அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன், டிரம்ப் குறித்த பரபரப்பை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 8ம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது என சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹிலாரி தன்னை எதிர்த்து போட்டியிடும் டிரம்ப் குறித்து அதிரடி வீடியோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், ஈராக் மீதான படையெடுப்பிற்கும் டிரம்பிற்கும் உள்ள தொடர்பு, அணு ஆயுதம், ரஷ்யா உடனான நட்பு, பொது வெளியில் ஊனமுற்ற பத்திரக்கையாளரை பரிகாசம் செய்தது என டிரம்ப்பின் உண்மை முகத்தை பிரதிபலிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.