ilakkiyainfo

ilakkiyainfo

ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு

ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு
June 09
00:50 2019

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனஹன் ஒரு கடிதம் மூலம் இந்த காலக்கெடுவை துருக்கி பாதுகாப்புத்துறை செயலர் ஹுலுஸி அகருக்கு விடுத்திருந்தார்.

அந்த கடித்ததில், அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் துருக்கியால் வைத்திருக்க முடியாது என்று பேட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டாளிகளான இந்த இருநாடுகளும், எஸ்-400 ஏவுகணை அமைப்புமுறை காரணமாக பல மாதங்களாக சிக்கலுக்குள் சிக்கியிருக்கின்றன.

ரஷ்யாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக அமெரிக்கா வாதிடுகிறது.

மேலும், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு முறைக்கு பதிலாக அமெரிக்காவின் பேட்ரியாட் போர்விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை வலியுறுத்துகிறது.

அதிகளவிலான தன்னிச்சையான பாதுகாப்பு கொள்கைகளை கொண்டுள்ள துருக்கி, அமெரிக்காவின் 100 எஃப்-35எஸ் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதன் எஃப்-35 போர் விமானத் திட்டத்தில் அதிகளவிலான முதலீடுகளை குவித்துள்ளது. அந்த விமானத்துக்கு தேவையான 937 உதிரி பாகங்களை துருக்கி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

இதனால் துருக்கி சந்திக்கக்கூடிய எதிர்விளைவுகள் என்ன?

பேட்ரிக் தனது கடித்ததில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புமுறை குறித்து பயிற்சி எடுப்பதற்கு துருக்கி அதிகாரிகள் சென்றிருப்பதாக வந்த தகவலை கேட்டு அமெரிக்கா மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“துருக்கி ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புமுறையை வாங்கினால் அமெரிக்காவின் எஃப்-35 விமானங்கள் துருக்கிக்கு கிடைக்காது,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முடிவை மாற்றிக் கொள்வதற்கு துருக்கிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

_105701995_rusmissilescrimgetty29nov18  ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு 105701995 rusmissilescrimgetty29nov18ரஷ்யாவின் எஸ்-400 அமைப்புமுறை


இந்த கடிதத்துடன் துருக்கி விமான படையினர் பங்குபெறுவதற்கான எஃப்-35 ரக விமானத்தின் விமான பயிற்சி திட்டத்தின் அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.

 

சரி ரஷ்யாவின் எஸ்-400 அமைப்புமுறை என்றால் என்ன?

எஸ்-400 டிரையம்ஃப் என்பது வான்வழி மூலம் தாக்க வரும் ஏவுகணையை தரை கட்டுப்பாட்டு வழியாக இடைமறித்து அதை வானிலே தகர்க்கும் உலகிலேயே மிகச் சிறந்த அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையாகும்.

இதன் தாக்கும் எல்லை 400 கி.மீ. ஒரு எஸ்-400 அமைப்புமுறையால் 80 இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்க முடியும்.

குறைவான உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்கள் முதல் வெவ்வேறு உயரங்களில் பறக்கும் போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் வரை எந்த வான் இலக்குகளையும் எஸ்-400 அமைப்பு முறையால் தாக்க முடியும் என்கிறது ரஷ்யா.

எஸ்-400 எப்படி வேலை செய்கிறது?

_86970152_s400_vehicles_624in.png  ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு 86970152 s400 vehicles 624in

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News