பீகாரின் பார் ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்குச் செல்லும் விக்ரம்ஷிலா விரைவு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் ஒரு குடும்பம் அவசரமாக ரயிலில் ஏற முயன்றனர்.
அப்போது, தான் இரண்டு குழந்தைகளுடன் ரயில் – நடைமேடை இடையே ஒரு பெண் விழுந்துவிட்டார். அவர் எழுந்திருப்பதற்குள், ரயில் புறப்பட்டுவிட்டது.
ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே தனது இரண்டு குழந்தைகளுக்குக் கேடயமாக அந்தப் பெண் படுத்துக்கொண்டர். இதைப் பார்த்த பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்து நின்றனர்.
ரயில் சென்ற பிறகும், அந்தப் பெண் எழுந்திருக்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோன பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். ரயிலில் சென்ற அந்தப் பெண்ணின் கணவர், ரயிலிலிருந்து குதித்து, மனைவி, குழந்தைகளை மீட்க வந்தார். இந்த சம்பவத்தில், இரண்டு குழந்தைகளுக்கும், அந்தப் பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என ரயில்வே காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Video: Train Passes Over Woman, Her 2 Children In Bihar. They Survive https://t.co/7u7prDle7R pic.twitter.com/Lg8wAPFb1e
— NDTV (@ndtv) December 23, 2023