மூன்று காரணங்கள்: சூயஸ் கால்வாயை மீட்பது, எகிப்து அதிபரை பணியவைப்பது, அரபு தேசங்களுக்கும் ஐரோப்பாவின் மீது நிரந்தரமான பயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. (நிலமெல்லாம் ரத்தம் - 67)
இஸ்ரேல் உருவான போது காஸா பகுதி இஸ்ரேலின் பெருமைக்குரிய இடங்களுள் ஒன்றாக இருந்தது. 1948 யுத்தத்தின்போது அது எகிப்து வசமானதை ஏற்கெனவே பார்த்தோம். எப்படியாவது காஸாவை எகிப்திடமிருந்து மீட்டுவிடவேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் அடிப்படை எண்ணம். இழந்த பகுதியை மீ...
