செய்­து­கொண்டான்.

இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் இரு வேறு கூடு­களை நோக்­கிச்­செல்ல நான் தனி­ம­ர­மானேன்.

அதற்கு பிறகு எனக்கு திரு­மணம், குடும்பம் என்­பவை தொடர்­பாக எல்லாம் நம்­பிக்­கை­யி­ருக்­க­வில்லை. வாழும் வரை சகோ­தர சகோ­த­ரி­க­ளு­டனும், அவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளு­டனும் இருந்­து­வி­டலாம் என்று இருந்தேன்.ஆயினும் தம்பியின் மனைவி பல சம­யங்­களில் என்னை ஓரம் கட்­டு­வதை நான் அவ­தா­னித்தேன்.

இந்­நி­லையில், தம்­பியும் தொழில் நிமித்தம் வெளி­நாட்­டுக்கு பய­ண­மானான். எனவே, அதற்கு பிறகு எனக்கு அங்கு இருக்க விருப்­ப­மி­ருக்­க­வில்லை. நான் சில காலம் என் பெரி­யம்­மா­வுடன் வந்து தங்­கி­யி­ருந்தேன்.

இத்­த­கைய ஒரு சூழ்­நி­லையில் பெரி­யம்­மாவின் மகன் மூலம் வரன் ஒன்று வந்­தது. பெரி­யம்­மாவின் மகனின் நண்பர் ஒருவர் ஆறு மாதகால விடு­மு­றையில் டுபா­யி­லி­ருந்து வந்­தி­ருந்தார்.

எனவே பெரி­யம்­மாவின் வீட்­டுக்கு வரும் சந்­தர்ப்­பத்தில் என்னை கண்ட அவர் என்னை திரு­மணம் செய்­து­கொள்ள விரும்­பு­வ­தாக பெரி­யம்­மா­விடம் கேட்­டி­ருந்தார்.

என் பெரி­யம்மா உட்­பட குடும்­பத்தில் அனை­வரும் “அவர் வெளி­நாட்டில் தொழில் புரிந்து மிகுந்த வச­தி­வாய்ப்­பு­க­ளுடன் இருக்­கின்றார்.

நீ அவரை திரு­மணம் செய்­து­கொண்டால் நீ சந்­தோ­ஷ­மாக வாழலாம்” என்­றெல்லாம் கூறி, அவரை எனக்கு திரு­மணம் செய்து வைக்க முயற்­சித்­தார்கள். எனினும், எனக்கு ஆரம்­பத்தில் அதில் விருப்­ப­மி­ருக்­க­வில்லை.

எனக்கு இனி என்ன திரு­மணம்? இப்­ப­டியே என் பொழுதை கழித்து விடு­கின்றேன் என்று அந்த வரனை தட்­டிக்­க­ழித்தேன். எனினும், என் உற­வு­களும், நண்­பர்­களும் என்னை விடு­வதாய் இல்லை. ஒரு பெண் வாழ் நாள் முழு­வதும் தனி­யாக வாழ முடி­யாது.

அவ­ளுக்­கென்று கட்­டாயம் துணை­யொன்று அவ­சியம் என்­றெல்லாம் எடுத்­துக்­கூறி என்னை திரு­ம­ணத்­துக்கு சம்­ம­திக்க வைத்­தனர்.

என் பெரி­யம்­மாவும் அவ­ரு­டைய மகனும் முன்­னின்று என் திரு­ம­ணத்தை செய்து வைத்­தார்கள். ஆறு மாத­கால விடு­முறையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த என் கணவர் திரு­ம­ண­மாகி இரண்டு மாதங்­களின் பின்னர் டுபாய்க்கு மீண்டும் பயண­மானார்.

அவ­ருடன் கழித்த அந்த இரண்டு மாத­கா­லமும் அவர் என்னை மிகுந்த அக்­க­றை­யுடன் பார்த்­துக்­கொண்டார். எங்களுக்குள் அந்­நி­யோன்­னி­ய­மான நல்ல உறவு துளிர் விட ஆரம்­பிக்­கின்­றது போன்ற உணர்வு எனக்குள் ஏற்­பட்­டது.

இந்­த­கா­லப்­ப­கு­தியில் ஒரு நாள் இரவு அவர் கடு­மை­யான தலை­வ­லியால் துடி­துடித்­துக்­கொண்­டி­ருந்தார். அப்­போது அவரை வைத்­தி­ய­ரிடம் செல்ல வரு­மாறு நான் அழைத்தேன். எனினும், அவர் என்­னிடம் பெனடோல் இருக்­கின்­றது.

அதை குடித்தால் சரி­யா­கி­விடும் என்­று­கூறி, பையி­லி­ருந்து வித்­தி­யா­ச­மான மருந்­து­வில்­லை­யொன்றை எடுத்து குடித்தார். எனக்கு அப்­போது அது பென­டோலை போல தெரி­ய­வில்லை.

நான் மறு­ப­டியும் அவ­ரிடம் இது பென­டோலா என்று சந்­தே­கத்­துடன் கேட்டேன்.அதற்கு அவர் அந்த நாட்டு பெனடோல் இப்­படி தான் இருக்கும் என்று கூறி­விட்டார்.

எனவே அது தொடர்­பாக தொடர்ந்து அவ­ரிடம் கேள்­வி­கேட்க நான் போக­வில்லை. அன்­றைய இரவு கழிந்­தது. எனினும் பல சந்­தர்ப்­பங்­களில் அவர் தலை­வலி என்று கூறிக்­கொண்டு பையி­லி­ருந்த அந்த மருந்து வில்­லை­க­ளையே குடித்து வந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, அவர் மீண்டும் தொழி­லுக்­காக வெளி­நாடு பய­ண­மானார். நான் அவ­ரு­டைய தாயுடன் அவரின் வீட்டில் இருந்தேன்.

அதன்பின் தொலை­பேசி அழைப்­புகள், குறுந்­த­க­வல்கள் என்று எங்கள் உறவு தொடர்ந்­தது. அது­மட்­டு­மின்றி, எங்கள் இரு­வ­ருக்­கு­மி­டையில் இருந்து வந்த உறவின் அடை­யா­ளமாய் நான் கரு­வுற்றேன்.

அதை என் கண­வ­ருக்கும் தெரி­யப்­ப­டுத்­தினேன்.நான் ஏழு மாத கர்ப்­பி­ணி­யாக இருக்கும் வரை என் கணவர் என்­னைப்­பற்­றியும் என் வயிற்றில் வளரும் குழந்­தை­யைப்­பற்­றியும் தொலை­பேசி ஊடாக விசா­ரிப்பார்.

எனினும், அதற்கு பிறகு என் கண­வ­ரி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்­பு­களோ குறுந்­த­க­வல்­களோ எது­வுமே வர­வில்லை. நான் அவ­ருக்கு பல தட­வைகள் அழைப்­பு­களை ஏற்­ப­டுத்­திய போதும் அவ­ரு­டைய தொலை­பேசி நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

என் மாமி­யிடம் இது பற்றி கூறிய போது அவர் என் மீதே பழியைப் போட்டார். எனவே, எனக்கு என்ன செய்­வது? யாரிடம் சென்று முறை­யி­டு­வது? என்று ஒன்­றுமே புரி­ய­வில்லை.

வயிற்றில் அவ­ரு­டைய குழந்­தை­யையும் மனதில் அவர் நினை­வு­க­ளையும் சுமந்­த­வாறு அவரின் அழைப்­பு­க­ளுக்­காக ஒவ்­வொரு நிமி­டமும் காத்­தி­ருந்தேன். எனினும், ஏமாற்­றங்­க­ளு­டனே என்­னு­டைய ஒவ்­வொரு பொழுதும் கழிந்­து­சென்­றது.

இந்­நி­லையில், என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் குழந்­தை­யொன்றைப் பெற்­றெ­டுத்தேன். ஆயினும், அந்த சந்­தோ­ஷத்தை என் கண­வ­ருடன் பகிர்ந்­து­கொள்ள அவர் என் அருகில் இருக்­க­வில்லை.

பல நாள் தொடர்­பில்­லாமல் இருக்கும் அவ­ரிடம் குழந்தை பிறந்­து­விட்­ட­தை­யா­வது தெரி­யப்­ப­டுத்த பல­வாறு முயற்­சித்தேன்.

எனினும், எது­வுமே எனக்கு சாத்­தி­யப்­ப­ட­வில்லை.குழந்­தையும் பிறந்­த­வுடன் குடும்­பத்தின் செல­வுகள் அதி­க­ரித்­தன. இதனால் எனக்கு பணம் தேவைப்­பட்­டது. ஆகவே, ன் குழந்­தையை மாமி­யிடம் விட்டு, வீட்­டு­வே­லை­க­ளுக்குச் சென்­று­வந்தேன்.

இது இவ்­வா­றி­ருக்க, எனது குழந்­தைக்கு ஏழு மாத­மி­ருக்கும். ஒரு நாள் வெளி­நாட்டு தொலை­பேசி இலக்­க­மொன்றிலிருந்து அழைப்­பொன்று வந்­தது.

நான் என் கணவர் தான் அழைப்பை ஏற்­ப­டுத்­து­கின்றார் என்ற பூரிப்பில் அழைப்­புக்கு பதி­ல­ளித்தேன். எனினும், மறு­மு­னையில் என் கண­வரின் நண்பர் ஒரு­வரே கதைத்தார்.

அவர் என்­னிடம் “உன் கணவர் இறந்­து­விட்டார் என்று கூறி­ய­துடன் அவர் எச்.ஐ.வி தொற்­றினால் பீடிக்கப்பட்டிருந்திருந்த­தா­கவும் அதனால் அவ­ரு­டைய உடலை இலங்­கைக்கு அனுப்ப முடி­யாது என்று சீல் வைத்து அங்­கேயே அடக்கம் செய்­து­விட்­ட­தா­கவும் கூறினார். எனக்கு அதற்கு பிறகு என்ன செய்­வ­தென்றே தெரி­ய­வில்லை.

திரு­ம­ணமே செய்­து­கொள்­ளாது வாழ்ந்த எனக்கு ஏன் இறைவன் இப்­ப­டி­யொரு வாழ்க்­கையை தந்தான் என்று கதறி அழுதேன்.

பதி­லுக்கு என் மாமியும் என்னை ராசி இல்­லா­தவள் என்­றெல்லாம் திட்டி வார்த்­தை­களால் என் மனதை புண்­ப­டுத்­தினார். அதன்­பின்னும் என் சோகம் தீர்ந்­த­பா­டில்லை.

கணவர் இறந்­து­விட்டார் என்ற செய்தி அறிந்­த­வுடன், இனி குழந்­தைக்­கா­க­வா­வது வாழ வேண்டும் என்ற முடி­வுக்கு வந்தேன்.வீடு வீ­டாகச் சென்று வேலை செய்து பணம் சம்­பா­தித்தேன்.

எனினும் அடிக்­கடி எனக்கு ஏற்­பட்ட சுக­வீனம் கார­ண­மாக என்னால் வீட்டு வேலை­க­ளுக்கு ஒழுங்­காக செல்ல முடியவில்லை.

இந்­நி­லையில் எங்கள் ஊருக்கு அடிக்­கடி வந்து சென்ற குரு­ணா­க­லி­லுள்ள முகவர் நிலை­ய­மொன்றைபிரதிநிதித்துவப்படுத்தும் தரகர் ஒரு­வரின் மூலம் எனக்கு மத்­தி­ய­கி­ழக்கு நாடொன்­றுக்கு தொழி­லுக்­காக செல்லும் சந்­தர்ப்பம் கிடைத்­தது.

எனவே குழந்­தையை மாமி­யிடம் விட்டு விட்டு இரண்டு வரு­டங்­க­ளுக்கு வெளி­நாடு சென்று வருவோம் என்ற முடிவில் அதற்­கான ஆயத்­தங்­களை செய்தேன்.

இறு­தி­யாக மருந்து பரி­சோ­தனை செய்­து­விட்டு அதன் அறிக்கை வரும் வரை ஒரு வாரம் காத்­தி­ருந்தேன்.

அதன்பின் வார இறு­தியில் அந்த முகவர் நிலை­யத்­தி­லி­ருந்து எனக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. “ரிஹானா, நீங்கள் உட­ன­டி­யாக இங்கே வாருங்கள்” என்று அவர்கள் கூறி­னார்கள்.

எனவே வெளி­நாட்­டுக்கு செல்­வது சரி­வந்­து­விட்­டது என்ற நம்­பிக்­கையில் அங்கு சென்றேன். ஆயினும், அவர்கள் ‘ரிஹானா, உங்­களை வெளி­நாட்­டுக்கு அனுப்­ப­மு­டி­யாது நீங்கள் (H.I.V) எச்.ஐ.வி தொற்­றுக்­குட்­பட்­டி­ருக்­கின்­றீர்கள்.

நீங்கள் உட­ன­டி­யாக கண்­டி­யி­லுள்ள தொற்று நோய் தடுப்பு பிரி­வுக்கு சென்று பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு சிகிச்­சை­பெற வேண்டும், என்று கூறி­னார்கள்.

என் தலையில் இடியே வீழ்ந்­தது போல இருந்­தது. நான் உட­ன­டி­யாக தொற்று நோய் தடுப்பு பிரி­வுக்குச் சென்று சிகிச்­சை­பெற ஆரம்­பித்தேன். அங்கு என் குடும்ப விப­ரங்கள் தொடர்­பாக கேட்­டார்கள்.

இதன்­போது தான் எனது கண­வ­ருக்கு இருந்த எச்.ஐ.வி தொற்­றுக்­கா­ர­ண­மாக எனக்கும் இந்த தொற்று ஏற்­பட்­டுள்­ளது. என்­பதை நான் அறிந்­து­கொண்டேன்.

அது­மட்­டு­மின்றி, என்­னு­டைய கணவர் தலைவலிக்கு குடிக்கும் பெனடோல் என்று கூறி­யது எச்.ஐ.வி நோய் தொற்­றுக்கு உப­யோ­கிக்கும் மருந்­து­வ­கைகள் என்­ப­தையும் என் கணவர் உண்­மையை மறைத்தே என்னை திரு­மணம் செய்திருப்பதும் எனக்கு புரிந்­தது. அதற்கு பிறகு என்ன செய்­வது எல்லாம் என் கை மீறி போனது.

நான் எச்.ஐ.வி தொற்­றுக்­குட்­பட்­டவள் என்று வெளியில் கூறினால் என்னை எல்­லோரும் வெறுத்து விடு­வார்­களோ என்ற பயத்தில் என் உற­வுகள் யாரி­டமும் இது தொடர்­பாக கூறி ஆறுதல் பெற நினைக்­க­வில்லை.

நெருங்­கிய நண்பர் ஒரு­வரின் உத­வி­யுடன் கண்­டியில் வீடு ஒன்றை வாட­கைக்கு பெற்­றுக்­கொண்டு வந்து மக­னுடன் குடி­யே­றினேன்.

அங்கு ஹோட்­ட­லொன்றில் தொழில் செய்து பணம் சம்­பா­தித்தேன். என்­னு­டைய ஒவ்­வொரு வேலை­க­ளையும் நான் தனி­யா­கவே பார்த்­துக்­கொண்டேன்.

அங்கு கணவர் இல்­லாது கைகு­ழந்­தை­யுடன் இருந்த என்னை நோக்­கிய சமூ­கத்­த­வர்­களில் பார்வை வித்­தி­யா­ச­மா­க­வி­ருந்­தது. பலரும் பல­வாறு கதைத்­தார்கள் எனினும் நான் அவை எதையும் காதில் போட்­டுக்­கொள்­ள­வில்லை.

இந்­நி­லையில் என்­னு­டைய மக­னுக்கும் இந்த தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என்ற சந்­தேகம் எனக்குள் எழுந்­தது. எனவே இது தொடர்­பாக வைத்­திய அதி­கா­ரி­க­ளிடம் கேட்ட போது மக­னுக்கு ஒன்­றரை வயது வரும் வரை எச்.ஐ.வி தொற்றுக்குட்­பட்­டி­ருக்­கின்­றாரா? என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாது என்று கூறி­னார்கள்.

எனவே நான் மக­னுக்கு ஒன்­றரை வயது ஆகும் வரை காத்­தி­ருந்தேன். அது­மட்­டு­மின்றி, மக­னுக்கு தாய்ப்பால் வழங்­கு­வ­தையும் நான் நிறுத்­தி­விட்டேன்.

இது­இவ்­வாறு இருக்­கையில், மக­னுக்கு ஒன்­றரை வயது ஆனது. நான் மகனை பரி­சோ­த­னை­க­ளுக்­காக கொழும்பு அழைத்­துச்­சென்றேன்.

காலை 8.30 மணி­யவில் கொழும்பு தொற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் இருக்­க­வேண்டும் என்­பதால் நான் கண்டியிலிருந்து நள்­ளி­ரவு வேளையில் புறப்­பட்டு வந்தேன்.

இதன்­போது என் நடத்­தையில் சந்­தேகம் கொண்ட ஒரு சிலர் நான் இரவு வேளை­களில் பல ஆண்­களை சந்தோஷப்படுத்தி பணம் சம்­பா­தித்து வரு­வ­தாக பொலி­ஸா­ருக்கு போலி தகவலொன்றை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

இதனால் நான் கொழும்­புக்கு சென்று வரும் வழியில் விப­சா­ரத்தில் ஈடு­ப­டு­வ­தாக சந்தேகத்தின்பேரில் பொலிஸார் என்னை கைதுசெய்தார்கள்.

அந்த நிலையில் எனக்கு உதவிக்கு என்று யாரும் இருக்கவில்லை. நான் இரண்டு நாள் என் மகனுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டேன்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நான் என்னுடைய வைத்திய அறிக்கைகளை சமர்ப்பித்து என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நீதிபதியிடம் கூறினேன். அதன்பின்னரே நான் விடுவிக்கப்பட்டேன்.

இன்று என்னுடைய மகனுக்கு 8 வயதாகின்றது. கண்டியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கின்றான். வைத்திய பரிசோதனைகளின்படி எனக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கின்றது என்பதை அறியாது மகனுக்கு தாய்ப்பால் வழங்கியுள்ளமையால் மகனுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நிலையில் நானும் மகனும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியிருப்பதால் கண்டி தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றோம். என்னுடைய அறியாமையே என்னுடைய வாழ்வை அலங்கோலமாக்கியது….

Share.
Leave A Reply

Exit mobile version