அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ மாநிலத்தில் பயணி ஒருவருடன் நைசாக பேசி அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட பஸ் டிரைவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகரில் பேருந்து ஒன்றில் டிரைவராக பணிபுரியும் ஒருவர் தனது பேருந்தில் பயணம் செய்யவந்த ஒரு பெண்ணுடன் காதல் வசனங்கள் பேசி அவரை மயக்கி அவருடன் பேருந்திலேயே பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணி நேரத்தில் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
பேருந்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரே ஒரு பெண் பயணி மட்டும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளார். பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது தீடிரென பேருந்தை நிறுத்திய டிரைவர் அந்த பெண்ணை தனது அருகில் உட்கார சொல்லி அவருடன் காதல் வசனங்களை பேசி, அவரை மயக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் யாவும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சிகளை பக்கத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு பயணி நேரிலும் பார்த்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில்தான் இந்த வழக்கு பதிவு செய்யபப்ட்டது.