20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாச்சார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ் நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்படடவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் இன்று அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் ஆகியயோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நூலக எரிக்கப்படட நினைவு நாள் நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.


இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version