மொஸாத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. Tzomet என்பது அவற்றில் மிகப்பெரிய பிரிவு. வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகள் போர்வையிலும், வியாபாரிகள் போலவும் இந்தப் பிரிவினர் இருப்பார்கள். சில நாடுகளில் உள்ளூர் ஆட்களையும் உளவாளியாக மாற்றி பணியில் சேர்ப்பார்கள்.

இஸ்ரேல் என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது `மொஸாத்’ (Mossad). அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துக்கு அடுத்ததாக உலகின் சிறந்த உளவு நிறுவனமாகக் கருதப்படுவது.

இதைத் தவிரவும் அவர்களிடம் இன்னும் இரண்டு உளவு நிறுவனங்கள் உண்டு. அவை, ராணுவத்தின் உளவுப் பிரிவான அமான் (Aman). உள்நாட்டு உளவுப்பிரிவான ஷபாக் (Shabak). இது Shin Bet என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

மொஸாத்
இஸ்ரேலின் தேசிய உளவுப்பிரிவாக மொஸாத் உலகெங்கும் அறிமுகம். சுமார் 7,000 பேர் பணிபுரியும் இது உலகின் பெரிய உளவு நிறுவனங்களில் ஒன்று.

உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று கொலைகள் செய்யும், குண்டுவைத்து கட்டடங்களை நொறுக்கும், விமானங்கள் உள்ளிட்ட எதையும் கடத்தும் ஓர் அமைப்பை பொதுவாக என்னவென்று சொல்வார்கள்? ‘தீவிரவாத அமைப்பு’ என்று கட்டம் கட்டி தடை செய்வார்கள்.

மொஸாத் அந்த வேலையைத்தான் அன்டார்டிகா தவிர்த்து அத்தனை கண்டங்களிலும் செய்துகொண்டிருக்கிறது.

உளவு பார்ப்பது, ரகசிய ஆபரேஷன்கள் செய்வது, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று இதன் பணிகள் ஏராளம்.

மொஸாத் அமைப்புக்காக ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழிக்கிறது இஸ்ரேல். இதில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பதெல்லாம் தேசிய ரகசியம். மொஸாத்தின் இயக்குநர் நேரடியாக இஸ்ரேல் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்பதால், வேறு எவரும் அவரைக் கேள்விகள் கேட்க முடியாது.

மொஸாத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. Tzomet என்பது அவற்றில் மிகப்பெரிய பிரிவு. வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகள் போர்வையிலும், வியாபாரிகள் போலவும் இந்தப் பிரிவினர் இருப்பார்கள். சில நாடுகளில் உள்ளூர் ஆட்களையும் உளவாளியாக மாற்றி பணியில் சேர்ப்பார்கள்.

இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பது இவர்களின் பணி. Caesarea என்பது ஸ்பெஷல் ஆபரேஷன்களைச் செய்யும் பிரிவு. எதிரி நாடுகளில் குண்டுகள் வைப்பது, வேதிப்பொருட்கள் செலுத்திக் கொலை செய்வது போன்ற பணிகளை இந்தப் பிரிவினர் செய்வார்கள்.

இதிலேயே Kidon என்ற துணைப்பிரிவு இருக்கிறது. இவர்கள் கொலைப்படையினர். இலக்கை மட்டும் இவர்களிடம் சொன்னால் போதும்.

போய் ஆளை சுட்டுக்கொன்றுவிட்டு வந்துவிடுவார்கள். Keshet என்ற பிரிவு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது.

ஒட்டுக் கேட்பது, எதிரி நாடுகளின் இணையதள நெட்வொர்க்கை முடக்குவது, எலெக்ட்ரானிக் உபகரணங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பது போன்ற பணிகளில் இந்தப் பிரிவினர் நிபுணர்கள்.

Metsada என்ற படு ரகசியமான பிரிவும் ஒன்று இருக்கிறது. எதிரி நாடுகளில் அரசுக்கு எதிரான கலக அமைப்புகளை உருவாக்கிக் குழப்பம் ஏற்படுத்துவது இவர்களின் வேலை.

மொஸாத் அமைப்பு ஏன் வெற்றிகரமான உளவு அமைப்பாகச் செயல்படுகிறது? அந்த அமைப்புக்காக வேலை செய்பவர்களின் பட்டியலைப் பார்த்தால் இது புரியும்.

மொஸாத்தில் பணிபுரியும் உளவாளிகள் எல்லோரும் Katsa என்று அழைக்கப்படுகிறார்கள். மொஸாத்துக்காக கொலைகள் மட்டுமே செய்யும் Kidon பிரிவில் இருப்பவர்கள் யார் யார் என்று மொஸாத்தில் இருக்கும் சீனியர் அதிகாரிகள் பலருக்கே தெரியாது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியில் இணைகிறார்கள்.

யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாடு புதிதாக உருவெடுத்தது என்பதால், உலகெங்கும் இஸ்ரேலை நேசிக்கும் யூதர்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்களைக் கண்டுபிடித்து மொஸாத் உளவாளிகள் தங்களுக்கு உதவி செய்ய வைக்கிறார்கள்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில், அவர் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கு யாரோ ஒருவர் கார் கொண்டுவந்து கொடுப்பார், துப்பாக்கி கொடுப்பார், ரகசியமான இடங்களுக்கும் கூட்டிப் போவார். அப்படி மொஸாத் உளவாளிகளுக்கு நிஜமாக இவர்கள் உதவுகிறார்கள்.

Sayanim என்று அழைக்கப்படும் இவர்களின் உதவியால்தான் மொஸாத் இயங்குகிறது. அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரம் சயானிம்களும், பிரிட்டனில் 5,000 சயானிம்களும் இருக்கிறார்கள் என்றால் மொஸாத்தின் பலத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இவர்களைத் தவிர, இஸ்ரேலில் வந்து உயர்கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாடுகளில் படிக்கப் போகும் இஸ்ரேல் மாணவர்கள் என்று பலரையும் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது மொஸாத்.

இதனால், நாம் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில், நினைத்தே பார்க்க முடியாத மனிதர்கள் மொஸாத்தின் ஏஜென்ட்களாக இருப்பார்கள். ஆம்பூர், கீழக்கரை போன்ற சிறிய நகரங்களில் மொஸாத் ஆசாமிகள் இருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர்கள் நெட்வொர்க் அந்த அளவு விரிவானது.

MiG-21 at the Israeli Air Force Museum in Hatzerim

மொஸாத்தின் ஆபரேஷன் திறமைக்கு இரண்டு சம்பவங்கள் உதாரணம்…

* அமெரிக்காவின் நவீன போர் விமானங்களைப் போலவே திறனுள்ள மிக்-21 ரக விமானங்களை ரஷ்யா உருவாக்கியது.

தன் நட்பு நாடுகளின் விமானப்படைகளுக்கு அவற்றை விற்றது. அந்த விமானத்தின் வடிவமைப்பு எப்படிப்பட்டது என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் பார்க்க ஆசைப்பட்டது அமெரிக்கா.

அவர்களுக்கு விமானத்தைக் கொடுப்பது ரஷ்யாவுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்று பயந்து எந்த நாடும் தரவில்லை. இஸ்ரேலிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது அமெரிக்க அரசு.

ஈராக் விமானப்படையில் ஒரு கிறிஸ்தவ விமானி இருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட மொஸாத் உளவாளிகள் அவரைக் கண்காணித்தனர். அவர் அரசுமீது அதிருப்தியில் இருப்பதை அறிந்தனர். ஒரு பெண்ணை அவருடன் பழகவைத்து காதல் வலையில் வீழ்த்தினர்

இமாத் ஃபயஸ் முக்னியே (Imad Fayez Mughniyeh)AP

இமாத் ஃபயஸ் முக்னியே (Imad Fayez Mughniyeh) என்பவர், லெபனானில் இருந்தபடி இஸ்ரேலுடன் மோதும் ஹிஸ்புல்லா அமைப்பில் நம்பர் 2 இடத்தில் இருந்தவர்.

ஹிஸ்புல்லா அமைப்பினரின் ராணுவத் தாக்குதல், உளவுப் பணிகள் என்று எல்லாவற்றையும் திட்டமிடும் இடத்தில் இருந்தவர்.

கொரில்லாத் தாக்குதல்களில் நிபுணர் என்று பெயர் வாங்கியவர். ‘பேய் போல யாராலும் கண்டறிய முடியாதவர்’ என்று அவரைச் சொல்வார்கள். அவர் எங்கே இருப்பார், எப்படி இருப்பார் என்பது சரியாகத் தெரியாது.

அவர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்களால் இஸ்ரேல் ஏராளமான இழப்புகளை சந்தித்தது. இஸ்ரேலுக்குள் தாக்குதல்கள் நடத்துவது மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேல் தூதரகங்களையும் தாக்கி பலரைக் கொன்றார்.

இதைத் தாண்டி அமெரிக்காவுக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தார் இமாத். எகிப்து, லெபனான் என்று பல நாடுகளில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதல்களுக்கு முன்பு அதிகம் அமெரிக்கர்களைக் கொன்றவர் என்று இவரைத்தான் குற்றம் சாட்டினார்கள்.

இவரின் திட்டமிட்ட தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல், லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் முழுமையாக வெளியேறினர். அதனால் லெபனான் மக்களால் அவர் ஹீரோ போலக் கருதப்பட்டார்.

அவரை எப்படியாவது கொல்லும் பொறுப்பை சி.ஐ.ஏ-வுடன் இணைந்து ஏற்றது மொஸாத். சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் தூதர் 2008 பிப்ரவரி 12-ம் தேதி ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் இமாத் கலந்துகொள்வதை மொஸாத் உளவாளிகள் அறிந்தனர். அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் விருந்து நடைபெற்றது. விருந்து முடிந்து இரவு பத்தரை மணிக்கு தனியாக தன் காருக்கு நடந்துவந்தார் இமாத்.

வழியில் ஒரு காரின் ஸ்டெப்னி டயரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்திருந்தனர் மொஸாத் ஆட்கள். அந்தக் காரை இமாத் கடக்கும்போது ரிமோட்டை இயக்கி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அருகில் இருக்கும் கட்டடங்களுக்குக்கூட சேதாரமில்லை, வேறு யாருக்கும் காயங்களும் இல்லை. துல்லியமாக இமாத்தை மட்டும் கொன்றனர்.

இப்படி வெற்றிகரமான ஆபரேஷன்கள் போலவே, சொதப்பிய சம்பவங்களும் நிறைய உண்டு. 1972 மியூனிச் ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் சிலரைக் கொன்றுவிட்டு, வேறு சிலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர் பாலஸ்தீன தீவிரவாதிகள்.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் பிளாக் செப்டம்பர் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் பலர் இணைந்து இதைச் செய்தனர்.

Operation Wrath of God

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அத்தனை பேரையும் தேடிப் பிடித்து அழிக்குமாறு அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து Operation Wrath of God என்ற பெயரில் மொஸாத் வெறியாட்டம் ஆடியது. ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பலர் கொல்லப்பட்டனர்.

போனில் குண்டு வைப்பது, வீட்டுக்குள் போய் சுடுவது, தனியாக எங்காவது சிக்கும் ஆசாமியைத் தாக்கிக் கொல்வது என்று எல்லாம் தொடர்கதையானது.

நார்வே நாட்டில் இவர்கள் தேடிய பெயரில் இருந்த அப்பாவி ஒருவரை மொஸாத் உளவாளிகள் கொன்றுவிட, அது அங்கே பெரிய வழக்காக மாறியது.

மொஸாத் உளவாளிகளைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது நார்வே. இதைத் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி, அந்த ஆபரேஷனையே கைவிட்டது இஸ்ரேல்.

மொஸாத்துடன் ஒப்பிடும்போது மற்ற இரண்டு உளவு அமைப்புகளும் சிறியவை. இவற்றில் ராணுவத்தின் உளவுப் பிரிவான அமான், எதிரி நாடுகள் மீதான சைபர் தாக்குதல்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. ராணுவத்தின் எந்தப் பிரிவிலும் சேராமல், தனிப் பிரிவாக இது இருக்கிறது.

உள்நாட்டு உளவுப்பிரிவான ஷபாக்கின் வேலை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புதான். இதில் மூன்று பிரிவுகள் உள்ளன. அரபு துறையின் முழு நேர வேலை, பாலஸ்தீனர்களைக் கண்காணிப்பதுதான். காஸா மற்றும் மேற்குக்கரையில் பாலஸ்தீனர்கள் சிலரையே தன் உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது இந்த அமைப்பு.

இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர்கள் துறை, யூதர்கள் மத்தியில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளையும், பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக இயங்கும் யூத அடிப்படைவாத அமைப்புகளையும் கண்காணிக்கிறது. மூன்றாவதாக செக்யூரிட்டி பிரிவு ஒன்று இருக்கிறது. நாட்டின் முக்கியமான இடங்களையும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பாதுகாப்பது இந்தப் பிரிவின் வேலை.

ஷபாக்கின் தலைவரும் பிரதமர் தவிர யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஹமாஸ் அமைப்பின் வெடிகுண்டு நிபுணரான யாஹ்யா ஆயாஷ் என்பவரை ஷபாக் அமைப்பே கொன்றது.

Israel Security Agency Shabak/Shin Bet

ஆயாஷின் மாமாவை தங்கள் உளவாளியாக மாற்றி, அவர் மூலம் ஆயாஷ் செல்போனில் வெடிமருந்தைப் பொருத்தி வெடிக்கச் செய்து கொன்றார்கள். இப்படி ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் பலரைக் கொன்றிருக்கிறது ஷபாக். இந்த அமைப்பினரின் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுகள் வீசும்போது, விமானத்தில் பக்கத்தில் அமர்ந்து இலக்கைக் காட்டுபவர்கள் இந்த அமைப்பினர்தான்.

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்படும் பாலஸ்தீன அரசியல் கைதிகளை கடும் சித்திரவதைக்கு ஆளாக்குவது ஷபாக் அதிகாரிகள்தான்.

இதுதொடர்பாக பலமுறை நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானாலும், அவர்களின் செயல்முறைகள் எதுவுமே மாறவில்லை. ஒரு நாற்காலியில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை வில் மாதிரி வளைக்கச் செய்து, கைகளையும் கால்களையும் நாற்காலியின் கால்களில் கட்டிப் போடுவது Shabach position எனப்படுகிறது.

மரணவலியில் துடித்துக் கதறினாலும், பல மணி நேரம் இப்படியே படுக்கைவைத்து விசாரணை நடத்துவார்கள். அப்பாவிகள் பலர் இதுபோன்ற கொடூர விசாரணைகளைத் தாங்க முடியாமல் செத்துப் போயிருக்கிறார்கள்.

ஸ்மார்ட்டான உளவு அமைப்புகள், நவீன ஆயுதங்கள், கொடூர வழிமுறைகள் எல்லாம் இருந்தும் இஸ்ரேல் ஏன் ஹமாஸ் போன்ற அமைப்புகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறது?

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 9: இஸ்ரேல் – 75 ஆண்டுகளாக நிரந்தர முற்றுகையில் இருக்கும் தேசம்!

 

 

Share.
Leave A Reply

Exit mobile version