ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் பொருட்டு வெளியான வீடியோவில் பிரபல பாடகியான கேட்டி பெர்ரி நிர்வாணத்துடன் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசார களம் சூடு பிடித்து வருகிறது. இதனிடையே பொதுமக்கள் அனைவரும் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என கூறி ஊக்குவிக்கும் பொருட்டு பல சமூக ஆர்வல அமைப்புகளும் வீடியோ வெளியிட்டு வருகிறது.
அதுபோன்ற ஒரு நகைச்சுவை வீடியோவில் தோன்றிய அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான கேட்டி பெர்ரி முழு நிர்வாணமாக தோன்றியுள்ளது பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர ஹிலாரி ஆதரவாளரான கேட்டி பெர்ரி அந்த வீடியோவில் நிர்வாணமாக தோன்றி தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை தவறாது வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.
அமெரிக்க கொடியின் வண்ணத்தில் ஆடை அணிந்து அந்த காட்சியில் தோன்றிய கேட்டி பெர்ரி, எதிர் வரும் தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்கிறார்.
31 வயதான பாடகி கேட்டி பெர்ரி பின்னர், தாம் இரவில் நிர்வாணமாக படுத்துறங்கவே ஆசைப்படுவதாக கூறிவிட்டு தமது உடையை கழட்டி வீசியுள்ளார்.
உடனே பொலிஸ் உடையில் வரும் இருவர் பாடகியை கைது செய்வது போன்று அந்த வீடியோ காட்சி நிறைவடைகிறது. செவ்வாயான்று வெளியான இந்த வீட்யோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.