தமிழகத்தில் மது கடைகள் திறப்பு – தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மனமுடைந்த மகள் தீக்குளித்தார். காப்பாற்ற சென்ற தாயும் படுகாயம் அடைந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது.
44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கைத்தட்டிம் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதுரை மாவட்டம் பைகாரா பகுதியில் டாஸ்டாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் அருகே கட்ட தொழிலாளியான சிவகுமரன் என்பவர் இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தை மது அருந்திவிட்டு வந்ததை கண்ட மகள் அச்சனா மனமுடைந்து தீக்குளித்தார். மகள் அச்சனாவை காப்பாற்றச் சென்ற தாய் பரமேஸ்வரியும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment