திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த நிலையில், ரயில் மோதி பலியானதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்பே, மீனவ கிராமத்தைச்சேர்ந்த  40 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று இரவு தம்பலகமத்தில் இருந்து திருகோணமலையை நோக்கிச்சென்று கொண்டிருந்த  இரவு ரயிலானது சுமார் அதிகாலை 1.15 மணியளவில்  கொட்பே பிரதேத்தை கடக்கும்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளர்.