அமெரிக்காவில் உள்ள 44 வயது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களை மேலாடையாக அணிந்து நடனம் ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 44 வயது பெண் Sara Mapelli என்பவர். இவர் ஒரு யோகா ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களையே மேலாடையாக அணிந்து சிறிய அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நடனத்தின் இடையிடையே சில தேனீக்களை வெளியே எடுத்து பறக்கவிட்டார்.
இவர் ஆடிய இந்த நடனத்தை மிகவும் அற்புதமக பிரபல போட்டோகிராபரான Holly Wilmeth என்பவர் அற்புதமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த சாதனையை செய்த Sara Mapelli அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேனீக்கள் எனது உடலில் பரவும்போது நான் முழுக்க முழுக்க யோகா நிலையில் இருப்பேன்.
எனது யோகா நிலைக்கு இந்த தேனீக்கள் கட்டுப்படும். இதற்காக நான் பல வருடங்கள் பயிற்சி எடுத்தேன்” என்று கூறியுள்ளார். இவருடைய இந்த சாதனையை நேரில் த்ரில்லுடன் பலர் கண்டுகளித்தனர்.