ilakkiyainfo

ilakkiyainfo

9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது

9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது
December 13
16:32 2019

 

9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட ஆலயம் ஒன்றின் பூசகர் உள்­ளிட்ட இரு­வ­ரது விளக்­க­ம­றி­ய­லையும் எதிர்­வரும் 20ஆம் திக­தி­வரை நீடித்து பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

அர்ச்­ச­கரின் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி என்.சிறி­காந்தா பிணை விண்­ணப்பம் செய்­த­போதும் பாதிக்­கப்­பட்ட மாண­வியின் நலன் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கன­க­ரட்னம் சுகாஷ், கடு­மை­யான ஆட்­சே­ப­னையை முன்­வைத்த நிலையில் சந்­தேக நபர்­களின் பிணை விண்­ணப்பம் நிரா­க­ரித்து விளக்­க­ம­றி­யலை நீதி­மன்றம் நீடித்­தது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாட­சா­லையில் குறித்த மாணவி கைத்­தொ­லை­பேசி வைத்­தி­ருப்­பதை ஆசி­ரியர் ஒருவர் கண்­ட­றிந்தார். இது­தொ­டர்பில் மாண­வி­யிடம் விசா­ரித்­த­போது, வல்­வெட்­டித்­துறை ஆலயம் ஒன்றின் பூசகர் அதனை வாங்கிக் கொடுத்­த­தா­கவும் அவர் தனக்குப் பிர­சாதம் தரு­வ­தற்­காக அழைப்­ப­தற்கு கைத்­தொ­லை­பே­சியைத் தாந்தார் எனவும் கூறி­யுள்ளார்.

dsadd 9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது 9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது dsadd e1576254708393மாண­வியின் தக­வலில் சந்­தேகம் கொண்ட ஆசி­ரியர், சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ருக்கு அறி­வித்தார். அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து உட­ன­டி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

பூசகர் தன்னை ஆலய மடப்­பள்­ளியில் வைத்து துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­ய­தா­கவும் தனக்கு அதி­க­ள­வான பணத்தை அவர் தந்­த­தா­கவும் மாணவி விசா­ர­ணையில் தெரி­வித்தார்.

மேலும் தனது உற­வினர் ஒரு­வரும் இவ்­வாறு தன்னை துன்­பு­றுத்­து­வ­தா­கவும் மாணவி தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன், பூச­கரால் வழங்­கப்­பட்ட பணத்தின் ஒரு­தொ­கை­யையும் மாணவி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

மாண­வியின் கைத்­தொ­லை­பே­சியின் சிம் அட்டை அர்ச்­ச­கரின் பெய­ரி­லேயே இருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயதான பூசகரும், சிறுமி குறிப்பிட்ட 50 வயதுடைய சிறுமியின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News