குருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
மாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத மகளும், வீதியில் நடத்து சென்றுகொண்டிருந்த போது, ஓட்டோ சாரதியொருவர், தான் ஓட்டோவில் அழைத்துச்சென்று வீ்ட்டில் விடுவதாகக் கூறி, அவர்களை அதில் ஏறச் சொல்லியுள்ளார்.
இதனை நம்பி குறித்த தாயும் பிள்ளையும் ஓட்டோவில் ஏறியுள்ளனர். இவர்களை, மீண்டும் வேன் ஒன்றில் பலவந்தமாக ஏற்றியுள்ள குழுவொன்று, வவுனியாவுக்குக் கடத்திச் சென்றுள்ளது.
இதன்போது குழந்தை தொடர்ச்சியாக அழுதமையால், பூந்தோட்டம் பகுதியில் தாயையும் பிள்ளையையும் இறக்கிவிட்டு, வேன் சென்றுள்ளது.