ilakkiyainfo

பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ‘சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்’

பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ‘சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்’
May 12
09:33 2019

சர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள், பிற ஐந்து ஆசிய நாடுகளில் நடக்‍கும் சம்பவங்களுடன் ஒத்துபோகின்றன.

இவ்விவகாரம் தொடர்பாக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த ஆண்டு இதே காரணங்களுக்‍காக சீன மக்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களின் நோக்கம் திருமண உறவுகளை வளர்ப்பது அல்ல என்றும், மாறாக சர்வதேச அளவிலான பாலியல் தொழிலே என்றும் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில், பிபிசி உருது நிருபர் சாகர் பலோச், சீன ஆணை திருமணம் செய்துகொண்ட ஃபைசாலாபாத்தை சேர்ந்த பெண்ணை சந்தித்தார். அந்த பெண் என்ன சொன்னார்? என்பதை அவரின் சொந்த வார்த்தைகளிலேயே அறிவோம்.

நான் ஃபைசாலாபாத்தை சேர்ந்தவள். எனக்‍கு 19 வயது. இந்த சம்பவம் நவம்பர் 2018ல் நடந்தது. என் உறவுக்‍காரப் பெண்ணின் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.

அவர் சீன ஆணை திருமணம் செய்து கொண்டு தற்போது சீனாவில் உள்ளார். திருமண நிகழ்ச்சிக்‍கு சென்றிருந்த என்மீது அவர்கள் ஆர்வம் காட்டினர். என் குடும்பத்தினரிடம் தொலைபேசி எண்ணை வாங்கி சென்றனர்.

பின்னர் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்கள் வீட்டிற்கு வந்தனர். மூன்று ஆண்கள் என்னைக் காண வந்தார்கள்.

என் குடும்பத்தின் முதல் கேள்வி மணமகன் கிறிஸ்தவனா? என்பது. அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அது மோசடி அல்ல என்று கூறினார்கள். ஆனால் எங்களுக்‍கு போதிய நேரம் கொடுக்‍கப்படவில்லை.

அடுத்த நாள், நான், லாகூரில் மருத்துவ பரிசோதனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டேன். மருத்துவ பரிசோதனை முடிந்து 2 நாட்களுக்‍கு பிறகு, திருமணத்திற்கு முறைப்படி முன்மொழிந்தனர். அவ்வளவு விரைவில் என்னை திருமணம் செய்து கொடுக்‍க, என் குடும்பத்தினர் விரும்பவில்லை.

_106905746_336aa31a-acc3-412d-8aeb-56a1fd167aa3ஆனால், சீன மக்களுடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான் பிரதிநிதிகள், எதுவாக இருந்தாலும், அந்த மாதத்துக்‍குள்ளாகவே நடக்‍க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஏனென்றால், சீன மக்‍கள், அந்த மாதமே நாடு திரும்ப வேண்டும் என்றும், சென்றுவிட்டால் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள் என்றும் கூறினர்.

எனவே, உடனடியாக திருமணம் நடந்தாக வேண்டும் என்று தெரிவித்தனர். அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்‍கொள்வதாகவும் கூறினர்.

என் குடும்பத்தினர் அதுபோன்ற ஏற்பாடுகள் வேண்டாம் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்கள், என் உறவுப்பெண்ணை சீன ஆண் திருமணம் செய்து கொண்டதையும், திருமண செலவுகள், மணப்பெண்ணின் ஆடை உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்‍கொண்டதையும் சுட்டிக்காட்டினர். உறவினர்களின் அனுபவத்தை பார்த்து என் குடும்பத்தினரும் ஒப்புக்‍கொண்டதால், நான் திருமணம் செய்துகொண்டேன்.

என் பயண ஆவணங்கள் தயாராகும் வரை, ஆண்கள், பெண்கள் என 7 பேர் தங்கியிருந்த வீட்டில், என்னை தங்க வைத்தார்கள்.

அவர்கள் லாகூரின் டிவைன் சாலையில் வீடு வாங்கினர். மொத்தம் மூன்று வீடுகள். அதில் இரண்டு வீடுகள் ஒரே தெருவிலும், மற்றொரு வீடு, இரண்டு தெரு தொலைவிலும் இருந்தது. அங்கிருந்த அனைவரும் சீனர்கள்.

என்னுடைய திருமணமே இறுதியாக நடைபெற்றிருந்தது. அதற்கு முன், 7 பெண்களின் திருமணம் முடிந்திருந்தது. எல்லா பெண்களும் கிறிஸ்தவர்கள்.

கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி நான் என் கணவரிடம் பேசி வந்தேன். சில நேரங்களில் மொழிபெயர்ப்பு துல்லியமாக இருக்கும், சில நேரங்களில் அது சரியாக இருக்காது. அவர்கள் ஆசிரியரையும் வைத்திருந்தனர்.

பெண்கள் அனைவரும் சீன மொழி கற்றுக்‍கொள்ள, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வகுப்புகள் நடத்தப்பட்டன.

சீன மக்களுடன் இருந்த பாகிஸ்தானிய பிரதிநிதி மிகவும் புத்திசாலி. அவரிடம் பெண்கள் ஒப்படைக்‍கப்பட்டனர். பெண்களிடம் அவர் பேசும் விதம் முரட்டுத்தனமாக இருந்தது.

அடிக்‍கடி அவர் அத்துமீறுவார். எந்தப்பெண்ணாவது, வீட்டிற்கு திரும்ப செல்வது பற்றி கேட்டால், அவர்கள் மீது பயங்கரமான குற்றங்களை சுமத்தி அச்சுறுத்துவார்.

நான் திருமணம் செய்து கொண்ட மணமகனை, மூன்று முறை மட்டுமே சந்தித்துள்ளேன். என்னை முதலில் பார்க்‍கவந்தபோது, பின்னர், திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்வின்போது, அதன்பிறகு திருமணம் நடந்த அன்று.

அந்த ஆணுக்‍கு 21 வயது. திருமணத்திற்கு பின்னர்தான், அவரின் ஒரு கை முடங்கி இருந்ததையும், அவர் கிறிஸ்தவர் அல்ல என்பதையும் தெரிந்துகொண்டேன்.

நான் அதனை பிரதிநிதிக்கு தெரியப்படுத்தியபோது, அவர் என்னை அச்சுறுத்தினார். திருமணத்திற்கு ஆன செலவுகளை திருப்பி தர வேண்டும் என்றும், நீங்கள் சீன மக்‍களை ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்படும் என்றும் மிரட்டினார்.

பின்னர் என் கைபேசியை எடுத்து சென்றுவிட்டார். எங்கள் அனைவரின் தொலைபேசிகளும் சரிபார்க்கப்படும். அனைத்து பெண்களின் தொலைபேசிகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.

_106905747_96b875b4-b3df-4292-a1bd-1351967aa973

நான் அங்கு தங்கி இருந்தபோது, சீனாவுக்கு திருமணம் செய்துகொண்டு சென்ற என் தோழிகளிடம் பேசினேன். அதில் ஒருத்தி, தனக்‍கு வெறும் சாதம் மட்டுமே அளிக்‍கப்படுவதாகவும், ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாள்.

கணவன் மாலையில் வீடு திரும்பும்போது நண்பர்களை அழைத்து வருவதாக தெரிவித்தாள். அவ்வளவுதான் கூறினாள். தொடர்ந்து அழுதாள். அதிலிருந்து அவளுக்‍கு என்ன நடந்துகொண்டிருக்‍கிறது என்பதை அறிந்துகொண்டேன்.

அப்போது என் அனைத்து பயண ஆவணங்களும் தயாராகிவிட்டன. விசாவை தவிர்த்து.

வீட்டிற்கு செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை. என் தாயின் உடல்நிலை சரியில்லை என்று கூறினேன். உடனே அவர்கள், தாயை இங்கே அழைத்து, சிகிச்சை அளிக்‍கலாம் என்று தெரிவித்தனர். நீ எங்கேயும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

நிறைய சிரமங்களுக்கு பிறகு, என் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடிந்தது. என் குடும்பத்தினர் என்னை அழைத்து சென்றனர். பின்னர் நான் திரும்பி வரவில்லை.

என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்‍கொள் என்று குடும்பத்தினர் கூறிவிட்டனர். அழகு நிலையத்தில் வேலை பார்க்‍கும் திறமை என்னிடம் உள்ளது; என்னால் அந்த பணியை செய்ய முடியும் என்று நம்பினேன்.

இனி நான் அச்சம் கொள்ளப்போவதில்லை. மற்ற பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இதைப்பற்றி தெரியாதவர்கள் திருமணம் செய்துக்‍கொள்ளக்கூடாது.

சீனர்கள் பஞ்சாபில் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பது உண்மையா?

_106905748_3c7368f9-8e4d-4cf6-89eb-db6773290517லாகூர் டிவைன் சாலை மற்றும் ஈடன் காடன் பகுதிகளில், வரிசையாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சீன மக்‍கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் மத்தியில், சீனாவில் இருந்து பாகிஸ்தானில் விசா நடைமுறை மூலம் குடியேறியவர்களும் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள்? நிறைய பேருக்‍கு தெரியாது.

மனித உரிமைகளுக்காக பணியாற்றும் நபர்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு முதல், சீன ஆண்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு சீனாவிற்கு அழைத்து செல்வதாக தெரிவிக்‍கின்றனர்.

லாகூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சலிம் இக்பால், இவை திருமணம் அல்ல என்றும், சர்வதேச அளவிலான பாலியல் தொழில் என்றும் கூறுகிறார்.

இதுவரை, காவல்துறை, FIA மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஆனால், ஒரு வருடம் கழித்து, இந்த சம்பவங்கள் முஸ்லிம் பெண்களுக்‍கு நடக்கும்போதுதான், நடவடிக்கை எடுக்‍கப்பட்டதாக தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு, சீன ஆண்கள் பற்றிய தகவல்கள் பத்திரிகைகள் மற்றும் பதாகைகள் மூலம் பரப்பப்பட்டதாக சலீம் கூறினார். சில சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் புரிந்து கொண்டு, தங்கள் மகள்களை அழைத்துக்‍ கொண்டதாகவும், ஆனால் பல சந்தர்ப்பங்களில், மோசமான வறுமை காரணமாக, மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் பெற்றுக்‍கொண்டு மகள்களுக்‍கு திருமணம் செய்துவைப்பதாகவும் தெரிவித்தார்.

சலீமின் கூற்றுப்படி, ஒரு வருடத்திற்குள் கிட்டத்தட்ட 700 திருமணங்கள், லாகூர், குஜரான்வாலா, ஃபைசாலாபாத், முல்தான் ஆகிய இடங்களில் நடந்துள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவப் பெண்கள்.

பஞ்சாபை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இதில் சிக்‍கியபோது, விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்பெண் சார்ந்த சமூகம் இப்பிரச்சனையை பெரிதாக்‍கியது.

‘என்ன நடக்கிறது என்று ஏஜென்சிகளுக்‍கு தெரியும்’

ஆசிரியராக பணியாற்றி வரும் இர்ஃபான் முஸ்தஃபா என்பவர் கடந்த நான்கு மாதங்களில், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் 10 திருமணங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

அவர் பிபிசியிடம் கூறிய போது, ‘நாங்கள் ஒவ்வொரு திருமணத்தையும் மிகுந்த கவனத்துடன் செய்து வருகிறோம். இந்த திருமணங்கள் எல்லாம் நீதிமன்றங்கள் மூலம், மணமகன், மணமகள் ஒப்புதலுடன் நடைபெறுகின்றன என்று தெரிவித்தார்.’

சீன ஆண்களுக்‍கு திருமணம் செய்து வைக்‍கப்படும் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக கூறப்படும் செய்தியை இர்ஃபான் மறுக்‍கிறார். இவை ஊடங்களால் பரப்பப்படும் வதந்தி என்றும், உண்மைக்‍கு புறம்பானவை என்றும் கூறுகிறார்.

ஒவ்வொரு திருமணத்திலும் இத்தகைய விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அவர் கூறினார். மனதாரா ஒத்துப்போகவில்லை என்றால் கணவன், மனைவி இடையே பிரச்சனைகள் வரும்.

ஆனால் திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டது என்று நீங்கள் சொல்ல முடியாது. மேலும், ‘பெண்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கடத்தப்படுவது சாத்தியமா? என்றும் கேள்வி எழுப்புகிறார். என்ன நடக்கிறது என்று ஏஜென்சிகளுக்‍கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

‘CPECல் பணியாற்றும் மணமகன்’

ஆனால் சமீப காலங்களில், லாகூர் – நதிராபாத், பட் சௌக், டிவைன் சாலை ஆகிய பகுதிகளிலிருந்து எட்டுப் பெண்கள் காவல் நிலையங்களில் புகார் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அதில் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், தனது சொந்த தாயும், திருமண ஏற்பாட்டளர் ஒருவரும், பணத்திற்காக, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அளிக்‍கப்பட்டுள்ள புகார் மனுக்‍களில், பெண் ஒருவர், தனது சீன கணவன், சித்திரவதை செய்வதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

சில பெண்கள் எழுதியுள்ள புகாரில், மணமகன் சீன பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தில் பணி புரிவாதகக்‍ கூறி திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால் சீனாவுக்‍கு சென்ற பிறகே, அந்த தகவல் பொய் என்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளனர்.
படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான வழக்குகளில், பாகிஸ்தானிலிருந்து பெண் ஒருவர் சீனாவிற்கு சென்றுவிட்டால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளிலும் ஒரேமாதிரி உத்தி பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை எழுத்தர் ஒருவர் தெரிவித்தார்.

வழக்கமாக, ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் மணமகள் குடும்பத்தை அணுகுவார்கள் என்றும், திருமணம் முதல், மணமகள் சீனா சென்றடையும் வரை அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

‘சில சந்தர்ப்பங்களில் திருமணம் வெற்றி பெறுவதாகவும், ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் பெண்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை’ என்றும் தெரிவித்தார்.

_106905750_2e504ad7-3ad5-4423-8a83-008e032f4c51பாகிஸ்தான்-சீனா நட்பு மற்றும் பொருளாதார பாதை (CPEC)

2013ம் ஆண்டில் உருவாக்‍கப்பட்டு, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீன-பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார திட்டம், நிறைய நம்பிக்‍கைகளையும், அதிக நிதியையும் கொண்டது.

பாகிஸ்தான்-சீனா இடையிலான நட்பு, பெரும்பாலும் CPEC மூலம் பெற்ற நன்மைகளின் அடிப்படையில் காணப்படுகிறது. அதனால்தான் இந்த சமீபத்திய சம்பவங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சருமான அஜஸ் ஆலம் அகஸ்டின் பிபிசியிடம் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், ‘இரண்டு மாதங்களுக்கு முன்னர், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில், பாகிஸ்தானிய பெண்ணை தன்னுடன் பலவந்தமாக அழைத்து சென்ற சீன ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.’

குருமார்களும், பஞ்சாபில் உள்ள தேவாலயங்களும் இந்த திருமணங்களில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார். ‘எனவேதான் தேவலாயங்கள் மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடத்தும் குருமார்கள் உரிமம் பெற்றிருக்‍க வேண்டும் என்று கட்டாயமாக்‍கி உள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக, பிரார்த்தனை கூட்டம் நடத்தும் நபர் திருமண ஏற்பாடுகளை செய்யமாட்டார். கட்டாய திருமணங்களை நிறுத்த வேண்டும் என்பதே இதன் முக்‍கிய நோக்‍கம்.’

_106905751_fcff5b8d-32c2-441c-a0b0-0b7b886e55adசர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, பாகிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள், மற்ற ஐந்து ஆசிய நாடுகளில் நடக்‍கும் சம்பவங்களுடன் ஒத்துபோகின்றன.

தற்போது சீனாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் எண்ணிக்‍கையில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. ஆண்களின் எண்ணிக்‍கை பெண்களை விட அதிகமாக உள்ளது. சீனாவில் 1979 முதல் 2015ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டம் இதற்கு மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த கொள்கை காரணமாக, பல குடும்பங்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்‍கு முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக, தற்போது சீன ஆண்கள், பிற நாட்டு பெண்களை திருமணம் செய்ய முனைப்பு காட்டுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு குழுக்‍கள், பெண்களை சீனாவுக்‍கு கடத்துகின்றன.

இது பற்றி, அஜாஸ் ஆலம் கூறிய போது, இதனை காதல் திருமணங்கள் என அழைக்‍க முடியாது என்றார். குறைந்தபட்சம், இந்த சம்பவங்கள் மூலம், யார் நண்பன், யார் சுய நலத்துக்காக மட்டுமே தேடலில் உள்ளார் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com