அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Sports Illustrated என்ற பத்திரிகையின் 50 வது இதழை மிகவும் வித்தியாசமாக வெளியிட முடிவு செய்தது.
அதன்படி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட முடிவு செய்யப்பட்டது.
இந்த வாய்ப்புக்காக ஹாலிவுட்டில் இருந்து ஏகப்பட்ட நடிகைகள் போட்டி போட்டனர். ஆனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றது Kate Upton என்ற நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் போயிங் 727 ஜி ஃபோர்ஸ் என்ற விமானத்தை ராணுவத்தில் இருந்து வாடகைக்கு எடுத்த Sports Illustrated நிறுவனம், புவியீர்ப்பு விசை இல்லாத உயரத்திற்கு அந்த விமானத்தை செலுத்தி, அங்கு மிகவும் ரிஸ்க்காக புகைப்படம் எடுத்தது.
Kate Upton பிகினி உடையில் விதவிதமாக புவியீர்ப்பு விசை இல்லாமல் மிதந்தபடியே போஸ்கள் கொடுக்க அதை புகைப்படம் எடுத்தவரும் மிதந்தபடியே புகைப்படம் எடுத்தார்.
ஒரு தனியார் நிறுவனம் ஜீரோ கிராவிட்டியில் புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. அதுவும் வியாபார நோக்கத்திற்கான ஒரு விளம்பர படத்திற்கு இதுவரை அமெரிக்க விமானப்படை அனுமதி கொடுத்தது இல்லை.