இலங்கையின் வாழ்வதற்கான உரிமை அமைப்பு கடந்த மூன்று மாதங்களில்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தாக்குதல்கள் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது.

சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சர்வதேச சட்டத்தில்இடம்பெற்றுள்ள அடிப்படை மனித உரிமை இது இலங்கையின் சட்ட கட்டமைப்பிலும் காணப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பல சர்வதேச சமவாயங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றது இலங்கை சூழமைவில் சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சித்திரவதையை முழுமையாக தடை செய்வது சட்ட பாதுகாப்புகள் சர்வதேச கடப்பாடுகள் தடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் பாதிக்கப்பட்டவர்களிற்கான ஆதரவு பாரபட்சமின்மை விழிப்புணர்வு மற்றும் கல்வியூட்டல்

இலங்கை தனது சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழான கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் சித்திரவதைகளை தடுப்பதற்கான வலுவான பொறிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் குற்றவாளிகள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

செப்டம்பர் 7- 2023

தனது மருமகனை பாதுகாக்க முயன்றவேளை முதியபெண்மணியொருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

மத்துஹம கரன்பட்டரையை சேர்ந்த குஸ்மாவதி என்ற 65 வயது பெண்மணி தனது மருமகனான 27 வயது அசங்க சுரேஸ் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்றவேளை பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

செப்டம்பர் 23ம் திகதி மாலை இடம்பெற்ற அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் மத்துஹம கரன்பட்டரையை சேர்ந்த குஸ்மாவதி என்ற 65 வயது பெண்மணி தனது மருமகனான 27 வயது அசங்க சுரேஸ் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்றவேளை பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் அசங்க சுரேஸ் தனது வேலையிலிருந்து வீடு திரும்பும்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்திம சடருவன் – இருவரும் மத்துகம பொலிஸை சேர்ந்தவர்கள் .

அசங்க தன்னை கைதுசெய்யவேண்டாம் என சத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து குடும்பத்தவர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அசங்க அலறுவதை கேட்டதும் குஸ்மாவதி தனது பிள்ளைகளுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார் அவர் தனது மருமகன் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்றுள்ளார். சமிந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கையை பிடித்து அசங்கவை கொண்டு செல்லவேண்டாம் என மன்றாடியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அசங்க அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

எனினும் நிலைமை மோசமானதாக மாறியுள்ளது சமிந்த குஸ்மாவதியின் முகத்தில் குத்தி காதில் அடித்துள்ளார்.

அந்த தாக்குதல் காரணமாக அவர் கடும் உடல்வலியை எதிர்கொண்டார் அவரது குடும்பத்தினர் அவரை களுத்துறை நாகொட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதன் பின்னர் அவர் இரண்டாவது வோர்ட்டில் அனுமதிக்கப்பட்டார் செப்டம்பர் 8 ம் திகதி வரை அங்கு தங்கி சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கடும் சீற்றத்திற்குள்ளாக்கியது அவர்கள் விசாரைணகளை கோரினர்.

மத்துகம பொலிஸார் இதுவரை இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிடவில்லை இந்த சம்பவம் சட்ட அமுலாக்கல் பிரிவினா பலத்தை பயன்படுத்துதல் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒக்டோபர் 16-

போதைப்பொருள் தொடர்பான கைதின் போது பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கை பலவந்தப்படுத்தல்

ஹோகந்தரையை சேர்ந்த ரணவில சானக சமிந்த என்ற 33 வயது நபர் மாலபே பொலிஸார் தன்னை கைதுசெய்தவேளை ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொண்டனர் பலவந்தப்படுத்தினார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது உறவினர் லசந்த மதுசாங்கவின் விடுதலைக்குட பின்னரே தனதுதுன்புறுத்தல்கள் ஆரம்பமாகின என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட போதிலும் ஒரு வருடகாலம் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் லசந்தமதுசாங்க தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக மதுசாங்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்தே ரணவில சானக சமிந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.

ஒக்டோபர் 23- கெஸ்பாவ பொலிஸார் மரண அச்சுறுத்தல் விடுத்தனர் தாக்கினர் என இளைஞர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்- விசாரணைகள் இடம்பெறுகின்றன

23 ம் திகதி இளைஞர் ஒருவர் கெஸ்பாவ பொலிஸார் மரண அச்சுறுத்தல் விடுத்தனர் தாக்கினர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்.

17 ம் திகதி பல பொலிஸார் காரணம் எதுவுமின்றி அவரை கைதுசெய்தவேளை இது இடம்பெற்றது.

கைதுசெய்த பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவரை கொண்டுசென்று உடல்ரீதியான துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள் என அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

நவம்பர் 19-

பொலிஸாரின் சித்திரவதை குறித்த குற்றச்சாட்டுகளிற்கு மத்தியில் இளைஞர் மரணம் – மனித உரிமை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குடும்பத்தவர்கள் கருத்து

இலங்கை பொலிஸார் தாங்கள் தடுத்துவைத்திருந்தவேளை ஏற்படுத்திய காயங்கள் காரணமாக உயிரிழந்த 25 வயது இளைஞர் நாகராஜா அலக்சிற்கு நீதி கோரி வாழ்வதற்கான உரிமைகளிற்கான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

இந்த துயரமான சம்பவம் உடனடி பொலிஸ்சீர்திருத்தம் மற்றும் பொலிஸ்நிலையங்களில் காணப்படும் நிலைமையை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரங்களை நீதிபதிகளிற்கு வழங்கும் விதத்தில் இலங்கை தண்டனை கோவையில் திருத்தம் போன்றவற்றிற்கான வேண்டுகோள்களை தீவிரப்படுத்தியுள்ளது.

சிறிய திருட்டிற்காக கைதுசெய்யப்பட்ட சிறுவன் மரணம்

ஆலயமொன்றின் மணியை திருட முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் 14 வயது நாரயணன் தர்சத் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்,17 ம் திகதி நீதிமன்றம் சிறுவனை சீர்திருத்த பள்ளியிடம் கையளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

அங்கு பணியாற்றும் ஒருவரால் மோசமாக தாக்கப்பட்ட சிறுவன் 29 ம் திகதி உயிரிழந்தான்.

Share.
Leave A Reply

Exit mobile version