பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் படுகொ லை செய்யப்பட்டுள்ளார்.
பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக் கொ லை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டபோது தெரியவந்துள்ள தகவலின்படி,
கொ லை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவன் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அதன்போது, சிறிய க த்தி ஒன்றினால், பெ ண்ணின் க ழுத்தை வெ ட்டி கொ லை செய்துள்ளார்.
இருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பெண்ணின் கணவரான இராணுவ சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்தவராவார்.
பண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் பெண்ணின் ச டலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இராணுவ சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.