அரிய வகை இதயக் குறைபாடுடன் பிறந்த பெண் குழந்தையின் மருத்துவ செலவுக்காக அவரது பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர்.
Caitlin Veitz, Brian என்ற தம்பதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுடைய குழந்தையை பார்க்க ஆவலுடன் இருந்த அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. குழந்தையின் உள்ளுறுப்புகள் அனைத்தும் மார்ப்புக்கு வெளியே இருப்பதை பார்த்து திகைத்து போகினர்.
இதயம், கல்லீரல் மற்றும் குடல் ஆகியவை குழந்தையின் மார்ப்புக்கு வெளியே தெரியும் படி இருந்தது. இது போன்ற ஒரு குறைபாடு 1,000 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இது போன்ற சூழ்நிலையில் குறைபாடு உள்ள குழந்தை 95 சதவீதம் இறந்துவிடும் என்றும், குறைந்தது 3 நாட்கள் மட்டுமே உயிர் வாழமுடியும் என்று தெரிவித்தனர்.
ஆனால் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், Kieran Veitz என்ற அந்த பெண் குழந்தை 18 மாதங்கள் தன் பெற்றோருடன் வாழ்ந்துவிட்டது.
மேலும், இந்த குழந்தை நீண்ட காலம் வாழ இன்னும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் Kieranன் பெற்றோர் குழந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுக்காக பல்வேறு இடங்களில் நிதி திரட்டி வருகின்றனர்.