ilakkiyainfo

ilakkiyainfo

ஜெயலலிதா, சசிகலா பேசிய சர்ச்சை வீடியோ: வருமான வரித்துறை சோதனையின் பகீர் பின்னணி?

ஜெயலலிதா, சசிகலா பேசிய சர்ச்சை வீடியோ: வருமான வரித்துறை சோதனையின் பகீர் பின்னணி?
November 10
01:51 2017

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா தொடர்புடைய பலரது வீட்டிலும், நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்கு காரணம் ஒரு வீடியோ என தகவல்கள் வருகின்றன.

10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை ஜெயா தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது.

மேலும் ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வரும் விவேக் தொடர்புடைய மற்ற சில இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சசிகலா, தினகரன் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கொடநாடு எஸ்டேட், சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு என 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

முறையாக வருமான வரி கட்டாததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டாலும் இது ஒரு வீடியோவுக்காக நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் சசிகலாவுடன் பேசிய வீடியோ ஒன்று தங்களிடம் உள்ளதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார்.

இதற்காகத்தான் தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்டால் பலருடைய சாயம் வெளுத்துவிடும்  எனவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார். இந்த சூழலில் திவாகரன் வீட்டிலும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News