கடந்த சில ஆண்டுகளாகவே த்ரிஷாவின் திருமண செய்திகள் ஊடகங்களில் அடிபடுவதும், பின்னர் அது த்ரிஷாவினாலும் அவரது அம்மாவினாலும் மறுக்கப்படுவதுமாக இருக்கிறது. ராணாவுடன் காதல், ரகசியமாய் திருமணம் முடிந்து விட்டதாக எத்தனையோ செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதை த்ரிஷா ஒத்துக்கொள்ளவே இல்லை. ராணா யாரையாவது காதலிக்கிறார் என்று செய்தி வருகையில் அவரும், த்ரிஷாவும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி தவறாமல் வரும்.
சமீபத்தில் கூட கன்னட நடிகையுடன் ராணாவை கனெக்சன் செய்து செய்தி போட்டிருந்தனர். மலேசியாவில் நடைபெற்ற சிமா விருது விழாவுக்கு ராணாவும், த்ரிஷாவும் ஜோடிபோட்டு சென்றனர்.
அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பற்றி இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை.
தொழிலதிபருடன் நிச்சயம்
இந்த கிசுகிசு முடிவதற்குள்ளாகவே தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாக அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளனர். அது நிஜமா அல்லது ஏதாவது சினிமாவிற்காக எடுக்கப்பட்டதா என்று கூறவில்லை த்ரிஷா.
இது எந்த படத்திற்கு?
சில மாதங்களுக்கு முன்பு கன்னட படம் ஒன்றில் திருமண கோலத்தில் போஸ் கொடுத்த த்ரிஷாவை பார்த்து அவரது திருமணம் முடிந்துவிட்டதாக செய்தி வெளியானது. அதுவும் பொய்யாகிப் போனது.
மணப்பெண்ணாய் த்ரிஷா
த்ரிஷாவுக்கு நிஜத்தில் திருமணம் நடக்க இன்னும் எத்தனை நாள் வேண்டுமானாலும் ஆகட்டும். மணப்பெண்ணாய் அவர் தங்க நகைகள் அணிந்து பட்டுப்புடவை சரசரக்க கொடுத்துள்ள போஸ்கள் சும்மா அள்ளிக்கொண்டு போகிறது.