அதுக்குப் பிறகு வாகன சாரதிக்குப் போகும் வழியும் தெரிந்திருந்தது. புத்தளம்நோக்கி வாகனம் போய்க்கொண்டிருந்தது.

ஈற்றில் புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் அடர்ந்து வளர்ந்திருந்த மிகப்பெரிய தோட்டத்தனூடாகச் சென்றது.

அதன் ஆதி அந்தலையில் ஒரு சிறிய பங்களா இருந்தது. அந்தத்தென்னந் தோட்டம் 40-50 ஏக்கர் பரப்பளவு இருக்கும். அங்கே வெள்ளை ரொயோற்றோ கார் ஒன்று இருந்தது.

அந்தக் காரின் கண்ணாடிகள் நிழலாக்கப்பட்டிருந்தன. என்னை ஏற்றி வந்த வாகனம் அந்த ரொயோற்றா காருக்குப் பக்கத்தில் என்னை இறக்கிவிட்ட உடனேயே திரும்பிப் போய் விட்டது.

ரொயோற்றா காரில் இருந்து சுரேஸ் சலே இறங்கினார். கை குலுக்கிய பின் கதைத்தார். சைனி மௌலவிக்குப் போன் பண்ணிக் கேட்டபொழுது தாம் குருநாகலில் வந்துகொண்டு இருப்பதாகச் சொன்னர்.

ஏறத்தாள அரை மணித்தியாலத்தளவில் அவர்கள் வந்து விட்டார்கள். ஒரு வானில் 6 பேர் வந்த இறங்கினாங்கள். எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும். வான் வரும்பொழுது சுரேஸ் சலே தனது காருக்குள் ஏறிவிட்டார்.

வந்திறங்கிய சைனி மௌலவி எனக்கு சலாம் சொல்லிவிட்டு தனது சகோதரர் சஹிரானை அறிமுகப் படுத்தினார்.

அவர் தனது பெயர் „சஹிரான்’ என்று சொன்னார். சஹிரானோடு கைகுலுக்கிக் கதைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் முதலும் கடைசியுமான சஹிரானுடனான சந்திப்பு.

அதற்குப் பிறகு சுரேஸ் சலே இறங்கினார். சுரேஸ் சலேக்கு இவர்தான் சஹிரான் மௌலவி என்று நான் அறிமுகப் படுத்தியதோடு சுரேஸ் சலே „பழைய இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர், இப்போது மலேசியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளார்’ என்று சஹிரானுக்கு நான் அறிமுகப் படுத்தினேன்.

இவரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சஹிரான் சொன்னார். இன்றய இராணுவ உளவுத் துறையின் தலைவர் சுரேஸ் சலே சகிறானை நேரடியாகச் சந்தித்த உண்மை இதுவாகும்.
உடனேயே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுளைந்தார்கள். விட்டுக்குள்ளே கதிரைகள் போட்டு எல்லாம் றெடியாக இருந்தது.

நான் போகவில்லை. என்னைக்கூப்பிடவும் இல்லை. நான் வெளியில் நின்றிருந்தேன். மீற்றிங் 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது. நான் வெளியிலே காத்துக் கொண்டிருந்தேன்.

சஹிறான் தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது என்றார். எல்லோரும் தொழுவோம் என்று சொன்னார். என்னையும் கூப்பிட்டார். நானும் அவர்களோடு சேர்ந்து தொழுதேன்.

பிறகு சுஸே; சலே தனியாக என்னைக் கூப்பிட்டு எனக்குச் சொன்னார். பிள்ளையான் சிறையிலிருந்தும் வழக்கிலிருந்தும் வெளியிலை வாறதென்றால் கோதபாயா ஜனாதிபதியாக வந்தால் மாத்திரம்தான் முடியும்.

இல்லாவிட்டால் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டி வரும். இந்த மீற்றிங் பற்றி யாருக்கும் தெரியப்படாது என்று எனக்குச் சொன்னார். என்னை ஏற்றிக் கொண்டு போக வாகனம் வந்தது. நான் அந்த வாகனத்தில் மட்டக்கிளப்புக்குப் போனேன்.

அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து மீற்றிங் நடந்த விபரங்கள் எல்லாவற்றையும் சொன்னேன். பிள்ளையான் சொன்னார்: „கோதபாயாவை வெல்ல வைக்கிறதுக்கு சுரேஸ் சலே பெரிய பிளானில் வேலை செய்கிறார். நாங்கள் அதுக்கு உதவி செய்ய வேணும்.

அப்பதான் நான் nளியிலை வரலாம். ஆனால் இதுபற்றி ஆருக்கும் தெரியக் கூடாது. இந்த வனாத்து முல்லை சுரேஸ் சலே, சஹிறான் சதிக் கும்பல் சந்தித்த மீற்றிங் நடந்தது 2018 பெப்ரவரி முதலாவது கிழமை.

இது சஹிரானை சுரேஸ் சலே நேரடியாகச் சந்தித்தார் என்பதற்கான உண்மையான சாட்சியாகும்.

உதிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் முழுப் பொறுப்பும் பிள்ளையானையும், சுரேஸ் சலேயையும் இலங்கை இராணுவ உளவுத்துறையையும் சேரும்.

முஸ்லீங்களின் மேல் அந்தப் பழியைப் போடுவது எய்தவன் இருக்க அம்பை நோவதாகும். ஒரு குற்றத்தைச் செய்தவன், செய்வித்தவன், அதற்கு உடன் பட்டவன், அதை மௌனத்தால் அங்கீகரித்தவன் எல்லோருமே குற்றவாழிகள்.

11.2.2018 செப்டம்பரில் எங்கள் எல்லோரையும் சந்திக்க கோதபாய வரச் சொன்னார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ரி.எம்.வி.பி கட்சி எல்லோரும் போய் அவரது கொழும்பு ஹொகுவலை வீட்டில் சந்தித்தோம்.

நான், கட்சிச் செயலாளர் பிரசாந்தன், பொருளாளர் தேவராஜ், இனியபாரதி ஆகியோர் ஹொகுவலை வீட்டிற்குப் போனபோது அங்கே ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் கபிலர் ஹென்டர் விராதனை இருந்தார்.

அந்தக் கூட்டத்தில் கோதபாயா சொன்னார்: „ நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால்தான் பிள்ளையானை விடுவிக்க முடியும். முழுமையாக வேலை செய்யுங்கோ.

இந்தக் கூட்டம் நடந்து 2 மாதத்துக்குப் பிறகு, சுரேஸ் சலேயும் சஹிரானும் வனாத்துமுல்லையில் சந்தித்து 14 மாதங்களின் பின்; ஜனாதிபதி தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன் 21 ஏப்பிறில் 2019 உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடந்தது.

இந்த நிகழ்ச்சி ஒன்றே கோதபாயா நேரடியாக உயிர்தஞாயிறு கொலையில் சம்பந்தப்பட்டார் என்பதற்கான சாட்சியம்.

இந்தக் குண்டு வெடிக்கையுக்குள்ளை நான் மட்டக்கிளப்பில் இருந்தேன்.
270 பேர் கொல்லப் பட்டார்கள்.
500 பேருக்கு மேல் படுகாயமடைந்தார்கள்.

சியோன் தேவாயத்தில் தற்கொலைக் குண்டுகள் வெடித்தன.
சியோன் தேவாலயம்; ரி.எம்.வி.பி காரியாலயத்திலிருந்து 2 கில்லோ மீற்றர் தூரம்.
அந்த அன்று ஆர் செய்தார்கள் என்று தெரியாது.

நாடுமுழுவதும் பதட்மாக இருந்தது. தற்கொலைக் குண்டுத்தாக்குதலா அல்லது கிளைமோர் தாக்குதலா என்று வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன.

நான் உடனடியாகப் பிள்ளையானைச் சந்திக்கப் 11 மணிக்குப் போனேன்.

பிள்ளையானுக்கு நான் போவதற்கு முன்னர் சிறைக் காவலர் சொல்லி எல்லாம் தெரிந்திருந்தது. யாருக்கும்

ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான் சொன்னர். இது நம்முடைய கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும். சுரேஸ் சலேயின் கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும். இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும்.

அதுக்குப்பிறகு 2019 ஏப்பிறில் 22 ஆம் தேதி சஹிரான்தான் குண்டு வைத்து வெடிக்கப் பண்ணினார் என்ற செய்தி வெளிவந்தது.

2019 ஏப்பிறல் 23 ஆம் தேதி கல்முனையில் இராணுவம் சஹிரான் குழுவின் வீட்டைச் சுற்றி வளைக்கவே சைறானின் தம்பிகள் சைனி மௌலவி, றில்வான், சஹிறானின் வாப்பா ஹாசிம், சைனியின் மனைவி இராணுவத்தோடு சண்டை பிடித்து ஈற்றில் தற்கொலைக் குண்டு வெடித்துச் செத்தார்கள்.

சஹிறானின் மனைவியும் ஒரு பிள்ளையும் தப்பி விட்டார்கள். இவர்களின் மரணித்த உடலத்துக்கு உரிமை கோர ஒருத்தரும் வரவில்லை. இவர்களது பிணங்களை முஸ்லீம் சுடலைகளிலே புதைக்க விடவில்லை.

இந்தச் செய்திகள் வந்தவுடன் போட்டோக்களைப் பார்த்தவுடன் எனக்குப் பயம் வரத்தொடங்கியது.

நாங்கள் சந்தித்த அதே ஆட்கள்… ஏற்கனவே குறூப்போட்டோவும் தயாரித்து வைத்திருந்தார்கள்.

சுரேஸ் சலே சந்தித்த ஆட்கள் இவர்கள். பயம் மிகுதியாகியது.

பிள்ளையானைப் போய் 2019 ஏப்பிறில் 26ம் தேதி சந்தித்த பொழுது..என்ன நடக்கிறது எல்லாம் தற்கொலைத் தாக்குதலாக இருக்கு.

பிள்ளையான் சொன்னார் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. இதைப்பற்றி ஒன்றும் கதைக்கக் கூடாது.

பிறகு ரி.எம்.வி.பி-கோதபாயவுக்கு ஆதருவு என்று பிரகடனப் படுத்தியது.
மட்டக்கிளப்புக்குப் பிரச்சாரத்துக்கு வந்த மஹிந்தா ராஜபக்ச பிள்ளையானைச் சிறைக்குள் போய் பார்வையிட்டு „சுரங்கப்பாதையின் முடிவில் ஒளிக்கதிர்கள் தெரிகின்றன’ என்று கூறிவிட்டு வந்தார்.

பசில் நொவெம்பர் முதற் கிழமை மட்டக்கிளப்புக்குப் பிரச்சாரத்துக்கு வந்தபோது நானும் பசிலும் போய் பிள்ளையானைச் சிறையில் சந்தித்து கோதாபாயா வென்றாப் பிறகு நீ வெளியிலை வருவாய் என்று பசில் பிள்ளையானுக்குக் கூறினார்.

கோதாபாயா 69 லட்சம் வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார். அதற்குக் காரணம் தேவலயங்களின் குண்டு வெடிப்புத்தான். இலங்கைத் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது எப்பொழுதுமே இனவாத அதிர்ச்சிகள்தான்.

இலங்கைத் தேர்தல்களிலே பொருளாதார வேலைத்திட்டமோ, அரசியல்வேலைத் திட்டமோ துறைசால் புலமைசாலிகளோ பொருட்டேயல்ல. தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிரான இனவாதத்தை ஏற்றுக்கொள்ள சிங்கள மக்களின் மனங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன.

கோதபாய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடித்து ஒரு கிழமைக்குப் பிறகு அமெரிக்காவலிருந்து வந்தார்.

குண்டு வெடிப்புக்குப் பிறகு கோதபாயாவின் முக்கிய கோசம் தேசிய பாதுகாப்பு என்று ஒலித்தது. ஆரிடமிருந்து ஆரைப் பாது காப்பது.

அவர் வென்று ஜனாதிபதி ஆக வந்தவுடனே சுரேஸ் சலே மலேசியாவிலிருந்து டெல்கிக்கு ஒரு பாடநெறியில் கலந்துகொள்ள வந்தார்.

சுரேஸ் சலே இலங்கையில் அரச புலனாய்வு சேவை இயக்குனர் ஆக நியமிக்கப் பட்டார்.
அதுவரைக்கும் அந்தப் பதவிக்கு ஓர் இராணுவ வீரர் நியமிக்கப் பட்டதில்லை.

இதன் பின்பு பிள்ளையானை விடுவிக்கச் சொல்லி பசில் ராஜபக்ஷவிடம் நாங்கள் தாழ்மையுடன் கேட்டோம்.

பசில் ராஜபக்ஸ்ச ஒரு நாள் இது பற்றிக் கதைக்கத் தனியாக வரும்படி கேட்டார். 2020 மார்ச் மாதம் நான் பசிலைச் சந்தித்தேன்.

பசில் சொன்னார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பிள்ளையானை விடக் கூடாது என்பதிலே மிகக் கடுமையாக நிற்கிறார்.

நீங்கள் வழக்கை மேல்முறையீட்டுக்குக் கொண்டு போங்கோ. நான் ஒரு நீதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடி அவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று சொன்னார். அவர் அந்த நீதிபதியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் தந்து அவரைப் போய் சந்திக்குபடி சொன்னார்.

அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி துலிப் நவார்ஸ். நான் அந்த நீதிபதிக்குத் தொலைபேசி எடுக்க அவர் என்னை கொழும்பு-7 விகாரமா மாவத்தையில்; உள்ள கோப்பிக் கடையில் வந்து சந்திக்கச் சொன்னர்.

வழக்கு ஆவணம் முழுவதையும் அவரிடம் கொடுத்தேன். இதெல்லாவற்றையும் பார்த்துப்போட்டு என்னோடை கதைக்கிறன் என்று சொல்லிவிட்டுப் போயிட்டார்.

3 நாட்களுக்குப் பிறகு என்னைக் கோட்டுக்கு வரச் சொன்னார். அவரது காரியாலயம் ஹல்ஸ்ரொப் கோட்டுவழாகம் 4 ம் மாடியில் இருந்தது.

அவர் சொன்னார் இந்த வழக்கு கஷ்டமாக இருக்கிறது. அனைத்து ஆதாரங்களும் மிகவும் வலுவானவையாக இருக்கின்றன.

நீதிபதி சொன்னார் உங்கள் சட்டத்தரணி அணில் சில்வாவுக்குச் சொல்லுங்கோ. மட்டக்கிளப்பில் நடக்கும் வழக்கின் வாக்கு மூலத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யச் சொல்லி. அப்ப மேன் முறையீடு செய்தால் வழக்கு என்னிடம் வரும்.

நான் அந்த வழக்கை றூம் நம்பர் 201 க்குப் போடு வேன். அங்கே இரண்டு நீதிபதிகள் இருக்கிறார்கள்:

1. நீதியரசர் அச்சல வெங்கப்புலி

2.திருமதி தேவிகா

நான் அவங்களட்டைச் சொல்லிறன் வழக்கை உடனே எடுத்து அந்த வாக்கு மூலத்தை நிராகரிக்கச் சொல்லிறன்.

அணில் சில்வா உடனடியாக மேல்முறையீடு செய்தார். 3 கிழமைக்குள் வழக்கை எடுத்த நீதிபதிகள் துலிப் நவார்ஸ் 3 தவணை போட்டு பிள்ளையானுக்கு எதிரான வாக்கு மூலத்தைத் ரத்துச் செய்தார். (முதலாளிது;துவக் கோடுகளிலே உள்ள நீதியின் இலட்சணம் இதுதான்.)
இது எவ்வாறு நடந்தது.

பசில் ராஜபக்ஸ்ச திருகோணமலையைச் சேர்ந்த சட்டத்தரணி சஞ்சை இராசரத்தினத்தை துணை அற்றோணி ஜெனரலாகப் பதவி உயர்வு செய்தார்.

துணை அற்றோணி ஜெனரல் சஞ்சை இராசரத்தினம் தனது அதிகாரத்தின்மூலம் பிள்ளையானின் வழக்குக் கோப்புகள் எல்லாவற்றையும் தான்வாங்கி இல்லாமல் செய்து விட்டார். பிள்ளையானது வழக்கு முற்றாக இல்லாமல் போய்விட்டது.

ஆகஸ்ட் 5; 2020 பொதுத்தேர்தல் வந்தது.

பசில் சொன்னார் நீங்கள் தனியாகத் தேர்தலில்; போட்டியிடுங்கோ. அனுதாப வாக்கு பிள்ளையானுக்குக் கிடைக்கும்.

அதுவும் பிள்ளையானை வெளியில் கொண்டு வர உதவியாக இருக்கும். அதிலே ரி.எம்வி.பி படகுச் சின்னதில் போட்டியிட்டது. தேர்தலில் பிள்ளையான் வென்றார்.

ஓக்டோபரில் வழக்குத் தீர்ப்பு சாதகமாக வந்தது. சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தீர்ப்புக்கு எதிராக சுப்பிறீம் கோட்டில் மேன்முறையீடு பண்ணப் போறன். எங்களட்டை இன்னும் முறையான ஆதாரங்கள் இருக்கு என்றார்.

பிள்ளையானை வெளியில் விட்டால் குண்டுவெடிப்பு இரகசியம் சிலவேளை கசிந்துவிடக் கூடும் என்பதால் பிள்ளையானை விடுதலை செய்வதில் ராஜபக்சர்கள் கரிசனை காட்டவில்லைப் போலும்.

பாராள மன்ற அக்கத்தவர் பிள்ளையான் சிறைக்குள் இருக்கிறார்.

பிள்ளையான் தன்கைப்படக் கடிதம் ஒன்று எழுதி சுரேஸ் சலேக்குக் கொடுக்கச் சொன்னார். நொவெம்பர் 16, 2020 சுரேஸ் சலேயைப் பார்க்கப் போனேன்.

நானும் பிள்ளையான்ரை தம்பியும் அந்தக் கடிதத்தைக் கொடுக்கப் போனோம்.
என்னை உள்ளுக்குக் கூப்பிட்டுக் கதைத்தார். தனக்குத்தமிழ் சரியாக வாசிக்கச் தெரியாது எனச் சொல்லி என்னை வாசிக்கச் சொன்னார்.

அந்தக் கடிதத்தில் இருந்தது:

ஜெனறல் சாம்,

நீங்களும் உங்கள் அரசாங்கமும் எப்படிப் பவருக்கு வந்ததென்று உங்கடை ஜனாதிபதியட்டைச் சொல்லுங்கோ.

நான் இனியும் ஜெயிலில் இருக்க முடியாது. இனிமேலும் என்னை வெளியில் எடுக்க நடவடிக்கை எடுக்காவிடில் எல்லாரும் பிரச்சனையைச் சந்திக்க வேண்டி வரும். என்று கடிதத்தில் இருந்தது.

கடிதத்தை உடனே சுரேஸ் சாலை நெருப்பில் பற்ற வைத்துக் குப்பைக் கூடைக்குள் போட்டார். பிள்ளையானது மிரட்டல் வேலை செய்தது.

சுரேஸ் சாலை பாதுகாப்புச் செயலாளருக்கு உடனே தோலைபேசி எடுத்தார். மறுமொழி இல்லை.

பிறகு ஜனாதிபதியின் செயலாளர் ஜெயசுந்தரவுக்கு தொலைபேசி எடுத்தார். பதில் இல்லை.
தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறன் ரைம் தாங்கோ என்று சொல்லி
அதற்குப் பிறகு நொவெம்பர் 24,2020 பிள்ளையானுக்கு மட்டக்கிளப்பு மேல் நீதமன்றம் பிணை வழங்கியது.

அதற்குப் பிறகு ஜனவரி 13 ந் தேதி சட்டமா அதிபர் எல்லா வழக்கையும் இல்லாமற்செய்தார். அந்தவழக்கு இதோடு முடிந்தது. பிள்ளையானது வழக்கு ஆவணங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன.

சுரேஸ் சலே

இந்தக் காலப்பகுதில் ஐப்பசி 15,2021 தேதி சுரேஸ் சலே என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

காலை 10 மணிக்கு போனேன். அன்றைக்கு என்னுடைய கைப்பேசியைப் பாது காப்பாளர் வாங்கி விட்டே உள்ளே அனுமதித்தாங்கள்.

சுரேஸ் சலே தனது அறைக்குள் வைத்துத் தனது லாப் ரொப்பை ஓன் பண்ணினார். முதலாவதாக பாராளமன்றத்தில் ஹரிம் பெர்னாண்டோ பேசிய வீடியோவை என்னைப் பர்க்கும்படி சொன்னார்.

ஈஸ்ரர் தாக்குதல் ஜனாதிபதி கோதாபாயாவை அதிகாரத்துக்குக் கொண்டுவர நடந்த தாக்குதல். அது சரியாக ஆராயப்படவில்லை.

அதற்;கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய பங்களிப்பு உண்டு. சஹிரான் இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பில் இருந்தார்.

அதற்குப் பிறகு கத்தோலிக்க ஆயர்மாரின் சூம் மீற்றிங்கின் வீடியோ. ஆயர் சிறில்காமினி, மல்கம் ரன்ஜித் இருவரும் இந்தக் குண்டுத்தாக்குதல் கோதபாயாவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக செய்த சதித் தாக்குதல் என்றார்கள்.

இதில் பாதுகாப்பு புலனாய்வு சேவை இயக்குனர் சுரேஸ் சலே சம்பந்தப் பட்டிருக்கிறார். இதைப்பூரணமாக ஆராய வேண்டும் என்று சொல்கின்றனர்.( குறிப்பு:- இது அசாத் மௌலான ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்னதாகும்.

3 வது வீடியோவில் நளின் பண்டார பாரளமன்ற உறுப்பினர் சொல்கிறார்:’சஹஹரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கு.

ஆரம்பத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்பும் காசும் கொடுத்தார்கள். இந்தத் தாக்குதல் கோதபாயாவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான சதி முயற்சி. லப்ரொப்பை ஓவ் பண்ணிப் போட்hர்.

இது பற்றி உனக்கு ஏதும் தெரியுமோ என்று என்னிடம் சுரேஸ் சாலை கேட்டார். ஹரின்; பெர்னான்டோ பேசியது பேப்பரில் வந்தது. மற்றயவை எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.

நான் சஹிரானைச் சந்தித்தது எனக்கும் உனக்கும் பிள்ளையானுக்கும் மத்திரம்தான் தெரியும். பிள்ளையானுக்கு எல்லாம் தெரியாது. நீதான் சொல்லியிருக்க வேண்டும்.

அதுக்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். நான் அதுபற்றி யாரோடும் கதைக்கவில்லை. என்னுடைய கைத்தொலைபேசியை வாங்கினார்.

நான்பாஸ் இலக்கத்தைச்; சொன்னேன். என்னுடைய கைத்தொலைபேசியைப் பூரணமாகச் சோதனை செய்தார்.

2007 இல் இருந்து அவரை எனக்குத்தெரியும். அவர் மிகக் கடுமையாக இருந்தது இம்முறைதான். 10 மணிக்குப் போனேன். 1 மணிக்குத்தான் வெளியே விட்டார்.

எனக்கு விளங்கி விட்டது. இவர் என்னைக் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்று. வெளியே வந்து பிள்ளையர்னுக்குத் தொலைபேசி எடுத்தேன்.

சுரேஸ் சலே என்னைக் கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். சந்தேகப் படுகிறார். எனக்குப் பயமாகக் கிடக்கு.

பிள்ளையான் கேட்டார் நீ யாரோடையும் கதைச்சனியோ வென்று.
இரவுக்கு கொழும்புக்கு வாறன் என்றார்.

வழமையாகக் கொழும்புக்கு வந்தால் எந்த மீற்றிங்குக்கும் நான்தான் அவரோடு போவது வழக்கம்.

ஓக்டோபர் 16 ஆம் தேதி என்னைத் தொலைபேசியில் அழைத்து காலையில் ஒரு மீற்றிங்கும் போடத் தேவையில்லை.

நீங்கள் 2 மணிக்கு வந்தால்;போதும் என்று சொன்னார். பிள்ளையான் கதைக்கும் பொழுது 8 மணி இருக்கும். 9.30 க்கு பிள்ளையான்ரை சாரதி அமலன் எனக்குத் தொலைபேசி எடுத்தார். அண்ணன் மீற்றிங்குக்கு வெளிக்கிட்டிட்டார். நீங்கள் வரவில்லையா என்று கேட்டார். அப்பொழு நான் சொன்னேன் அண்ணன் மீற்றிங் ஒன்றும் இல்லை என்று சொன்னவரே. அப்பொழுது போனைக் கட்பண்ணி விட்டார்.

ஒரே குழப்பம்.

பிள்ளையானைத் தொலைபேசியில் மீற்றிங் இருக்கோ என்று கேட்க அப்படி ஒன்றும் இல்லை என்றார்.

2 மணிக்குப் பிள்ளையானைப்பார்க்க அவர் வீட்டுக்குப் போனேன். பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன,; பிள்ளையான்ரை சாரதியிடம் கேட்டேன:; அண்ணன் காலையில் எங்கே போனவர் என்று கேட்க அவர் சுரேஸ் சலேயட்டைப் போனவர் என்று சொன்னார்.

10 மணிக்கப் போய் 1 மணிக்குத்தான் வந்தவர்.

பிள்ளையான் வீட்டுக்குள்போய் கதைக்கும் பொழுது சுரேஸ் சலேயிடம் போனதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சுரேஸ் சலே உன்னைப் பற்றி சந்தேகப் படுகிறார். பிள்ளையான் இதைப்பற்றி ஆரோடையும் கதைச்சியோ என்று கேட்டார்.

சுரேஸ்; சலே சொன்னார்: பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதபதி இதைப்பற்றி கேட்டவர். தகவல் எப்படி வெளியானது என்று விசாரிச்சுச் சொல்லவேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்.

பிள்ளையானும் அப்படித்தான் கதைக்கிறார். யோசெப் பரராஜசிங்கம் வழக்கில் சீ.ஐ.டி 6 மாதத்துக்குப் பிறகுதான் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரைப் பிடித்தது.

அந்த ஆமிக் காறனின் தகவலை ஆர் சீ.ஐ.டி க்கு சொன்னது. நீதான் சொல்லியிருக்க வேண்டும் என்று சுரேஸ் சந்தேகப்படுகிறார்.

சுரேஸ் சலே கேட்டிருக்கக் கூடும். அதே நிலைப்பாடுதான் பிள்ளையானதும். ஆமியையும் நீதான் காட்டிக் கொடுத்தது. அந்த இராணுவம் கைது செய்யப்பட்ட பின்புதான்பிள்ளையான்ரை வழக்கு கடுமையானது.

பின்பு வீட்டுக்கு வந்து யோசிச்சன். நான் கடுமையான ஆபத்தில் சிக்கி இருக்கிறன். இந்த தாக்குதல் நடாத்தப்பட்ட பிறகு நிறைய அப்பாவி இளைஞர்கள் பிடிபட்டாங்கள்.

செய்தவர்கள் ஆரோ. செய்விச்சவர் ஆரோ. இதனால் பலன் அடந்தவர் யாரோ. ஸ்கொட்லண்ட்யாட் ஆய்வின் படி இப்படியான செய்கையால் ஆர் பயன் அடைவர்கள் என்று யோசிக்க வேண்டும்.

இதில் ஆளும் ராஜபக்ஸ கும்பலைத்தவிர ஒருத்தருக்கும் ஒரு லாபமும் இல்லை. இதனால் பெரிய இழப்பை அடைந்தது-தற்காலிகமாக என்றாலும் முஸ்லீம் சமூகம். மற்றயது கத்தோலிக்கச் சமூகம். உல்லாசத்துறை முற்றாக இழந்ததால் நாட்டுக்கு 5 பில்லியன் டொலர் கள் நட்டம்

எனக்கு ஓர் உண்மையான வைராக்கியம் வந்தது. ஆயிரம் குற்றவாளி தப்பலாம். ஓரு நிரபராதி பாதிக்கப் படக் கூடாது.

இவர்கள் என்னை விசாரிக்க முன்னரே என்மனதில் அந்த எண்ணம் உதித்திருந்தது. சந்தர்ப்பத்தின் கைதியாகி இவர்களிடமிருந்து மீழ வழிதெரியாமல் இருந்த எனக்கு இது உண்மையில் ஒரு பாக்கியமாகும்.

அன்றேல் இவர்களோடு சேர்ந்து மேலும் பெரிய பிழைகளை விட்டு மீளா நரகத்துக்கு ஆளாக வேண்டி வந்திருக்கும்.

ஈஸ்டர் குண்டு வெடித்தது, வெடிப்பித்ததும் யாரென்று சொல்லவேண்டு மென்று நான் முடிவெடித்துப் பல காலம்.

நாட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதும் நான் எடுத்த முடிவு சரி என்பதை இப்பொழுது வரும் பயமுறத்தல்களும் என்னுடைய முழுக் குடும்பமும் பாதிக்கப் படுவதும் ஒவ்வொரு நாளும் நிரூபின்கின்றன.

 

19.10.2021 இந்தியாவுக்குப் பேனேன்.

29. 10.2021 என்மனைவியும் பிள்ளைகளும் இந்தியாவுக்கு வந்தர்கள். அவர்களை எனது சக்திக்கு அப்பால் பிரியவேண்டிய துர்ப்பாக்கியம் வந்து விட்தே என்றதே என்ற வேதனை.

என்னுடைய தந்தையாரும் எனக்கு ஏழு வயதாகி இருக்கும்பொழுது முழுக் குடும்பபாரத்தையையும் ஏற்கும்படி விட்டார். தவிர்க்க முடியாததைத் தைலைநிமிர்ந்து ஏற்றுக்கொள் என்றொரு ஆங்கிலப் பழமொழியுண்டு.

நான் மனைவிக்குச் சொன்னேன். ரி.எம்.வி.பிக்கு வெளியாலை போறன். எனக்கும் பிள்ளையானுக்கும் பிரச்சனையாய் விட்டது.

நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மை நிலைபோம். என்று தமிழ்மொழியில் ஒரு பழமொழியுண்டு.

நெல்லிலே உமியின் ஒரு சிறு பகுதி ஒடிந்தாலும் அதை எப்படிக் கவனமாக ஒட்டினாலும் அது மீண்டும் முளையாது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.-குறள்-510.

ஒருவனை ஆராயாமல் நண்பனாக்குவதும் ஆராய்ந்து தெளிந்த நண்பன் மேல் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். இதைப் பிள்ளையானுக்கென்றே வள்ளுவர் எழுதியுள்ளார்.

நான் உடனடியாகவே இந்தியாவுக்குப் போய்விட்டேன்.
இந்தியாவில் இறங்கிய எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனச் சோர்வினால் பாதிக்கப் பட்டேன்.

அரசியல் வாழ்வு என்பது முன்னுக்கு உயர்த்தி பின்னுக்குத் தாழ்த்திவிடும். இது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்ட சமூகவியல் உண்மை. இடையில் இறந்த அரசியல்வாதிகள் அவமானத்திலிருந்து தப்பினாரகள்;.

எனது நண்பரான வைத்தியகலாநிதி எம்.இசட்.சப்றாட் ஐ தொலைபேசியில் அழைத்தேன். அவர் அப்பொழுது பாகிஸ்தானில் வசித்து வந்தார்.

அவர் ஒரு யு.என்.எச்.ஆர் புகலிடக் கோரிக்கையாளர். சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் யு.என்.எச்.ஆர் உடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார்.

நான் இந்தியாவில் இருந்தபோது, புதுதில்லியில் உள்ள சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டேன்.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தைத் தொடர்பு கொண்டேன். ஜெனிவாவில் சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன்.

சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச அகதிகள் கவுன்சில் ஆகியவற்றை மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு அஞ்சல் மூலமாவும் 02.12.2022 தொடர்பு கொண்டேன்.

இந்தியாவில் சர்வதேச பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரம் யு.என்.எச்.ஆர் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

நான் யு.என்எச்.ஆர் சென்னைக்கு மின்னஞ்சல் செய்தேன், பதில் இல்லை. சர்வதேச பாதுகாப்பு கேட்டு 06.12.2021 அன்று யு.என்.எச்.ஆர் சென்னைக்கு சென்றேன்.

அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுடன்; விவாதித்து, எனது புகலிட விண்ணப்பத்தைத் தொடர முடியாது என்று எனக்குப் பதிலளித்தனர்.

சர்வதேச பாதுகாப்பை எவ்வாறு பெறுவது என்பது குறித்து யு.என்எச்.ஆர் இந்தியா எனக்கு ஒரு வழியைக் காட்டவில்லை.

நான் மீண்டும் இருளால் சூழப்பட்டேன். 1951 அகதிகள் மாநாட்டில் இந்திய அரசாங்கம் ஒரு உறுப்பினர் அல்ல.

இந்திய அதிகாரிகள் ஏற்கனவே என்னை தேடி வருகின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

அதனால் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என உணர்ந்தேன். இந்தியாவிலுள்ள அகதிகள் ஆணையம் (யு.என்எச்.ஆர்) சர்வதேச பாதுகாப்புக்கான எங்கள் கோரிக்கையை தொடராததால் நான் அகதிகள் முகாம்களுக்கு செல்லவில்லை.

சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் மூன்றாம் நாட்டிலிருந்து மனிதாபிமான விசா வழங்கப்படாது என்று எனக்குப் பதிலளித்தது.

சுவிற்சலாந்துக்கு விசா வேண்டுமானால் சொந்த நாட்டிலிருந்துதான் விண்ணப்பிக்க வேண்டும். சுவிட்சர்லாந்திற்கு புகலிடம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றால் சுவிட்சர்லாந்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நீங்கள் சுவிட்சர்லாந்திற்குச் சென்ற பின்னரே நீங்கள் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியும். சுவிட்சர்லாந்துக்கு எப்படி போக முடியும். சுவிட்சர்லாந்து ஐரோப்பிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு தீவு. சுவிட்சர்லாந்திற்கு நீர் எல்லைகள் இல்லை. நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் மாத்திரம் செல்வதற்கு ஒரேயொரு வழி உண்டு..

அசாத் மௌலான.

உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளைப் பிள்ளையானும் சுரேஸ் சலேயும் எவ்வாறு தயார் செய்தார்கள்!!- அசாத் மௌலானா (பகுதி-2)

உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளைப் பிள்ளையானும் சுரேஸ் சலேயும் எவ்வாறு தயார் செய்தார்கள்!!- அசாத் மௌலானா (பகுதி-1)
Share.
Leave A Reply

Exit mobile version