பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிகளை அச்சுறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து மேற்படி விமானம் அமெரிக்காவின் புளேரிரிடா மாநிலத்திலுள்ள ஜக்ஸன்விலே நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் எயார் மார்ஷல்ஸ் எனும் விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்நபரை கைது செய்தனர்.
34 வயதான ஒலிவர் சார்ள்ஸ், மெக்ஸிகோவில் வசிப்பவர். இவர் பிரித்தானிய பிரஜையாவார். இவர் அதிக மதுபோதையில் இருந்தார் என சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்னரே இவர் மதுபானமருந்த ஆரம்பித்திருந்ததாகவும், விமானம் புறப்பட்டவுடன் பயணி ஒருவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தினார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒலிவர் சார்ள்ஸ் குற்றவாளியாக காணப்பட்டால் 20 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.