உயரமான ஒரு இடத்தில் இருந்து எலாஸ்டிக் கயிறு ஒன்றின் உதவியால் மேலே இருந்து குதிக்கும் ஒரு விளையாட்டிற்கு பெயர் bungee jump என்பது. ‘குஷி’ திரைப்படத்தில் விஜய் உயரமான ஒரு இடத்தில் இருந்து குதிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுபோன்ற ஒரு bungee jump விளையாட்டில் 95 வயது முதிய பெண் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
அவர் 500 அடி உயரத்தில் இருந்து குதித்து உலகிலேயே bungee jump விளையாடிய அதிக வயதான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பின்லாந்து நாட்டை சேர்ந்த Helsinki என்ற பகுதியை சேர்ந்த 95 வயது பெண் Brave Margit Tall என்பவர். பெயருக்கேற்றவாறு சிறுவயதில் இருந்தே மிகவும் துணிச்சலான காரியங்களை செய்வதில் வல்லவர்.
இவர் தனது வீடு அருகே உள்ள bungee jump விளையாடும் இடத்திற்கு அடிக்கடி சென்று அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கும் பழக்கமுடையவராக இருந்துள்ளார். ஆனால் தனது 95 வயதில் திடீரென அவருக்கு bungee jump செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசையை கணவரிடமும் குழந்தைகளிடம் அவர் கூறினார்.
எனவே ஒரு சிறந்த பயிற்சியாளர் துணையுடன் அவருடைய ஆசை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று Brave Margit Tall 500 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை பெற்றார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும், சமூக இணையதளங்கள் மூலமாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.