♠ தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.

♠ தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

தைபே: சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது.

இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

ஆனால் இதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் ட்சாய் இங்வென் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

அப்போது அவர் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.

இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன் தினம் தைவானை நோக்கி சீனா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது.

71 போர் விமானங்கள் தைவான் எல்லையில் வட்டமடித்து பறந்தன. இதேபோல 8 போர் கப்பல்களும் தைவான் எல்லையில் நிறுத்தப்பட்டு போர் பயிற்சியினை மேற் கொண்டுள்ளது.

இன்று 3-வது நாளாக 70 போர் விமானங்கள் தைவான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதில் 8 ஜே.16 ரக ஜெட் விமானங்கள், 4 ஜே.1 விமானங்கள். 8 சூ-30 போர் விமானங்களும் அடங்கும். 11 போர் விமானங்களும் தைவானை நோக்கி அனுப்பப்பட்டு உள்ளன.

தைவானின் முக்கிய இலக்குகளை சீனா சுற்றி வளைத்து உள்ளதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

தைவான் ஜலசந்தி கடற் பகுதியில் தொடர்ந்து 3- வது நாளாக சீனா ராணுவ பயிற்சி நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமாக உள்ளது. எந்த நேரமும் போர் மூழலாம் என்ற அபாய சூழ்நிலையும் அங்கு உருவாகி இருக்கிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version