1314 : ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1509 : எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
1571 : பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
1597 : டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.
1664 : அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் ஐரோப்பிய குடியேற்றம் ஆரம்பமானது.
1812 : ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியனின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.
1846: பிரான்ஸில் அடோல்ப் சாக்ஸ் என்பவர் சாக்ஸபோன் இசைக்கருவிக்கு காப்புரிமை பெற்றார்.
1849 : எலிஸபெத் பிளாக்வெல், அமெரிக்காவில் முதன் முதலாக மருத்துவப் பட்டம் பெற்ற பெண்ணானார்.
1859 : சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 : புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 : பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிராங்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1932 : சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 : 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில சிக்கோரா நகரில் வீழ்ந்தது.
1940 : பிரான்ஸும் இத்தாலியும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 : இரண்டாம் உலகப் போர்: நாஸி ஜேர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.
1948 : சோவியத் ஒன்றியம் ஜேர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பேர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 : மெக்ஸிகோவில் சே குவேரா, ஃபிடல் கெஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது
ய்யப்பட்டனர். குடிவரவு சட்டத்தை மீறியமை, வெளிநாட்டு அரசுக்கு எதிராக சதி செய்தமை முதலான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
1975 : அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் உயிரிழந்தனர்.
1981 : 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1983 : அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.
2002 : தான்சானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.
2004 : நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்பட்டது.
2007 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் மழை மற்றும் சூறாவளியில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2010: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜோன் ஐஸ்னர், பிரான்ஸின் நிக்கலஸ் மஹுட் ஆகியோருக்கிடையிலான போட்டி 11 மணித்தியாலங்கள், 5 நிமிடங்களுக்கு நீடித்தது. தொழிற்சார் டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்டநேரம் நீடித்த போட்டி இது. இதில் ஜோன் ஐஸ்னர் வென்றார்.
2013: இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார். அவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2018: சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான தடை உத்தியோகபூர்வமாக முடிக்கு வந்தது. அதுவரை வாகனம் செலுத்த பெண்களை அனுமதிக்காத உலகின் ஒரே நாடாக சவூதி அரேபியா இருந்தது.